/indian-express-tamil/media/media_files/2025/03/21/yzJvwGFnmVkzahWVLQSo.jpg)
அக்யூவெதர்.காம் இணையப்பக்கம் பகிர்ந்துள்ள தகவலின்படி, வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை காலை வரை மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது.
IPL 2025, KKR vs RCB Kolkata Weather Forecast Eden Gardens Stadium Pitch Report: 10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். 2025 டி20 தொடரின் 18-வது சீசன் நாளை சனிக்கிழமை (மார்ச் 22) முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டனில் நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதுகிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025 Kolkata Weather Update: Kolkata Knight Riders versus Royal Challengers Bengalure
இந்த நிலையில், கொல்கத்தா - பெங்களூரு அணிகள் மோதும் ஆட்டம் நடைபெறுமா? என்கிற சந்தேகம் எழுந்துள்ளது. ஏனெனில், போட்டி நடைபெறும் ஈடன் கார்டன் மைதானம் அமைந்திருக்கும் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை மிதமான ஆனால் தொடர் மழை பெய்துள்ளது. மேலும், போட்டி நாளான நாளையும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐபிஎல் 2025: கே.கே.ஆர் vs ஆர்.சி.பி - ஈடன் கார்டன் வெதர் ரிப்போர்ட்
அக்யூவெதர்.காம் இணையப்பக்கம் பகிர்ந்துள்ள தகவலின்படி, வெள்ளிக்கிழமை மாலை முதல் சனிக்கிழமை காலை வரை மழை பெய்யும் எனத் தெரிவித்துள்ளது. “காலையில் மேகமூட்டத்துடன் மிதமான மழை பெய்யும். பின்னர் மதியம் மேகங்கள் மற்றும் வெயில் வரக்கூடும். மேலும் மாலைக்குள் மழை பெய்யும் வாய்ப்பு 25 சதவீதமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.” என்று கூறியுள்ளது.
இதற்கிடையில், வங்காள விரிகுடாவில் சூறாவளி எதிர்ப்பு சுழற்சி காரணமாக மார்ச் 22 வரை கொல்கத்தாவின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும், பலத்த காற்று மணிக்கு 40-60 கிமீ வேகத்தில் வீசும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
"மார்ச் 20 மற்றும் 21 ஆகிய தேதிகளில் மேற்கு வங்கம் மற்றும் சிக்கிமில் இடியுடன் கூடிய மழை, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்" என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம்தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேரம் - மழை பெய்ய வாய்ப்பு
காலை 9 மணி - 75 %
மதியம் 12 மணி - 49 %
மாலை 7 மணி - 7%
இரவு 10 மணி - 7%
இரு அணிகளின் வீரர்கள் பட்டியல்:
கே.கே.ஆர்: அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), மனிஷ் பாண்டே, ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, ரிங்கு சிங், லுவ்னித் சிசோடியா, குயின்டன் டி காக், ரஹ்மானுல்லா குர்பாஸ், சுனில் நரைன், ஆண்ட்ரே ரஸ்ஸல், ராமன்தீப் சிங், அனுகுல் ராய், ரோவ்மன் பவல், வெங்கடேஷ் ஐயர், வக்ரபுன்ட் அலி, வக்ரபுன்ட் அலி உம்ரான் மாலிக், அன்ரிச் நார்ட்ஜே, ஸ்பென்சர் ஜான்சன்.
ஆர்.சி.பி: விராட் கோலி, ரஜத் படிதார் (கேப்டன்), ஸ்வஸ்திக் சிகாரா, தேவ்தத் பாடிக்கல், ஜிதேஷ் ஷர்மா, பிலிப் சால்ட், மனோஜ் பந்தேஜ், டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, லியாம் லிவிங்ஸ்டோன், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜேக்கப் பெத்தேல், ஸ்வப்னில் சிங், டேய் புவனேஷ்வர் குமார், எல் தார் சலாம், சுயாஷ் சர்மா, மோஹித் ரதீ, அபிநந்தன் சிங்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.