/indian-express-tamil/media/media_files/2025/03/27/0bQyrCe72QZ59XzRiejQ.jpg)
சன்ரைசர்ஸ் ஐதராபாத் vs லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், 7வது லீக் போட்டி - லைவ் கிரிக்கெட் ஸ்கோர், ஐதராபாத்.
10 அணிகள் பங்கேற்கும் ஐ.பி.எல். 2025 டி20 தொடரின் 18-வது சீசன் மார்ச் 22 முதல் பரபரப்பாக அரங்கேறி வருகிறது. இந்நிலையில், இந்த தொடரில் ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் வியாழக்கிழமை இரவு 7:30 மணிக்கு 7-வது லீக் ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள் மோதியது. இதில் ஐதராபாத் அணியை வீழ்த்தி 5 விக்கெட் வித்தியாசத்தில் லக்னோ அணி அபார வெற்றி பெற்றது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL 2025, SRH vs LSG LIVE Cricket Score
நடப்பு தொடரில் அதிரடியாக ஆடி வரும் ஐதராபாத் தனது தொடக்க ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்சை 44 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. அதே உத்வேகத்தில் அந்த அணி களமிறங்கும். மறுபுறம், லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி தனது முதல் லீக்கில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிட்டல்சிடம் தோற்றது. இந்தத் தோல்வியில் இருந்து மீள லக்னோ போராடும். இதனால், இவ்விரு அணிகள் மோதும் இன்றைய ஆட்டத்தில் விறுவிறுப்புக்கு குறைவிருக்காது.
18 வது ஐ.பி.எல் தொடரில் 7-வது லீக் ஆட்டத்தில் டாஸ் வென்ற லக்னோ சூப்பர் ஜெயன்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்துவீச்சு தேர்வு செய்தார். அதன்படி, ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணி முதலில் பேட்டிங் களமிறங்கியது.
ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா களமிறங்கினர். டிராவிஸ் ஹெட் அதிரடியாக அடித்து விளையாடத் தொடங்கினார். ஆனால், அபிஷேக் ஷர்மா 6 ரன்னில் ஷர்துல் தாக்கூர் பந்தில் நிகோலஸ் பூரணிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். அடுத்து வந்த, இஷான் கிஷண் ஷர்துல் தாக்கூர் பந்தில் ரிஷப் பண்ட் இடம் கேட்ச் கொடுத்து கோல்டன் டக் அவுட் ஆனார். அடுத்து வந்த நிதிஷ் குமார் ரெட்டி டிராவிஸ் ஹெட் உடன் ஜோடி சேர்ந்தார்.
இருவரும் அதிரடியாக அடித்து விளையாடினார்கள். ஐதராபாத் அணி 7.3 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 76 ரன்கள் எடுத்திருந்தபோது, 47 ரன்கள் அடித்திருந்த டிராவிஸ் ஹெட் பிரின்ஸ் யாதவ் பந்தில் போல்ட் அவுட் ஆனார். அடுத்து வந்த ஹெய்ன்ரிச் கிளாசென், நிதிஷ் குமார் ரெட்டியுடன் ஜோடி சேர்ந்தார்.
ஐதராபாத் அணி 11.6 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 110 ரன்கள் எடுத்திருந்தபோது, ஹெய்ன்ரிச் கிளாசென் 26 ரன்னில் ரன் அவுட் ஆனார். அடுத்து வந்த அனிகெட் வர்மா நிதிஷ் குமார் ரெட்டி உடன் ஜோடி சேர்ந்தார்.
ஐதராபாத் அணி 14.1 ஓவர்களில் 4 விக்கெட் இழப்புக்கு 128 ரன்கள் எடுத்திருந்தபோது, 32 ரன்கள் எடுத்திருந்த நிதிஷ் குமார் ரெட்டி ரவி பிஷ்னோய் பந்தில் போல்ட் அவுட் ஆனார். அடுத்து வந்த, அபினவ் மனோஹர் 2 மட்டுமே எடுத்து ஷர்துல் தாக்கூர் பந்தில் அப்துல் சமத் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த பேட் கமின்ஸ் 4 பந்தில் 18 ரன்கள் அடித்து, ஆவேஷ் கான் பந்தில் திக்வேஷ் சிங் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார்.
இறுதியில் ஐதராபாத் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன்கள் குவித்தது. இதன் மூலம் 191 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் லக்னோ சூப்பர் ஜெயன்ஸ் அணி களமிறங்கியது.
லக்னோ சூப்பர் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக மிட்செல் மார்ஷ் மற்றும் ஏய்டன் மர்க்ரம் களமிறங்கினர். ஏய்டன் மர்க்ரம் 1 ரன் மட்டுமே எடுத்து முஹம்மது ஷமி பந்தில் பேட் கம்மின்ஸ் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து வந்த நிக்கோலஸ் பூரண், மிட்செல் மார்ஷ் உடன் ஜோடி சேர்ந்தார்.
அதற்கு பிறகு, நிக்கோலஸ் பூரண், மிட்செல் மார்ஷ் சிக்சர் மழை பொழிந்து வானவேடிக்கை நடத்தினர். அதிரடியாக விளையாடிய நிக்கோலஸ் பூரண் அரைசதம் அடித்து அசத்தினார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 8.4 ஓவர்களில் 1 விக்கெட் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்திருந்தபோது, நிக்கோலஸ் பூரண் 26 பந்துகளில் 6 பவுண்டரிகள், 6 சிக்ஸர்கள் உடன் 70 ரன்கள் அடித்திருந்த நிலையில், பேட் கம்மின்ஸ் பந்தில் எல்.பி.டபிள்யூ முறையில் அவுட் ஆனார். அடுத்து ரிஷப் பண்ட் பேட்டிங் செய்ய வந்தார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 10.5 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 138 ரன்கள் எடுத்திருந்தபோது, மிட்செல் மார்ஷ் 31 பந்துகளில் 52 ரன்கள் அடித்திருந்த நிலையில், பேட் கம்மின்ஸ் பந்தில் நிதிஷ் குமார் ரெட்டியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து ஆயுஷ் படோனி, ரிஷப் பனண்ட உடன் வந்து ஜோடி சேர்ந்தார்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி 12.6 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 154 ரன்கள் எடுத்திருந்தபோது, 6 ரன்கள் மட்டுமே எடுத்திருந்த ஆயுஷ் படோனி, ஆடம் ஜம்பா பந்தில் ஹர்ஷல் படேல் இடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அத்து டேவிட் மில்லர் பேட்டிங் செய்ய வந்தார்.
சிறிது நேரத்திலேயே 15 ரன்கள் எடுத்திருந்த ரிஷப் பண்ட் ஹர்ஷல் படேல் பந்தில் முஹமது ஷமியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அடுத்து, அப்துல் சமத் பேட்டிங் செய்ய வந்தார்.
டேவிட் மில்லர், அப்துல் சமத் ஜோடி லக்னோ அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர். 16.1 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 193 ரன்கள் எடுத்த லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.
இரு அணிகளின் பிளேயிங் லெவன்
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்: ஐடன் மார்க்ரம், மிட்செல் மார்ஷ், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன்/விக்கெட் கீப்பர்), டேவிட் மில்லர், ஆயுஷ் படோனி, ஷர்துல் தாக்கூர், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், திக்வேஷ் ரதி, பிரின்ஸ் யாதவ்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத்: அபிஷேக் சர்மா, டிராவிஸ் தலைவர், இஷான் கிஷன், நிதிஷ் குமார் ரெட்டி, ஹென்ரிச் கிளாசென் (விக்கெட் கீப்பர்), அனிகேத் வர்மா, அபினவ் மனோகர், பேட் கம்மின்ஸ் (கேப்டன்), சிமர்ஜீத் சிங், ஹர்ஷல் படேல், முகமது ஷமி.
நேருக்கு நேர்
ஐ.பி.எல்.லில் ஐதராபாத் மற்றும் லக்னோ அணிகள் 4 போட்டிகளில் நேருக்கு நேர் சந்தித்துள்ளன. இந்த 4 போட்டிகளில், ஐதராபாத் 1 முறை வென்றுள்ளது, அதே நேரத்தில் லக்னோ 3 முறை வெற்றி பெற்றுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.