2021-ம் ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகள் பிப்ரவரி மாதத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உட்பட 8 அணிகள் பங்கேற்க உள்ளன. ஐபிஎல் போட்டியின் விதிமுறைகளின் படி, போட்டியில் விளையாடிய மற்றும் விளையாடாத வீரர்களை அந்த அணியின் நிர்வாகம் தக்க வைத்து மற்றும் விடுவித்து கொள்ளலாம். தக்க வைக்கப் படும் மற்றும் விடுவிக்கப்படும் வீரர்களின் பட்டியலை 8 அணிகளும் கடந்த புதன் கிழமை அன்று அறிவித்தன. இந்த அறிவிப்பு ஐபிஎல் போட்டிக்கான ஏலத்தின் முன்னோட்டமாக பார்க்கப்பட்டு வருகின்றது.
இந்நிலையில் கடந்த ஆண்டு நடந்த ஐபில் போட்டிகளில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி வந்த ராபின் உத்தப்பாவுக்கு சென்னை அணியில் இடம் கிடைத்துள்ளது. 35 வயதுடைய ராபின் உத்தப்பா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மட்டுமே 5 ஆண்டுகள் விளையாடி உள்ளார். மற்ற எந்த அணியிலும் அவர் அதிக ஆண்டுகள் விளையாடவில்லை. அதோடு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி போது அதிகம் சோபிக்கவில்லை.
இதையடுத்து இந்தாண்டு நடைபெற உள்ள ஐபில் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாட உள்ளார். இதை நேற்று அந்த அணி தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தது. அதோடு ‘யெல்லோ வணக்கம் ராபின் உத்தப்பா’ என்ற வசனத்தோடு அவரை வரவேற்று இருந்தது. இதை அறிந்த இணைய வாசிகள் வயது முதிர்ந்த வீரர் சென்னை அணிக்கு எதற்கு என கேள்வி எழுப்பியுள்ளனர். மற்றும் ‘இவரு உத்தப்பா இல்லை பெரியப்பா’ எனக் கூறி இணைய பக்கங்களில் கேலி செய்து வருகிறார்கள்.
Robin is our newest Bat-Man! Welcoming you with #Yellove Vanakkam @robbieuthappa! #WhistlePodu ???????? pic.twitter.com/MYVpwvV2ZG
— Chennai Super Kings (@ChennaiIPL) January 21, 2021
Sam billings, Finch lam vanguvomnu thana nenachinga.. epdi prank pannom pathingala…
-Anbu-den Admin pic.twitter.com/JosOXZe4oY
— Nijanthan (@Astro_Nijanthan) January 21, 2021
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ட்விட்டர் பக்கத்தை பின் தொடர்பவர்களில் ஒருவர், “இளம் தலைமுறை வீரர்களுக்கு வாய்ப்பளிக்க வேண்டிய இந்த நேரத்தில் சென்னை அணி ஏன் இப்படி ஒரு தவறான முடிவை எடுத்தது என்று தெரியவில்லை” என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். இன்னொருவர் தனது பின்னூட்டத்தில்,”சாம் பில்லிங்ஸ், ஆரோன் பிஞ்ச்-லாம் வாங்குவோம் தானா நெனச்சிங்க .. எப்டி ப்ராங்க் பன்னோம் பாதிங்கலா, அன்புடன் அட்மின்” என்று கேலி செய்திருக்கிறார்.
Deii ivaru Uthappa ilada csk team ku periappa da ???????? why da why pic.twitter.com/V5F08MIKPu
— Mr Rytu (@mr_rytu) January 21, 2021
Pick youngstars not who are ready for retire pic.twitter.com/Cg65O9ishZ
— Giridhar (@Giridhar1888989) January 22, 2021
இன்னொரு ட்விட்டர் வாசி,”டேய் இவரு உத்தப்பா இல்லடா சிஎஸ்கே டீம் பெரியப்பா டா” என்று கிண்டல் செய்யும் பாணியில் கூறியிருக்கிறார். மற்றொருவர், “இளம் வீரர்களை தேர்வு செயுங்கள், ஓய்வு பெறும் வீரர் வேண்டாம்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
“ஏன் இருப்பதிலே வயது முதிர்ந்த வீரரை தேர்வு செய்துள்ளீர்கள்” என ஒருவர் கூறியிருக்கிறார். “ஓய்வு பெற்ற வீரர்களாக சிஎஸ்கே அணி தேடிப்பிடித்துள்ளது” என இன்னொருவர் கூறியிருக்கிறார். இப்படி விதவிதமான கமெண்ட்கள் வந்து விழுந்தபடி இருக்கின்றன.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற ” t.me/ietamil