Advertisment

IPL 2025 Retention: மெகா ஏலத்திற்கு திரும்பும் ரிஷப், ராகுல் ஷ்ரேயாஸ்... ரிலீஸ் செய்யப்பட்ட டாப் இந்திய வீரர்கள்!

ரிஷப் பண்ட் இல்லாத நிலையில், 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற ஷ்ரேயாஸ் ஐயரை மீண்டும் அணிக்குள் கொண்டு வருவதற்கு டெல்லி அணி ஆர்வமாக உள்ளது.

author-image
WebDesk
New Update
IPL 2025 Retention Top released Indian players Rishabh Pant KL Rahul Shreyas Iyer return to Mega Auction tamil news

இந்திய விக்கெட் கீப்பர்களான ரிஷப் பண்ட் மற்றும் கே.எல்.ராகுல் மற்றும் ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோர் ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்பாக ரிலீஸ் செய்யப்பட்டுள்ளனர்.

10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் இந்தாண்டு நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மெகா ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு ஆணியும் தக்கவைக்கும் வீரர்களின் பட்டியலை இன்று (அக்.31-ந்தேதி) மாலைக்குள் ஐ.பி.எல். நிர்வாகத்திடம் சமர்ப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

Advertisment

அதன்படி, தொடரில் களமாடும் 10 அணிகளும் தாங்கள் தக்கவைத்துள்ள வீரர்களின் பட்டியலை வெளியிட்டு இருக்கின்றன. இதில், குறிப்பிடத்தக்க வெளியேற்றங்களாக இந்திய விக்கெட் கீப்பர்களான ரிஷப் பண்ட் மற்றும் கே.எல்.ராகுல் ஆகியோர் உள்ளனர். இதேபோல், இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை மூன்றாவது ஐ.பி.எல் பட்டத்திற்கு அழைத்துச் சென்ற ஷ்ரேயாஸ் ஐயரும் வெளியேற்றப்பட்டு ஏலத்தில் களமிறங்க உள்ளார். 

டெல்லி கேபிடல்ஸ் அணிக்காக 100-க்கும் மேற்பட்ட ஐ.பி.எல் போட்டிகளில் களமாடிய ரிஷப் பண்ட், 2016 ஐ.பி.எல்  ஏலத்தில் டெல்லி அணியால் ரூ 1.9 கோடிக்கு வாங்கப்பட்டார், அன்றிலிருந்து அந்த அணி நிர்வாகத்தால் அவர் தக்கவைக்கப்பட்டு வந்தார். 

டெல்லி அணிக்காக 111 போட்டிகளில் விளையாடி ஒரு சதம் மற்றும் 18 அரை சதங்களுடன் 3284 ரன்களுக்கு மேல் அடித்திருக்கிறார். துரதிர்ஷ்டவசமான கார் விபத்து காரணமாக 2023 ஆம் ஆண்டு முழுவதையும் தவறவிட்ட போதிலும், பண்ட் டெல்லி கேபிட்டல்ஸால் தக்கவைக்கப்பட்டார். 

ஐ.பி.எல் 2024 தொடரில் 446 ரன்கள் எடுத்த பண்ட், தனது தலைமையிலான அணியை பிளேஆஃப்க்கு அழைத்துச் செல்ல முடியவில்லை. பண்ட் இல்லாத நிலையில், 2020 ஆம் ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு அழைத்துச் சென்ற  ஷ்ரேயாஸ் ஐயரை மீண்டும் அணிக்குள் கொண்டு வருவதற்கு டெல்லி அணி ஆர்வமாக உள்ளது.

2022 முதல் மூன்று சீசன்களாக லக்னோ சூப்பர் ஜெயன்ட் அணிக்கு தலைமை தாங்கிய கே.எல் ராகுல் ஏலத்தில் இறங்குகிறார். குறிப்பாக, அவர் 2018 ஆம் ஆண்டுக்கு பிறகு முதல்முறையாக ஐ.பி.எல் ஏலத்திற்கு ராகுல் திரும்புகிறார். அப்போது நடந்த ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை ரூ 11 கோடிக்கு வசப்படுத்தியது. ராகுல் பின்னர் 2022 இல் ஐபிஎல் மெகா ஏலத்தில் நுழைவதற்கு முன்பு, லக்னோ அணிக்கான முதல் மூன்று தக்கவைக்கப்பட்ட வீரர்களில் ஒருவரானார். அந்த அணிக்காக மூன்று சீசன்களில், ராகுல் 1400 ரன்களுக்கு மேல் அடித்துள்ளார். மேலும், அந்த அணியை இரண்டு முறை பிளேஆஃப்க்கு வழிநடத்தினார். 

பண்ட்-டுக்கு குறிவைக்கும் சி.எஸ்.கே - ராகுலை வசப்படுத்த நினைக்கும் ஆர்.சி.பி 

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, ரிஷப் பண்டை எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்திற்கு அழைத்து வருவதில் ஆர்வமாக உள்ளதை இந்தியன் எக்ஸ்பிரஸ் புரிந்துகொள்கிறது. அதற்கேற்ப அவர்கள் தக்கவைத்துக்கொள்ளும் உத்தியில் செயல்பட்டு வருகிறார்கள். 

ராகுலைப் பொறுத்தவரை, அவர் எங்கு இறங்குகிறார் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும். அவரது ஸ்ட்ரைக்-ரேட் கேள்விக்குறியாக இருந்தாலும், அவர் பலருக்கும் ஆர்வமுள்ள வீரராக இருக்கிறார். உள்ளூர் முகம் தேவைப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தேவைப்படுவதால் அவரை திரும்ப வாங்கலாம் என்று அறிகுறிகள் உள்ளன. மேலே ஒரு விருப்பமாக இருப்பதைத் தவிர, ராகுல் மிடில் ஆர்டரிலும் பேட் செய்ய முடியும்.

ஐ.பி.எல் 2025: மெகா ஏலத்தில் வெளியேற்றப்பட்ட சிறந்த இந்திய வீரர்கள்: 

மும்பை இந்தியன்ஸ் - இஷான் கிஷன், பியூஷ் சாவ்லா,

டெல்லி தலைநகரங்கள் - ரிஷப் பந்த், பிரித்வி ஷா, கலீல் அகமது, முகேஷ் குமார், இஷாந்த் சர்மா.

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் – கேஎல் ராகுல், தேவ்தத் படிக்கல், தீபக் ஹூடா, க்ருனால் பாண்டியா, சிவம் மாவி.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ஷ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, கே.எஸ்.பாரத், நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர்.

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - முகமது சிராஜ், ஆகாஷ் தீப்

பஞ்சாப் கிங்ஸ் - அர்ஷ்தீப் சிங், ஜிதேஷ் சர்மா, ராகுல் சாஹர்,

ராஜஸ்தான் ராயல்ஸ் - ஆர் அஸ்வின், யுஸ்வேந்திர சாஹல், அவேஷ் கான், பிரசித் கிருஷ்ணா.

சென்னை சூப்பர் கிங்ஸ் - தீபக் சாஹர், அஜிங்க்யா ரஹானே, ஷர்துல் தாக்கூர்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் - புவனேஷ்வர் குமார், அப்துல் சமத், மயங்க் அகர்வால், ராகுல் திரிபாதி, வாஷிங்டன் சுந்தர், உம்ரான் மாலிக், டி நடராஜன்.

குஜராத் டைட்டன்ஸ் - முகமது ஷமி, விருத்திமான் சாஹா, உமேஷ் யாதவ்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Ipl Ipl Cricket Ipl Auction
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment