Advertisment

ஐபிஎல் ஏலம்: அதிக அடிப்படை விலை கொண்ட வீரர்கள் பட்டியல் இதோ…

இறுதிப் பட்டியலில் 590 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் இந்திய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், மேற்கு வங்க அரசில் விளையாட்டு துறை இணை அமைச்சராக பதவி வகிக்கும் மனோஜ் திவாரி ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

author-image
WebDesk
New Update
IPL auction 2022 Check the full list of players with highest base price

IPL auction 2022 : இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) டி20 கிரிக்கெட் போட்டிக்கான ஏலத்தில் பங்கேற்பதற்கான கிரிக்கெட் வீரர்களின் இறுதிப் பட்டியலில் 590 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். அவர்களில் இந்திய முன்னாள் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கரின் மகன் அர்ஜுன் டெண்டுல்கர், மேற்கு வங்க அரசில் விளையாட்டு துறை இணை அமைச்சராக பதவி வகிக்கும் மனோஜ் திவாரி ஆகியோரின் பெயர்களும் இடம்பெற்றுள்ளன.

Advertisment

தமிழகத்தைச் சேர்ந்த அஸ்வின், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த டேவிட் வார்னர், இந்திய கிரிக்கெட் அணியின் தவன், ஸ்ரேயஸ் ஐயர், பட் கம்மின்ஸ், ககிஸோ ரபடோ ஆகியோரின் அடிப்படை விலை ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்திய வீரர்களான ஷமி, புவனேஸ்வர் குமார், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, ரஹானே ஆகியோரின் அடிப்படை விலையும் ரூ.2 கோடியாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இவர்கள் தான் ஏலத்தில் அதிக அடிப்படை விலை கொண்ட வீரர்களாவர்.

ஐபிஎல் திருவிழா மார்ச் மாதத்தின் கடைசி வாரத்தில் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. நடப்பு சாம்பியன் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), மும்பை இந்தியன்ஸ், உள்பட 10 அணிகள் பங்கேற்கின்றன. இதில், லக்னோவும், ஆமதாபாத் அணிகள் புதியவை.

சிஎஸ்கே அணியில் கேப்டன் தோனி, ரவீந்திர ஜடேஜா, ருதுராஜ் கெய்க்வாட், மொயீன் அலி ஆகிய வீரர்கள் தக்க வைக்கப்பட்டுள்ளனர்.

கர்நாடக மாநிலம், பெங்களூரில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் வரும் 12, 13 ஆகிய தேதிகளில் ஏலம் நடக்கிறது.

ஏலப் பட்டியலில் 1,214 வீரர்கள் பதிவு செய்திருந்தனர். அவர்களில் 590 பேர்  இறுதி பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

அமைச்சர் மனோஜ் திவாரிக்கு ரூ.50 லட்சம், அர்ஜுன் டெண்டுல்கருக்கு ரூ.20 லட்சம் அடிப்படை ஏல விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை ஏலத்தில் மிக அதிக வயதுடைய வீரராக தென்னாப்பிரிக்காவின் இம்ரான் தாஹிரும், குறைந்த வயதுடைய வீரராக ஆப்கனை சேர்ந்த 17 வயதான பந்துவீச்சாளர் நூர் அகமதுவும் இடம்பிடித்துள்ளனர்.

எந்தெந்த அணி எந்தெந்த வீரர்களை ஏலத்தில் எடுக்கும் என்பதை கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றனர்.

சத்தமே இல்லாமல் தென் கொரியா கால்பந்து அணி செய்த சாதனை!

தென் கொரியா கால்பந்து அணி உலகக் கோப்பை கால்பந்து போட்டியின் பைனலுக்கு தொடர்ந்து பத்தாவது முறையாக தகுதி பெற்று சாதனை படைத்துள்ளது.

துபையில் நேற்று (பிப்.1) நடந்த சிரியாவுக்கு எதிரான ஆட்டத்தில் 0-2 என்ற கோல் கணக்கில் தென் கொரியா வெற்றி பெற்றது.

கடந்த 1986ஆம் ஆண்டில் ஆண்டு முதல் ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து

போட்டியின் இறுதி ஆட்டத்துக்கு தென் கொரியா தகுதி பெற்று வருகிறது.

2002 ஆம் ஆண்டில் தென் கொரியா 4-ஆவது இடம் பிடித்தது நினைவுகூரத்தக்கது.

24 ஆண்டுகளுக்குப் பிறகு காமன்வெல்த்

கேம்ஸில் மீண்டும் கிரிக்கெட்!

24 ஆண்டுகளுக்குப் பிறகு காமன்வெல்த் கேம்ஸில் கிரிக்கெட் இடம்பெற்று உள்ளது.

2022 காமன்வெல்த் விளையாட்டு போட்டிகள்  இங்கிலாந்தின் பர்மிங்ஹாமில் நடைபெறவுள்ளது.

இதில் மகளிர் கிரிக்கெட் இடம்பெற்றுள்ளது. எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் நடைபெறவுள்ள முதல் ஆட்டத்தில் இந்தியா-ஆஸ்திரேலியா மகளிர் அணிகள் மோதுகின்றன. கடைசியாக 1998இல் மலேசியாவின் கோலாலம்பூரில் நடைபெற்ற காமன்வெல்த்தில் ஆடவர் கிரிக்கெட் அணி இடம்பிடித்தது.

அதன் பிறகு சில காரணங்களால் கிரிக்கெட் இடம்பெறவில்லை. இந்நிலையில், 2022 காமன்வெல்த்தில் முதல் முறையாக மகளிர் கிரிக்கெட் போட்டி சேர்க்கப்பட்டுள்ளது.

பெங்களூரு அணியுடனான நினைவை பகிர்ந்த கோலி!

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்சிபி) அணியில் நான் தேர்வு செய்யப்பட்ட தருணம் மறக்கவே இயலாது என்று அந்த அணியின் முன்னாள் கேப்டன் கோலி நெகிழ்ந்தார்.

ஆர்சிபி வெளியிட்டுள்ள பாட்காஸ்டில் அவர் பேசியிருப்பதாவது:

என்னை ஆர்சிபி அணிக்காக தேர்வு செய்யப்பட்ட தருணத்தை மறக்கவே முடியாது. நாங்கள் அப்போது யு-19 உலகக் கோப்பைப் போட்டியில் பங்கேற்பதற்காக மலேசியாவில் இருந்தோம். அப்போது ஏலத்தில் பங்கேற்பதற்கு கட்டுப்பாடுகள் இருந்தன. என்னை நம்ப முடியாத விலைக்கு ஏலத்தில் எடுத்தபோது நாங்கள் நிஜமாக நம்பவே இல்லை. அந்தத் தருணத்தை நினைத்தாலே வேடிக்கையாக இருக்கிறது என்று அதில் பேசியிருக்கிறார் கோலி.

14 சீசன் ஐபிஎல் நடந்து முடிந்திருந்தாலும் கோலி தலைமையிலான பெங்களூரு அணி ஒரு முறை கூட சாம்பியன் பட்டம் வெல்ல முடியவில்லை.

2009, 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் பெங்களூரு அணி இரண்டாவது இடம் பிடித்தது. கடந்த சீசனை தொடர்ந்து ஆர்சிபி அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து விலகுவதாக கோலி அறிவித்தார்.

இதுவரை ஐபிஎல் போட்டியில் 207 ஆட்டங்களில் விளையாடியுள்ள கோலி, 6,283 ரன்களை குவித்துள்ளார். மேலும் 5 சதங்களையும் 42 அரை சதங்களையும் பதிவு செய்துள்ளார். அதிக ரன்களை குவித்த வீரர் என்ற சாதனைக்கு சொந்தக்காரரும் கோலி தான்.

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் ஐசிசி தரவரிசை

இரண்டாவது இடத்தில் 2 இந்திய வீராங்கனைகள்

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் ஐசிசி தரவரிசை பட்டியலில் இந்திய அணியின் கேப்டன் மிதாலி ராஜ் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

ஆஸ்திரேலியாவின் அலிசா ஹெலி 750 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளார்.

இந்திய அணியின் மற்றொரு வீராங்கனை ஸ்மிருதி மந்தனா 710 புள்ளிகளுடன் 6-ஆவது இடத்தில் உள்ளார்.

ஒரு நாள் மகளிர் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் ஆஸ்திரேலியாவின் ஜெஸ் ஜோனசன் முதலிடத்திலும், இந்தியாவின் ஜூலன் கோஸ்வாமி இரண்டாவது இடத்திலும் உள்ளனர்.

ஒரு நாள் ஆல்ரவுண்டர் தரவரிசையில் இந்திய வீராங்கனை தீப்தி சர்மா 4-ஆவது இடத்தில் உள்ளார்.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment