KKR Vs RCB: புதிய கேப்டன்கள்; பவர் ஹிட்டர்கள்... கொல்கத்தா - பெங்களூரு ஆடும் லெவனில் இழுபறி!

2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐ.பி.எல் போட்டி அதன் 18-வது வயதை எட்டியிருக்கும் சூழலில், பெங்களூரு அணி அதன் கோப்பைக்கான தேடலை தொடர்ந்துள்ளது.

2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐ.பி.எல் போட்டி அதன் 18-வது வயதை எட்டியிருக்கும் சூழலில், பெங்களூரு அணி அதன் கோப்பைக்கான தேடலை தொடர்ந்துள்ளது.

author-image
WebDesk
New Update
IPL 2025 KKR vs RCB Team Predicted Playing 11 Players List full squad captains Tamil News

ஐ.பி.எல் 2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்

KKR Vs RCB Team IPL 2025 Predicted Playing 11, Players List, Squad:10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். 2025 டி20 தொடரின் 18-வது சீசன் நாளை சனிக்கிழமை (மார்ச் 22) முதல் தொடங்கி நடைபெற உள்ளது. இரவு 7.30 மணிக்கு கொல்கத்தா ஈடன் கார்டனில்  நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியுடன் மோதுகிறது. 

Advertisment

2008 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்ட ஐ.பி.எல் போட்டி அதன் 18-வது வயதை எட்டியிருக்கும் சூழலில், பெங்களூரு  அணி அதன் கோப்பைக்கான தேடலை தொடர்ந்துள்ளது. 'ஈ சாலா கப் நம்தே' என்ற முழக்கத்தை எங்கும் உச்சரிக்க வேண்டாம் என்று விராட் கோலி ஏ.பி டிவில்லியர்ஸை எச்சரித்து இருக்கும் நிலையில், அந்த அணியின் ரசிகர்கள் தொடர்ந்து முழங்கிக் கொண்டு தான் இருக்கிறார்கள். அதற்கான விடிவுகாலம் இந்த ஆண்டிலாவது பிறக்குமா என்றும் எதிர்பார்த்து இருக்கிறார்கள். 

ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025, RCB Team Predicted Playing 11: Players List, full squad, captain for Royal Challengers Bangalore

பெங்களூரு  அணியைப் பொறுத்தவரையில், அனுபவ வீரர்களான புவனேஷ்வர் குமார் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோருடன் இணைந்து தங்களது வேகப்பந்து வீச்சு தாக்குதல்களை வலுப்படுத்தியுள்ளது. மேலும், தரமான மற்றும் கணிக்க முடியாத வீரர்களை மிடில்-ஆடரில் வைத்திருக்கிறது. கோலி, பில் சால்ட் மற்றும் கேப்டன் ரஜத் பட்டிதர் ஆகியோர் டாப்-ஆர்டரில் களமாடி அணிக்கு தேவையான ரன்களை குவிக்கலாம். 

Advertisment
Advertisements

ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025, KKR Team Predicted Playing 11: Players List, full squad, captain for Kolkata Knight Riders

மறுபுறம், நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, புதிய கேப்டன் அஜிங்க்யா ரஹானே தலைமையில் தங்கள் பட்டத்தைத் தக்க வைத்துக் கொள்ள நினைக்கும். அதனைக் கருத்தில் கொண்டு அந்த அணி மிகக் குறைந்த அளவில் மாற்றங்களைச் செய்துள்ளது. விக்கெட் கீப்பர் குயின்டன் டி காக் சேர்க்கப்பட்டதன் மூலம் டாப்-ஆர்டர் பலப்படுத்தப்பட்டுள்ளது, அதே நேரத்தில் ரஹானே மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஆகியோர் அதிரடி வீரர் சுனில் நரைனுடன் டாப்-ஆர்டரில் உள்ளனர். எனவே, இந்த இரு அணிகள் மோதும் ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது. 

ஐ.பி.எல் 2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளின் உத்தேச ஆடும் லெவன் வீரர்கள் பட்டியல்: 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு

1. விராட் கோலி
2. பில் சால்ட் 
3. ரஜத் படிதார் (கேப்டன்)
4. லியாம் லிவிங்ஸ்டோன்
5. க்ருனால் பாண்டியா
6. ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்)
7. டிம் டேவிட்
8. ரசிக் தர்/மனோஜ் பந்தகே
9. புவனேஷ்வர் குமார்
10. ஜோஷ் ஹேசில்வுட்
11. யாஷ் தயாள்
12. இம்பேக்ட் பிளேயர் - ஸ்வப்னில் சிங்/சுயாஷ் சர்மா.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: 

1. குயின்டன் டி காக் (விக்கெட் கீப்பர்)
2. சுனில் நரைன்
3. அஜிங்க்யா ரஹானே (கேப்டன்)
4.வெங்கடேஷ் ஐயர்
5. ரிங்கு சிங்
6. ஆண்ட்ரூ ரஸ்ஸல்
7.ரமந்தீப் சிங்
8. ஹர்ஷித் ராணா
9. வைபவ் அரோரா
10. ஸ்பென்சர் ஜான்சன்
11. வருண் சக்ரவர்த்தி
12. இம்பேக்ட் பிளேயர் - ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி/லுவ்னித் சிசோடியா. 

ஐ.பி.எல் 2025: ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகளின் வீரர்கள் பட்டியல்: 

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ரஜத் படிதார் (கேப்டன்), விராட் கோலி, யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட், பில் சால்ட், ஜிதேஷ் சர்மா, லியாம் லிவிங்ஸ்டோன், ரசிக் தார், சுயாஷ் ஷர்மா, க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், நுவான் துஷாரா, எல்.டி.பி , அபிநந்தன் சிங், மோஹித் ரதீ.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ்: அஜிங்க்யா ரஹானே (கேப்டன்), ரின்கு சிங், குயின்டன் டி காக், ரஹ்மானுல்லா குர்பாஸ், ஆங்க்ரிஷ் ரகுவன்ஷி, வெங்கடேஷ் ஐயர், ராமன்தீப் சிங், ஆண்ட்ரே ரசல், அன்ரிச் நார்ட்ஜே, ஹர்ஷித் ராணா, சுனில் நரைன், வருண் சக்கரவர்த்தி, வைபவ் பன்க்மன் அரோரா, ஸ்பி பன்க்மன் அரோரா, மன்விஷ்ர் அரோரா ஜான்சன், லுவ்னித் சிசோடியா, அனுகுல் ராய், மொயின் அலி, சேத்தன் சகாரியா.

Royal Challengers Bangalore Kolkata Knight Riders Ipl

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: