குஜராத்திடம் அதிர்ச்சி தோல்வி... மும்பைக்கு பிளே-ஆஃப்க்கு செல்ல இருக்கும் வாய்ப்புகள் என்ன?

மும்பை அணி தற்போது 12 போட்டிகளில் ஆடி 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு இன்னும் அவர்களது கையில் இருக்கிறது. அடுத்த இரண்டு போட்டிகளில் வென்றால் பிளே-ஆஃப்க்கு செல்வது உறுதி செய்யப்படும்.

மும்பை அணி தற்போது 12 போட்டிகளில் ஆடி 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு இன்னும் அவர்களது கையில் இருக்கிறது. அடுத்த இரண்டு போட்டிகளில் வென்றால் பிளே-ஆஃப்க்கு செல்வது உறுதி செய்யப்படும்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IPL 2025 playoffs qualification scenarios Can Mi top table despite losing to GT Tamil News

மும்பை அணி மீதமுள்ள இரண்டு போட்டியையும் இழந்தால், அவர்கள் 14 புள்ளிகளுடன் முடிப்பார்கள். அதனால், அவர்களால் பிளே-ஆஃப்க்கு செல்ல முடியாது.

10 அணிகள் பங்கேற்றுள்ள இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல். 2025) டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 ஆம் தேதி முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்த தொடரில் செவ்வாய்க்கிழமை இரவு 7:30 மணிக்கு மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் நடைபெறும் 56-வது லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் - குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதின.  

Advertisment

மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் ஆடிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது. அதிகபட்சமாக  வில் ஜாக்ஸ் 53 ரன்களும், சூர்யகுமார் யாதவ் 35 ரன்களும் எடுத்தனர். குஜராத் அணி தரப்பில் சாய் கிஷோர் 2 விக்கெட்டையும், அர்ஷத் கான், ஜெரால்டு கோட்ஸி, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ரஷித் கான் தலா ஒரு விக்கெட்டையும் வீழ்தினர்.  

தொடர்ந்து, 156 ரன்கள் கொண்ட வெற்றி இலக்கை குஜராத் அணி துரத்தியது. ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட்- சுப்மன் கில் களத்தில் இருக்க, 14 ஓவர்கள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு குஜராத் 107 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை குறுக்கிட்டது. இதனால் போட்டி நிறுத்தப்பட்டது. இதையடுத்து மழை நின்ற உடன் டக் ஒர்த் லூயிஸ் முறைப்படி 19 ஓவரில் 147 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. 

அதாவது, குஜராத் அணியின் வெற்றிக்கு 36 பந்துகளில் 49 ரன்கள் தேவைப்பட்டது.  இறுதியில் 19-வது ஓவரில் 7 விக்கெட்டுகளை இழந்த குஜராத் 147 ரன்கள் எடுத்து மும்பையை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி திரில் வெற்றி பெற்றது. குஜராத் அணி தரப்பில் அதிகபட்சமாக கேப்டன் கில் 43 ரன்கள் எடுத்து, ஆட்டநாயகன் விருதை வென்றார்.  

Advertisment
Advertisements

இந்நிலையில், மும்பைக்கு எதிரான வெற்றியின் மூலம் குஜராத் (+0.793) 16 புள்ளிகளுடன் புள்ளிகள் பட்டியலில் முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளது.  அதே 16 புள்ளிகளுடன் ஆர்.சி.பி (+0.482) 2-வது இடத்தில் உள்ளது. 3-வது இடத்தில் இருந்த மும்பை (+1.156) இப்போது  4-வது இடத்துக்கு தள்ளப்பட்டுள்ளது. இது அந்த அணி பிளே-ஆஃப்க்குள் நுழைவதில் சற்று சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.  

மும்பை அணி தற்போது 12 போட்டிகளில் ஆடி 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளது. அந்த அணியின் பிளே-ஆஃப் வாய்ப்பு இன்னும் அவர்களது கையில் இருக்கிறது. அதன்படி, மும்பை அணி அடுத்த இரண்டு போட்டிகளில் வென்றால் பிளே-ஆஃப்க்கு செல்வது உறுதி செய்யப்படும்.

இருப்பினும், அவர்கள் ஒரு போட்டியில் தோற்றால் கூட பிளே-ஆஃப் வாய்ப்பு சிக்கலாகிவிடும். இரண்டு போட்டிகளிலும் தோற்றால் மும்பை இந்தியன்ஸ் அணி தகுதி பெற முடியாது. ஏனெனில், மும்பை அணி மீதமுள்ள 2 போட்டிகளில் பிளே-ஆஃப் ரேஸில் இருக்கும் மற்ற இரண்டு அணிகளுடன் (பஞ்சாப் மற்றும் டெல்லி) மோதுகிறது. அதனால், இந்தப் போட்டிகளில் மும்பை தோல்வி கண்டால், அவர்களை மற்ற அணிகள் முந்திச் செல்வார்கள். 

தற்போது மும்பை அணி பிளே-ஆஃப்க்கு செல்ல இருக்கும் வாய்ப்புகள் குறித்து இங்குப் பார்க்கலாம். 

1) மும்பை அணிக்கு மீதமுள்ள 2 போட்டிகளில் வென்றால் என்ன நடக்கும்? 

மே 11 - தர்மசாலா - பஞ்சாப் கிங்ஸ் 
மே 15 - மும்பை - டெல்லி கேபிடல்ஸ் 

மும்பை அணி இந்த 2 போட்டிகளையும் வென்றால் 18 புள்ளிகளுடன் முடிக்கும். அப்படி நடந்தால், மும்பை முதல் இரண்டு இடங்களுக்குள் வரலாம். அதற்கு 16 புள்ளிகளுடன் உள்ள குஜராத் அணி அடுத்த 3 போட்டிகளில் குறைந்தபட்சம் 1 போட்டியில் தோல்வியடைந்து 18 அல்லது அதற்கும் குறைவான புள்ளிகளுடன் முடிக்க வேண்டும்

இதேபோல், 16 புள்ளிகளுடன் உள்ள ஆர்.சி.பி அணி அடுத்த 3 போட்டிகளில் குறைந்தபட்சம் 1 போட்டியில் தோல்வியடைந்து 18 அல்லது அதற்கும் குறைவான புள்ளிகளுடன் முடிக்க வேண்டும். 15 புள்ளிகளுடன் உள்ள பஞ்சாப் அணி  மும்பை அணிக்கு எதிரான ஆட்டத்தைத் தவிர குறைந்தது 1 போட்டியில் தோல்வியடைந்திருக்க வேண்டும். அப்படி நடந்தால், அவர்களால் 17 புள்ளிகளுக்கு மேல் பெற முடியாது

13 புள்ளிகளுடன் டெல்லி அணி அதிகபட்சமாக 19 புள்ளிகளைப் பெறலாம், ஆனால், மும்பை அணியை டெல்லியை வீழ்த்தினால், அவர்களால் அதிகபட்சமாக 17 புள்ளிகளை மட்டுமே பெற முடியும்.  எனவே 18 புள்ளிகளுடன், ஆர்.சி.பி அணி மற்றும் குஜராத் அணி இரண்டும் 20 புள்ளிகளை எட்டவில்லை என்றால், பஞ்சாப் அணி மீதமுள்ள 3 போட்டிகளிலும் வெற்றி பெறவில்லை என்றால் மும்பை அணி முதல் 2 இடங்களைப் பிடிக்க முடியும்.

2) மும்பை அணி ஒரு போட்டியில் வெற்றி மற்றும் ஒரு போட்டியில் தோல்வியடைந்தால் என்ன நடக்கும்?

பஞ்சாப் மற்றும் டெல்லி அணிக்கு எதிரான போட்டிகளில் ஒன்றில் மட்டும் மும்பை வென்றால், அந்த அணி 16 புள்ளிகளுடன் முடிக்கும். அவர்களின் நெட் ரன் ரேட் இன்னும் வலுவாகவே இருக்கும். அதேநேரத்தில், குஜராத் மற்றும் ஆர்.சி.பி அணிகள் அவர்களின் மீதமுள்ள போட்டிகளில் வெல்லுவதன் மூலம் 16 புள்ளிகளுக்கு மேல் எடுக்கலாம். அதனால், அவர்கள் மும்பை முந்திச் செல்லலாம். 

15 புள்ளிகளுடன் இருக்கும் பஞ்சாப் அணி 3 போட்டிகளையும் வென்றால் 21 புள்ளிகளை எட்டலாம். ஒருவேளை 17 புள்ளிகளுடன் முடித்து, டெல்லியை முந்தினால் கூட மும்பை அணியால் இன்னும் தகுதி பெற முடியும். 13 புள்ளிகளுடன் இருக்கும் டெல்லி அணி மும்பை அணியிடம் தோற்றாலும் 17 புள்ளிகளுக்கு மேல் செல்லலாம். எனவே, டெல்லி அணி அதன் மீதமுள்ள போட்டியில் தோல்வியடைய வேண்டும் என எதிர்பார்ப்பார்கள். 

இதேபோல், 11 புள்ளிகளுடன் உள்ள கொல்கத்தா அணி அதிகபட்சமாக 17 புள்ளிகளை எட்டலாம். ஒருவேளை அவர்கள் 3 போட்டிகளில் ஒன்றில் தோற்றால் கூட மும்பைக்கு வாய்ப்பு கிடைக்கும். 10 புள்ளிகளுடன் உள்ள லக்னோ அணி 16 புள்ளிகளுக்கு மேல் செல்லலாம். ஆனால் அவர்களின் நெட் ரன்ரேட் அணி மைனஸ் 0 புள்ளி 469 என பலவீனமாக உள்ளது. அதனால், அவர்களுக்கு பெரிய அளவில் வாய்ப்பு இல்லை. 

3) மும்பை 2 போட்டியிலும் தோற்றால் என்ன நடக்கும்? 
 
மும்பை அணி இரண்டு போட்டியையும் இழந்தால், அவர்கள் 14 புள்ளிகளுடன் முடிப்பார்கள். அதனால், அவர்களால் பிளே-ஆஃப்க்கு செல்ல முடியாது. 

Mumbai Indians Ipl

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: