Advertisment

முதல் நாள் ஐபிஎல் ஏலம்: விலை போகாத சூப்பர் ஸ்டார்கள்! பிரம்மிக்க வைத்த க்ருனல் பாண்ட்யா! முழு விவரம்

பதினோறாவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் மே 27-ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
முதல் நாள் ஐபிஎல் ஏலம்: விலை போகாத சூப்பர் ஸ்டார்கள்! பிரம்மிக்க வைத்த க்ருனல் பாண்ட்யா! முழு விவரம்

பதினோறாவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி வரும் ஏப்ரல் 7-ஆம் தேதி முதல் மே 27-ஆம் தேதி வரை இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெறுகிறது. ஒவ்வொரு அணியிலும் குறைந்தபட்சம் 18 வீரர்களும், அதிகபட்சம் 25 வீரர்களும், அதிகபட்சம் 25 வீரர்களும் இருக்க வேண்டும். அதற்காக, வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஏலம், பெங்களூருவில் இன்றும் நாளையும் நடக்கிறது. ஏற்கனவே, ஐபிஎல் போட்டியில் போட்டியிடும் 8 அணிகள் சார்பாக 18 வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

இந்த ஏலத்தில் 360 இந்திய வீரர்கள் உட்பட மொத்தம் 578 வீரர்கள் பங்கேற்கின்றனர்.

மாலை 06.15 - அன்கித் சிங் ராஜ்புத் என்ற வீரரை பஞ்சாப் அணி 3 கோடிக்கு ஏலத்தில் எடுத்துள்ளது. இவரது அடிப்படை விலை 30 லட்சமாகும்.

மாலை 06.09 - ஆவேஷ் கான் என்பவரை 70 லட்சத்துக்கு டெல்லி அணி ஏலம் எடுத்துள்ளது.

மாலை 06.06 - நவ்தீப் சைனி எனும் வீரரை பெங்களூரு அணி 3 கோடிக்கு வாங்கியுள்ளது. இவரது அடிப்படை விலை 20 லட்சமாகும்.

மாலை 06.00 - சையத் காலீல் அஹமத் எனும் வீரரை ஹைதராபாத் அணி 3 கோடிக்கு வாங்கியுள்ளது. இவரது அடிப்படை விலை 20 லட்சமாகும்.

மாலை 05.56 - அனிகெத் சௌத்ரி என்பவரை பெங்களூரு அணி 30 லட்சத்துக்கு வாங்கியுள்ளது.

மாலை 05.54 - பசில் தம்பியை ஹைதராபாத் அணி 95 லட்சத்துக்கு வாங்கியுள்ளது.

மாலை 05.51 - தமிழக வீரர் நடராஜன் தியாகராஜன் 40 லட்சத்துக்கு ஏலம் போயுள்ளார். இவரை ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது.

மாலை 05.48 - இந்திய வீரர் சித்தார்த் கவுலை 3.80 கோடிக்கு ஹைதராபாத் அணி வாங்கியுள்ளது.

மாலை 05.45 - குல்வந்த் கெஜ்ரோலியா எனும் வீரரை, பெங்களூரு அணி 85 லட்சத்துக்கு வாங்கியுள்ளது.

மாலை 05.35 - 19 வயதே ஆன இளம் இந்திய வீரர் இஷான் கிஷனை, மும்பை அணி 6.20 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது. இவரது அடிப்படை விலை 40 லட்சமாகும்.

மாலை 05.28 - வெஸ்ட் இண்டீசை சேர்ந்த ஆல்-ரவுண்டர் ஜோஃப்ரா ஆர்ச்சர் என்பவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 7.20 கோடிக்கு வாங்கியுள்ளது. இவரது அடிப்படை விலை 40 லட்சமாகும்.

மாலை 05.20 - டேர்சி ஷார்ட் எனும் வீரரை 4 கோடி ரூபாய்க்கு ராஜஸ்தான் அணி ஏலம் எடுத்துள்ளது. இவரது அடிப்படை விலை 20 லட்சமே!.

மாலை 05.15 - நிதிஷ் ராணாவை 3.40 கோடிக்கு கொல்கத்தா அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

மாலை 05.10 - க்ருனல் பாண்ட்யாவின் அடிப்படை விலை 40 லட்சம். இவரை பெங்களூரு அணி 8.80 கோடிக்கு ஏலம் எடுத்தது. இறுதியில், மும்பை அணி RTM பயன்படுத்தி க்ருனல் பாண்ட்யாவை தக்க வைத்துக் கொண்டது.

மாலை 05.05 - அண்டர் 19 அணியில் விளையாடி வரும் அதிவேகப்பந்து வீச்சாளரான கம்லேஷ் நாகர்கோட்டியை கொல்கத்தா அணி 3.20 கோடிக்கு வாங்கியுள்ளது.

மாலை 05.00 - தமிழக வீரர் விஜய் ஷங்கரை, டெல்லி அணி 3.60 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

மாலை 04.56 - தீபக் ஹூடாவை டெல்லி அணி 3.60 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஆனால், சன்ரைசர்ஸ் RTM பயன்படுத்தி அவரை தக்க வைத்துக் கொண்டது.

மாலை 04.46 - இளம் வீரர் ராகுல் டெவாட்டியா என்பவரை   என்பவரின் அடிப்படை விலை 20 லட்சமாகும்.     இவரை, டெல்லி அணி 3 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

மாலை 04.20 - தற்போது அண்டர் 19 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியின் கேப்டனாக செயல்படும் ப்ரித்வி ஷா 1.20  கோடிக்கு டெல்லி அணியால் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

மாலை 04.12 - இந்திய அணியில் இதுவரை இடம்பிடிக்காத ராகுல் திரிபாதி எனும் வீரரின் அடிப்படை விலை 20 லட்சமாகும். ஆனால், அவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 3.40 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

மாலை 04.07 - மாயன்க் அகர்வாலை 1 கோடி ரூபாய்க்கு பஞ்சாப் அணி வாங்கியது.

மாலை 04.00 - தற்போது அண்டர் 19 உலகக் கோப்பைத் தொடரில் இந்திய அணியில் ஆடி வரும் ஷுப்மன் கில் 1.80 கோடிக்கு கொல்கத்தா அணியால் வாங்கப்பட்டுள்ளார்.

பிற்பகல் 03.56 - வெறும் 30 லட்சம் அடிப்படை விலையாக கொண்ட சூர்யா குமார் யாதவை, 3.20 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் வாங்கியது.

பிற்பகல் 03.55 -  குல்தீப் யாதவ்வை பெங்களூரு அணி 5.80 கோடிக்கு வாங்கியது. ஆனால், கொல்கத்தா அணி இவரை RTM பயன்படுத்தி தக்க வைத்துக் கொண்டது.

பிற்பகல் 03.50 - யுவேந்திர சாஹலை டெல்லி அணி இவரை 6 கோடிக்கு வாங்கியது. ஆனால், பெங்களூரு அணி RTM பயன்படுத்தி சாஹலை தக்க வைத்துக் கொண்டது.

 பிற்பகல் 03.40 - அமித் மிஸ்ராவை டெல்லி அணி 4 கோடிக்கு வாங்கியது.

பிற்பகல் 03.38 - ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்த இளம் ஸ்பின்னர் ரஷித் கானின் அடிப்படை விலை 2 கோடி. பெங்களூரு அணியும், பஞ்சாப் அணியும் அவரை கைப்பற்ற கடும் போட்டியிட்டன. இறுதியில், பஞ்சாப் உரிமையாளரான ப்ரீத்தி ஜிந்தா, ரஷித்தை 9 கோடிக்கு வாங்கினார். ஆனால், சத்தமே போடாமல் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி RTM பயன்படுத்தி அவரை தக்க வைத்துக் கொண்டது.

பிற்பகல் 03.26 - இந்திய ஸ்பின்னர் கர்ண் ஷர்மாவை 5 கோடிக்கு சென்னை அணி வாங்கியுள்ளது.

பிற்பகல் 03.22 - தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தாஹிரை சென்னை அணி 1 கோடிக்கு வாங்கியுள்ளது.

பிற்பகல் 03.20 - பியூஷ் சாவ்லாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 4.20 கோடிக்கு ஏலம் எடுத்தது. ஆனால், கொல்கத்தா அணி அவரை RTM பயன்படுத்தி தக்க வைத்தது.

பிற்பகல் 03.05 - தென்னாப்பிரிக்காவின் காகிசோ ரபாடாவை சென்னை அணி வாங்க முயற்சி செய்தது. 4.20 கோடிக்கு அவரை வாங்கவும் செய்தது. ஆனால், டெல்லி அணி RTM பயன்படுத்தி ரபாடாவை தக்க வைத்துக் கொண்டது.

பிற்பகல் 03.00 - முகமத் ஷமியை டெல்லி அணி ரூ.3 கோடிக்கு RTM பயன்படுத்தி தக்கவைத்துக் கொண்டது.

மதியம் 02.55 - உமேஷ் யாதவை 4.20 கோடிக்கு பெங்களூரு அணி வாங்கியுள்ளது.

மதியம் 02.50 - ஆஸ்திரேலிய ஃபாஸ்ட் பவுலர் பேட் கம்மின்சை எடுக்க சென்னை அணியும், மும்பையும் போட்டியிட்டன. 5.20 கோடி வரை சென்று கேட்டது சென்னை. ஆனால், மும்பை அவரை 5.40 கோடிக்கு கைப்பற்றியது.

மதியம் 02.44 - வங்கதேச வேகப்பந்துவீச்சாளர் முஸ்தாபிசூர் ரஹ்மான், மும்பை அணியால் 2.20 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

மதியம் 02.40 - இங்கிலாந்தின் ஜோஸ் பட்லரை, ராஜஸ்தான் ராயல்ஸ் அணி 4.40 கோடிக்கு வாங்கியுள்ளது. இவரை தக்க வைக்க மும்பை அணி RTM பயன்படுத்தவில்லை.

மதியம் 02.35 - அம்பதி ராயுடுவை சென்னை அணி 2.20 கோடிக்கு வாங்கியுள்ளது.

மதியம் 02.30 - கேரள வீரர் சஞ்சு சாம்சனை 8 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது. இவரை எடுக்க மற்ற அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. அதிக தொகை காரணமாக டெல்லி அணி இவரை 'RTM'ல் தக்கவைக்கவில்லை.

மதியம் 02.25 - தினேஷ் கார்த்திக்கை போல உத்தப்பாவை ஏலத்தில் எடுக்கவும் கடும் போட்டி நிலவியது. இறுதியில், மும்பை அணி அவரை 6.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால், கொல்கத்தா அணி RTM பயன்படுத்தி உத்தப்பாவை தக்க வைத்தது.

மதியம் 02.18 -  கடும் போட்டிக்கு பிறகு தினேஷ் கார்த்திக்கை கொல்கத்தா அணி 7.40 கோடிக்கு வாங்கியுள்ளது.

மதியம் 02.13 - இங்கிலாந்தின் ஜானி பேர்ஸ்டோ 'UNSOLD'.

மதியம் 02.11 - ரிதிமான் சாஹாவை ஹைதராபாத் அணி 5 கோடிக்கு வாங்கியுள்ளது.

மதியம் 02.05 - பெங்களூரு அணி தென்னாப்பிரிக்காவின் குயிண்டன் டி காக்-ஐ 2.80 கோடிக்கு வாங்கியுள்ளது.

மதியம் 02.03 - இந்தியாவின் பார்த்திவ் படேல் 'UNSOLD'.

மதியம் 01.01 - இங்கிலாந்தின் மொயின் அலியை 1.70 கோடிக்கு பெங்களூரு வாங்கியுள்ளது.

மதியம் 01.00 - ஆஸ்திரேலியாவின் ஆல்-ரவுண்டர் மார்க்ஸ் ஸ்டாய்னிஸ் 6.20  கோடி ரூபாய்க்கு பெங்களூரு வாங்கியது. ஆனால், அவரை RTM மூலம் பஞ்சாப் கைப்பற்றியது.

மதியம் 12.58 - உலகின் No.1 டி20 வீரரான நியூசிலாந்தின் காலின் மன்ரோவை 1.90 கோடிக்கு டெல்லி அணி வாங்கியுள்ளது.

மதியம் 12.56 - யூசுப் பதானை 1.90 கோடிக்கு ஹைதராபாத் வாங்கியுள்ளது.

மதியம் 12.46 - காலின் டி கிரான்ட்ஹோம்-ஐ 2.20 கோடிக்கு வாங்கியுள்ளது பெங்களூரு அணி.

மதியம் 12.44 - கேதர் ஜாதவை 7.80 கோடிக்கு வாங்கியுள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

மதியம் 12.40 - ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சனை 4 கோடிக்கு சென்னை அணி ஏலம் எடுத்துள்ளது.

மதியம் 12.35 - 2016 டி20 உலகக் கோப்பை இறுதிப் போட்டியில், பென் ஸ்டோக்ஸின் கடைசி ஓவரில் வரிசையாக நான்கு சிக்ஸர்கள் அடித்து கோப்பையை வென்றுக் கொடுத்த கார்லஸ் பிரத்வெயிட்டை 2 கோடிக்கு ஹைதராபாத் அணி ஏலம் எடுத்துள்ளது.

மதியம் 12.32 கடும் போராட்டத்திற்கு பிறகு ஆல் ரவுண்டர் க்ரிஸ் வோக்ஸ்-ஐ தவறவிட்டது சென்னை சூப்பர் கிங்ஸ். பெங்களூரு அணி அவரை 7.40 கோடிக்கு ஏலம் எடுத்தது.

மதியம் 12.00 - இந்திய வீரர் மனீஷ் பாண்டேவின் அடிப்படை விலை 1 கோடியாகும். ஆனால், கடும் போட்டிக்கு இடையே, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அவரை 11 கோடிக்கு ஏலம் எடுத்துள்ளது.

காலை 11.54 - இங்கிலாந்து வீரர் ஜேசன் ராய் டெல்லி அணியால் 1.5 கோடி ஏலம் எடுக்கப்பட்டுள்ளார்.

காலை 11.51: ப்ரெண்டான் மெக்குலமை ரூ.3.6 கோடிக்கு பெங்களூரு அணி ஏலத்தில் எடுத்தது.

காலை 11.45:ஆரோன் ஃபிஞ்சை ரூ.6.20 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் எடுத்தது. இவருக்கு அடிப்படை ஏலத்தொகையாக ரூ.1.5 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது.

காலை 11.43: டேவிட் மில்லரை ரூ.3 கோடிக்கு பஞ்சாப் அணி தக்க வைத்தது. முரளி விஜயை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை.

காலை 11.39: இந்திய வீரரான கே.எல்.ராகுலை பஞ்சாப் அணி ரூ.11 கோடிக்கு ஏலம் எடுத்தது. அதிக விலைக்கு ஏலம் போன இந்திய வீரர் இதுவரை இவர்தான்.

காலை 11.32:பேட்ஸ் மேன் கருண் நாயரை ரூ.5.6 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சப் பணி.

காலை 11.18: யுவராஜ் சிங்கை ரூ.2 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது பஞ்சாப் அணி. இதற்கு முந்தைய ஐபிஎல் போட்டியில் யுவராஜ் சிங் ஐதரபாத் அணியில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

காலை 11.16: இங்கிலாந்து வீரர் ஜோ ரூட்டை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை

காலை 11.14:கேன் வில்லியம்சன்னை ரூ.3 கோடிக்கு தக்க வைத்தது ஐதரபாத் அணி.

காலை 11.12:டுவைன் பிராவோவை ரூ.6.4 கோடிக்கு தக்க வைத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி.

காலை 11.09: கொல்கத்தா அணி கேப்டனாக இருந்த கவுதம் கம்பீரை ரூ. 2.80 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது டெல்லி அணி

காலை 11.06:ஆஸ்திரேலிய அதிரடி வீரர் மேக்ஸ்வெல்லை ரூ.9 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி அணி

காலை 11.00: கிளென் மாக்ஸ்வெல் அடுத்த வீரராக ஏலத்தில் விடப்படுகிறார். அவரை ஏலத்தில் எடுக்க ஐதராபாத் அணியும், பெங்களூரு அணியும் ஆர்வம் காட்டுகின்றன. அவர் குறைந்தபட்சம் ரூ.2 கோடி முதல் அதிகபட்சம் ரூ.7 கோடி வரை ஏலத்தில் எடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

காலை 10.58:ஷகிப் அல் ஹசனை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது சன் ரைசர்ஸ் அணி. இவர் முன்பு கொல்கத்தா அணியில் இருந்தார்.

காலை 10.57: ஹர்பஜன் சிங்கை ரூ.2 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. இவருக்கு அடிப்படை ஏலத்தொகையாக ரூ.2 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

காலை 10.33: ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் ஸ்டார்க்கை ரூ. 9.40 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி.

காலை 10.32: ரஹானேவை ரூ.4 கோடிக்கு தக்கவைத்தது ராஜஸ்தான் அணி

காலை 10.30: ரஹானேவை ரூ.4 கோடிக்கு தக்கவைத்தது ராஜஸ்தான் அணி

காலை 10.22: இங்கிலாந்து அணி வீரர் பென் ஸ்டோக்ஸை ரூ.12.50 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் அணி

காலை. 10.21: மேற்கு இந்திய அணியை சேர்ந்த அதிரடி வீரர் கிறிஸ் கெயிலை எந்த அணியும் ஏலத்தில் எடுக்கவில்லை. அவருக்கு அடிப்படை ஏலத்தொகையாக ரூ.2 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டது.

காலை 10.17: கைரன் பொல்லார்டை மும்பை இந்தியன்ஸ் அணி ரூ 5.40 கோடிக்கு தக்க வைத்தது. இவருக்கு ரூ.2 கோடி அடிப்படை ஏலத்தொகையாக நிர்ணயம் செய்யப்பட்டது.

காலை 10.12: அஸ்வினை ரூ.7.6 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் அணி. இவருக்கு அடிப்படை ஏலத்தொகை ரூ.2 கோடியாக நிர்ணயம் செய்யப்பட்டது.

காலை 10.07: முதல் வீரராக ஷிகர் தவான் ஏலம் விடப்பட்டார். இவருக்கு அடிப்படை ஏலத்தொகையாக ரூ.2 கோடி நிர்ணயம் செய்யப்பட்டது. ஷிகர் தவானை ரூ. 5.2 கோடிக்கு தக்கவைத்தது ஹைதராபாத் அணி.

ஏற்கனவே அணிகளால் தக்க வைக்கப்பட்ட வீரர்கள்:

சென்னை சூப்பர் கிங்ஸ் - மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா, சுரேஷ் ரெய்னா

மும்பை இந்தியன்ஸ் - ரோஹித் ஷர்மா, ஹர்திக் பாண்ட்யா, ஜஸ்பிரித் பும்ரா

டெல்லி டேர்டெவில்ஸ் - ரிஷபத் பேண்ட், கிரிஸ் மோரிஸ், ஸ்ரேயாஸ் ஐயர்

சன் ரைசர்ஸ் ஐதராபாத் - டேவிட் வார்னர், புவனேஷ்வர் குமார்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு - விராட் கோலி, டி வில்லியர்ஸ், சர்பிராஸ் கான்

ராஜஸ்தான் ராயல்ஸ் - ஸ்டீவ் ஸ்மித்

கிங்ஸ் லெவன் பஞ்சாப் - அக்ஸர் படேல்

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - சுனில் நரேன், ஆண்ட்ரூ ரஸ்ஸல்

Ipl Auction Live
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment