10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். 2025 டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் நாளை வெள்ளிக்கிழமை (மார்ச்-28) சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் 8-வது லீக் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோத உள்ளன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் தொடக்க ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தியது. அதே உத்வேகத்தில் பெங்களூரு அணியை எதிர்கொள்ளும். இந்நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளரான இலங்கையின் மதீஷா பதிரானா காயம் காரணமாக மும்பைக்கு எதிரான தொடக்கப் போட்டியில் ஆடாவில்லை. தற்போது அவர் காயத்தில் இருந்து மீண்டு வருவதாகவும், அதனால், நாளை பெங்களூரு அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் ஆடமாட்டார் சி.எஸ்.கே அணியின் தலைமை பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக ஸ்டீபன் பிளெமிங் பேசுகையில், "அவர் குணமடைந்து வருகிறார்," என்று கூறினார். அவரது காயம் குறித்த விவரங்கள் இன்னும் தெரியவில்லை என்றாலும், மும்பைக்கு எதிரான சென்னையின் போட்டியின் போது சுரேஷ் ரெய்னா அதிகாரப்பூர்வ ஒளிபரப்பாளர்களிடம் மதீஷா பதிரானா காயம் அடைந்துள்ளதாகக் குறிப்பிட்டார்.
கடந்த சீசனில் சென்னை அணிக்காக பதிரானா சிறப்பாக விளையாடினார், இதன்பின்னர் 2024 ஐபிஎல் தொடரின் நடுப்பகுதியில் தொடை தசைநார் காயம் காரணமாக அவர் வெளியேறினார். இருப்பினும், அந்த அணி அவர் மீது நம்பிக்கை வைத்து கடந்த ஆண்டு ஐ.பி.எல் மெகா ஏலத்திற்கு முன்பு அவரை தக்க வைத்துக் கொண்டது.
மும்பைக்கு எதிரான போட்டியில் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் நாதன் எல்லிஸுடன் நூர் அகமது, ரவீந்திர ஜடேஜா மற்றும் ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகிய சுழற்பந்து வீச்சாளர்களுடன் களமிறங்கினார். கலீல் அகமது இந்திய வேகப்பந்து வீச்சாளர் விருப்பமாக இருந்தார், அதே நேரத்தில் ஆல்ரவுண்டராக சாம் கரன் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை சூப்பர் கிங்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - இரு அணி வீரர்கள் பட்டியல்:
சென்னை சூப்பர் கிங்ஸ்: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), எம்.எஸ். தோனி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, மதீஷா பத்திரனா, நூர் அகமது, ரவிச்சந்திரன் அஷ்வின், டெவோன் கான்வே, சையத் கலீல் அகமது, ரச்சின் ரவீந்திரா, ராகுல் திரிபாதி, விஜய் சங்கர், சாம் குர்ரன், ஷேக் ரஷித், அன்ஷுல் தீபக் கம்புடோ, அன்ஷுல் தீபக் கம்புடோஜ் குர்ஜன்பிரீத் சிங், நாதன் எல்லிஸ், ஜேமி ஓவர்டன், கமலேஷ் நாகர்கோடி, ராமகிருஷ்ணன் கோஷ், ஷ்ரேயாஸ் கோபால், வன்ஷ் பேடி, ஆண்ட்ரே சித்தார்த்.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு: ரஜத் படிதார் (கேப்டன்), விராட் கோஹ்லி, யாஷ் தயாள், ஜோஷ் ஹேசில்வுட், பில் சால்ட், ஜிதேஷ் ஷர்மா, லியாம் லிவிங்ஸ்டோன், ரசிக் சலாம், சுயாஷ் சர்மா, க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், ஸ்வப்னில் சிங், டிம் டேவிட், ரொமாரியோ ஷெப்பர்ட், ஜாப் துஸ்தாரா, நுவாந்தகே, நுவாந்தகேட் படிக்கல், ஸ்வஸ்திக் சிகாரா, லுங்கி என்கிடி, அபிநந்தன் சிங், மோஹித் ரதி.