New Update
/indian-express-tamil/media/media_files/2025/04/04/RiclhHJpAzyEurkFTvoT.jpg)
2025 ஐ.பி.எல். தொடர் துவங்கியது முதல் மீம்ஸ்களும் களைகட்டி வருகின்றன. நேற்று நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகளுக்கு இடையேயான போட்டியை வைத்து பல்வேறு மீம்ஸ்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 17 வயதான ஆயுஷ் மாத்ரே என்ற இளம் வீரரை தங்களுடன் பயிற்சி செய்ய அழைத்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவரை அணியில் சேர்க்கவில்லை என்றாலும், அவரை பரிசோதனை முயற்சியாக தங்களுடன் பயிற்சி செய்ய அழைத்து இருப்பதாக சி.எஸ்.கே. அணி விளக்கம் அளித்துள்ளது.
அதை வைத்து சி.எஸ்.கே. அணியில் இருக்கும் மற்ற இளம் வீரர்களான ஆண்ட்ரே சித்தார்த், வன்ஷ் பேடி, ஷேக் ரஷீத் மற்றும் ராமகிருஷ்ணா கோஷ் ஆகியோர் "எங்களுக்கே வாய்ப்பு இல்லை, இவனுக்கு வாய்ப்பா?" என்று கேட்பது போல ஒரு மீம் வெளியிட்டுள்ளனர்.
அடுத்து, நேற்று நடந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் டிராவிஸ் ஹெட் 4 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அவர் இதற்கு முன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான முந்தைய 2 போட்டிகளிலும் ரன்கள் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்திருந்தார். இதை எடுத்து, "புலிப்பாண்டி பயங்கரமானவன்தான், ஆனா குழந்தைகளுக்கு கிடையாது" என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிராக மட்டும் அவர் விளையாட மாட்டார் என்பதை வைத்து கிண்டல் செய்துள்ளனர்.
சீனா தானா படத்தில் ஒருவரின் தலையில் இருந்து கையை எடுத்தால், அந்த நபர் கழுத்தை கடிக்கும் வினோத பிரச்சனை இருக்கும் போது, தேவையில்லாமல் சென்று வாக்குவாதம் செய்து வடிவேலு சிக்கலில் மாட்டிக் கொள்வார். அப்போது அதற்கு முன்பாக சிக்கியவர், "அண்ணே.. ரொம்ப நன்றி.. 2 நாளா மாட்டிக்கிட்டு இருந்தேனே" என்று சொல்வார். அப்படி வினோத நோயால் பாதிக்கப்பட்டவராக வெங்கடேஷ் ஐயரையும், இத்தனை நாட்களாக மாட்டி கொண்டவராக மும்பை அணியையும், புதிதாக மாட்டிக் கொண்டவராக ஐதராபாத் அணியையும் மாற்றி, "வந்து காப்பாத்துனதுக்கு ரொம்ப நன்றி அண்ணே" என்று சொல்வதாக மீம் உருவாக்கப்பட்டுள்ளது.
2025 ஐ.பி.எல். தொடரில் பேட் கம்மின்ஸ் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 300 ரன்கள் அடிக்கும், ஒவ்வொரு போட்டியிலும் 200 ரன்களை எட்டும் என்றெல்லாம் பில்டப் கொடுக்கப்பட்டு வந்த நிலையில், நேற்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்ணயித்த 201 ரன்கள் என்ற இலக்கை நோக்கி ஆடியபோது 120 ரன்களுக்குள் சுருண்டது அந்த அணி. முதல் 3 பேட்ஸ்மேன்களான டிராவிஸ் ஹெட் 4 ரன்களிலும், இஷான் கிஷன் மற்றும் அபிஷேக் ஷர்மா தலா 2 ரன்களிலும் ஆட்டம் இழந்தனர். இதை சுட்டிக்காட்டி, சிவா மனசுல சக்தி திரைப்படத்தில் வரும் நகைச்சுவையை வைத்து "எனக்கு சிரிப்பு வரல, கம்மின்ஸ்" என்று கிண்டல் செய்யும் வகையில் மீம்ஸ் வெளியிட்டுள்ளனர்.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் இடம்பெற்று இருக்கும் இஷான் கிஷன் முதல் போட்டியில் 106 ரன்கள் அடித்தார். ஆனால், அதற்கு அடுத்த மூன்று போட்டிகளில் மொத்தமே 4 ரன்கள் தான் எடுத்திருக்கிறார். இதை வைத்து, "முதல் மேட்சுக்கு பிறகு இந்த வண்டி ஓடாது" என வடிவேலு ஆட்டோ ஓட்டுவதை வைத்து கிண்டல் செய்துள்ளனர்.
சிவா மனசுல சக்தி படத்தில் சந்தானத்தை பார்த்து ஜீவா, "நீ பகல்ல ஸ்வெட்டர் போடும் போதே தெரியும்.. பெருசா பல்ப் வாங்க போறனு" என்று சொல்வார். அதில் வரும் சந்தானத்தை ஐதராபாத் அணியாகவும், ரசிகர்களாக ஜீவாவையும் மாற்றி, "நீ டாஸ் வின் பண்ணி பவுலிங்னு சொல்லும் போதே தெரியும்.. பெரிய பல்பா வாங்க போறனு" என்று மீம் உருவாக்கப்பட்டுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.