10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். டி20 தொடரின் 18-வது சீசன் வருகிற மார்ச் 22 ஆம் தேதி தொடங்கும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் கொல்கத்தா ஈடன் கார்டனில் இரவு 7.30 மணிக்கு நடக்கும் தொடக்க ஆட்டத்தில் நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, பெங்களூரு ராயல் சேலஞ்சர்சை எதிர்கொள்கிறது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025 Schedule Live Updates: Royal Challengers Bengaluru to play Kolkata Knight Riders in opener
இந்த தொடரில் முன்னாள் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது முதலாவது ஆட்டத்தில் மார்ச் 23 ஆம் தேதி சேப்பாக்கத்தில் மும்பை இந்தியன்ஸ் உடன் பலப்பரீட்சை நடத்துகிறது. குவாலிபயர் 1 மே 20-ம் தேதியும், எலிமினேட்டர் மே 21-ம் தேதியும் ஐதராபாத்தில் நடைபெற உள்ளன. குவாலிபயர் 2 மே 23-ம் தேதியும் இறுதிப்போட்டி மே 25-ம் தேதியும் கொல்கத்தாவில் நடைபெற உள்ளன. மொத்தம் 74 ஆட்டங்கள் 13 மைதானங்களில் நடைபெற உள்ளன.
நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இந்தத் தொடரில் 3 முறை கோப்பை வென்றுள்ளது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் தலா 5 முறை சாம்பியன் பட்டத்தை வாகை சூடியுள்ளனர்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத், டெக்கான் சார்ஜர்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா ஒரு முறை கோப்பை வென்றுள்ளன. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் இன்னும் ஒருமுறை கூட கோப்பையை வெல்லவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
/indian-express-tamil/media/post_attachments/1bcb08d9-e77.jpg)
/indian-express-tamil/media/post_attachments/21103f5e-a2b.jpg)