ஐபிஎல் ஏலம் 2019: யுவராஜ் சிங் சென்னை அணியில் ஏலம் எடுக்கப்படுவாரா?

IPL Auction 2019: சென்னை சூப்பர் கிங்ஸ் யுவராஜை ஏலத்தில் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருகின்றனர்

மொத்தமாக 350 வீரர்கள், அதில் 228 பேர் இந்தியர்கள் என நாளை(டிச.18) களைக்கட்டவிருக்கிறது 2019 சீசனுக்கான ஐபிஎல் ஏலம். ‘பிங்க் சிட்டி’ என்று அழைக்கப்படும் ஜெய்ப்பூரில், மதியம் 2.30 மணியளவில் ஐபிஎல் ஏலம் தொடங்குகிறது.

இந்த ஏலத்தில் கலந்து கொள்ள மொத்தம் 1003 வீரர்கள் முதற்கட்டமாக பதிவு செய்திருந்தனர். அதில், 346 வீரர்களை மட்டுமே எட்டு அணிகளும் இறுதி செய்தன. அதுதவிர, லாஸ்ட் என்ட்ரியாக 4 வீரர்களின் பெயர் சேர்க்கப்பட்டு, மொத்தம் 350 என லிஸ்ட் இறுதி செய்யப்பட்டுள்ளது.

இதில், சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய வீரர்களின் எண்ணிக்கை 119.

229 வீரர்கள் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடாதவர்கள்.

2 Associate Nation வீரர்கள் என மொத்தம் 350 பேர் நாளை ஏலத்தில் விடப்பட உள்ளனர்.

இம்முறை, வீரர்களின் அதிகபட்ச அடிப்படை விலை என்பது 2 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அது ‘Marquee List’ என்று குறிப்பிடப்படுகிறது. அந்த உயர்தர லிஸ்டில் 9 வீரர்கள் மட்டும் இடம் பெற்றுள்ளனர். ஆனால். அதில் ஒருவர் கூட இந்தியர் கிடையாது.

லசித் மலிங்கா,

கோரே ஆண்டர்சன்,

சாம் குர்ரன், 

காலின் இங்க்ரம்

ஷான் மார்ஷ்,

ஏஞ்சலோ மேத்யூஸ்,

பிரண்டன் மெக்குல்லம்,

டேர்சி ஷார்ட்

க்ரிஸ் வோக்ஸ் 

என 9 வீரர்கள் மட்டும் இந்த லிஸ்டில் உள்ளனர்.

ஒவ்வொரு அணியும், தங்கள் அணியில் இருந்து சில வீரர்களை விடுவித்துள்ளன. அதற்கு பதில், புதிய வீரர்களை ஏலத்தில் எடுப்பதில் ஆர்வமாக உள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் பொறுத்தவரை, 3 வீரர்களை மட்டும் விடுவித்துள்ளது. பஞ்சாப் அணியில் இருந்து யுவராஜ் சிங் விடுவிக்கப்பட்டிருக்கும் நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் யுவராஜை ஏலத்தில் எடுக்க வேண்டும் என ரசிகர்கள் தங்கள் விருப்பத்தை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

சிஎஸ்கே-வின் இருப்புத் தொகை : 8.4 கோடி

இதுபோல, மற்ற அனைத்து அணிகளின் விடுவிக்கப்பட்ட, தக்கவைக்கப்பட்ட வீரர்கள் குறித்து முழுதாக அறிய இங்கே க்ளிக் செய்யவும்

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close