2021-ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் பிப்ரவரி மாதத்தில் நடைபெறும் என எதிர்பார்க்கப் படுகின்றது. இந்த போட்டியில் எந்த அணி எந்த வீரரை தக்க வைக்க போகின்றது மற்றும் விடுவிக்க போகின்றது என்று இன்று அறிவிக்க உள்ளது. ஐபிஎல் போட்டியின் விதிமுறைகளின் படி, போட்டியில் விளையாடிய மற்றும் விளையாடாத வீரர்களை அந்த அணியில் தக்க வைத்து கொள்ளலாம், மற்றும் விடுவித்து கொள்ளலாம். அதன் படி ஐபிஎல் போட்டியில் கலந்து கொள்ளும் எட்டு அணிகளும், தக்க வைக்கும் வீரர்களின் பட்டியலையும், விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலையும் இன்று வெளியிட்டு வருகின்றது. இது ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தின் முன்னோட்டமாக பார்க்கப்படுகின்றது
5 முறை சாம்பியன் பட்டம் பெற்ற மும்பை இந்தியன்ஸ் அணி சில முக்கிய வீரர்களை வெளியேற்ற வாய்ப்புள்ளது.
ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக சிறப்பாக விளையாடிய ரிஷாப் பந்த், சுப்மான் கில், முகமது சிராஜ், வாஷிங்டன் சுந்தர், டி நடராஜன் போன்றோர் அவர்கள் ஏற்கனேவே விளையாடிய அணிகளால் தக்க வைக்க அதிக வாய்ப்புள்ளது.
சென்னை அணி:
தக்க வைக்கப்பட்ட வீரர்கள்:
எம்.எஸ்.தோனி, ருதுராஜ் கெய்க்வாட், சுரேஷ் ரெய்னா, சாம் குர்ரான், ஜோஷ் ஹேசில்வுட், இம்ரான் தாஹிர், ஃபாஃப் டு பிளெசிஸ், டுவைன் பிராவோ, ஷார்துல் தாக்கூர், தீபக் சாஹர், கர்ன் சர்மா, அம்பதி ராயுடு, மிட்செல் சாண்ட்னர், ரவீந்திர ஜடேஜா, நாராயண் ஜகதே என்ஜிடி, சாய் கிஷோர்..
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
கேதார் ஜாதவ், மோனு சிங், முரளி விஜய், ஹர்பஜன் சிங், ஷேன் வாட்சன், பியூஷ் சாவ்லா.
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி
தக்க வைக்கப்பட்ட வீரர்கள்:
டேவிட் வார்னர், அபிஷேக் சர்மா, பசில் தம்பி, புவனேஷ்வர் குமார், ஜானி பேர்ஸ்டோவ், கேன் வில்லியம்சன், மனிஷ் பாண்டே, முகமது நபி, ரஷீத் கான், சந்தீப் சர்மா, ஷாபாஸ் நதீம், ஸ்ரீவத் கோஸ்வாமி, சித்தார்த் கஜான், நஜ் , விருத்திமான் சஹா, அப்துல் சமத், மிட்செல் மார்ஷ், ஜேசன் ஹோல்டர், பிரியம் கார்க், விராட் சிங்
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
பவனகா சந்தீப், ஃபேபியன் ஆலன், சஞ்சய் யாதவ், பில்லி ஸ்டான்லேக், பிருத்வி ராஜ்.
பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி:
தக்க வைக்கப்பட்ட வீரர்கள்:
விராட் கோஹ்லி, ஏபி டிவில்லியர்ஸ், யுஸ்வேந்திர சாஹல், தேவதட் பாடிக்கல், நவ்தீப் சைனி, வாஷிங்டன் சுந்தர், முகமது சிராஜ், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஜாம்பா, ஜோஷ் பிலிப், ஷாபாஸ் அகமது மற்றும் பவன் தேஷ்பாண்டே
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
ஆரோன் பிஞ்ச், கிறிஸ் மோரிஸ், இசுரு உதனா, மொயீன் அலி, பவன் நேகி, குர்கீரத் சிங் மான், சிவம் டியூப், டேல் ஸ்டெய்ன், பார்த்திவ் படேல் மற்றும் உமேஷ் யாதவ்.
கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி:
தக்க வைக்கப்பட்ட வீரர்கள்:
கே.எல்.ராகுல், கிறிஸ் கெய்ல், மயங்க் அகர்வால், நிக்கோலஸ் பூரன், மந்தீப் சிங், சர்பராஸ் கான், தீபக் ஹூடா, பிரப்சிம்ரன் சிங், முகமது ஷமி, கிறிஸ் ஜோர்டான், தர்ஷன் நல்கண்டே, ரவி பிஷ்னோய், முருகன் அஸ்வின், அர்ஷ்தீப் சிங், ஹர்பிரீத்
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
க்ளென் மேக்ஸ்வெல், கருண் நாயர், ஹார்டஸ் வில்ஜோன், ஜகதீஷா சுசித், முஜீப் உர் ரஹ்மான், ஷெல்டன் கோட்ரெல், ஜிம்மி நீஷம், கிருஷ்ணப்ப கவுதம், தாஜிந்தர் சிங்.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி
தக்க வைக்கப்பட்ட வீரர்கள்:
சஞ்சு சாம்சன், பென் ஸ்டோக்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஜோஸ் பட்லர், ரியான் பராக், ஸ்ரேயாஸ் கோபால், ராகுல் தவாட்டியா, மஹிபால் லோமர், கார்த்திக் தியாகி, ஆண்ட்ரூ டை, ஜெய்தேவ் உனட்கட், மாயங்க் மார்க்கண்டே, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அனுஜ் ராவத், டேவிட் மில்லர், மனன் உப்ரா
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
ஸ்டீவ் ஸ்மித், அங்கித் ராஜ்பூட், ஓஷேன் தாமஸ், ஆகாஷ் சிங், வருண் ஆரோன், டாம் குர்ரான், அனிருதா ஜோஷி, மற்றும் சஷாங்க் சிங்
டெல்லி அணி:
தக்க வைக்கப்பட்ட வீரர்கள்:
ஷிகர் தவான், பிருத்வி ஷா, அஜிங்க்யா ரஹானே, ரிஷாப் பந்த், ஸ்ரேயாஸ் ஐயர், ஆக்சர் படேல், அமித் மிஸ்ரா, இஷாந்த் சர்மா, ஆர் அஸ்வின், லலித் யாதவ், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், பிரவீன் துபே, ககிசோ ரபாடா, அன்ரிச் ஸ்டோர்ட் , கிறிஸ் வோக்ஸ், டேனியல் சாம்ஸ்.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
மோஹித் சர்மா, துஷார் தேஷ்பாண்டே, கீமோ பால், சந்தீப் லாமிச்சேன், அலெக்ஸ் கேரி, ஜேசன் ராய்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி:
தக்க வைக்கப்பட்ட வீரர்கள்:
ஈயோன் மோர்கன், ஆண்ட்ரே ரஸ்ஸல், தினேஷ் கார்த்திக்,கமலேஷ் நாகர்கோட்டி, குல்தீப் யாதவ், லாக்கி பெர்குசன், நிதீஷ் ரா, பிரசீத் கிருஷ்ணா, ரிங்கு சிங், சந்தீப் வாரியார், சிவம் மாவி, சுப்மான் கில், சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், ராகுல் திரிபாதி, வருண் சக்ரவாத்தி, அலி கான், டிம் சீஃபர்ட்.
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
டாம் பான்டன், கிறிஸ் கிரீன், சித்தேஷ் லாட், நிகில் நாயக், எம் சித்தார்த், ஹாரி கர்னி
மும்பை அணி:
விடுவிக்கப்பட்ட வீரர்கள்:
லசித் மலிங்கா, நாதன் கூல்டர்-நைல், மிட்செல் மெக்லெனகன், ஷெர்பேன் ரதர்ஃபோர்ட், ஜேம்ஸ் பாட்டின்சன், திக்விஜய் தேஷ்முக், பால்வந்த் ராய்
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.