Advertisment

IPL Auction Highlights: ஐ.பி.எல் மெகா ஏலம் நிறைவு; ஏமாற்றத்துடன் விடைபெற்ற சுரேஷ் ரெய்னா

IPL 2022 Mega Auction Updates: ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் (5,528 ரன்கள்) எடுத்த வீரர்கள் பட்டியலில் "சுரேஷ் ரெய்னா" நான்காவது இடத்தில் உள்ளார்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
ipl auction 2022 live updates in tamil

IPL Mega Auction 2022 Tamil News: 15-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் 2 நாள் ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நேற்று சனிக்கிழமை மற்றும் இன்று ஞாயிற்று கிழமை நடைபெற்றது. ஏலப்பட்டியலில் முதலில் 590 வீரர்கள் இடம் பெற்றிருந்த நிலையில், கடைசி நாளில் 19 வயதுக்குட்பட்டோருக்கான கிரிக்கெட்டில் விளையாடிய 10 வீரர்கள் சேர்க்கப்பட்டதால் எண்ணிக்கை 600 ஆக உயர்ந்தது. இதில் 377 பேர் இந்தியர்கள் ஆவர்.

Advertisment

ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளைச் சேர்ந்த நிர்வாகிகள், பயிற்சியாளர்கள் தங்களிடம் இருந்த இருப்புத்தொகைக்கு ஏற்ப கணக்கு போட்டு வீரர்களை ஏலத்தில் ஆர்வமுடன் எடுத்தனர்.

எதிர்பார்த்தது போலவே இந்திய இளம் விக்கெட் கீப்பர் இஷான் கிஷன், வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், மிடில் வரிசை பேட்ஸ்மேன் ஸ்ரேயாஸ் அய்யர், ஆல்-ரவுண்டர் ஷா்துல் தாக்குர் ஆகியோர் அதிக விலைக்கு வாங்கப்பட்டனர். தீபக் சாஹரைத் தக்கவைத்துக் கொள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரூ.14 கோடி வழங்கியது. ஆனால், அந்த அணியை அதை பின்னுக்குத் தள்ளி மும்பை இந்தியன்ஸ் அணி, இஷான் கிஷனுக்காக ரூ.15.25 கோடியை வாரி வழங்கியது.

இந்த மெகா ஏலத்தில் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் இளம் வீரர்களை வாங்க ஆர்வம் காட்டி வந்த நிலையில், முன்னாள் இந்திய பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா எந்த அணியாலும் வாங்கப்படாமல் போனார். அவர் தனது அடிப்படை விலை ரூ. 2 கோடி என குறிப்பிட்டு இருந்தார். ஆனால் அவர் மீது எந்த அணியும் ஆர்வம் காட்டவில்லை.

ஐபிஎல் ஏலத்தில் ரெய்னா முதல் முறையாக விற்கப்படாமல் போனார் என்பது இதுவே முதல்தடவை ஆகும். அவர் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் (5,528 ரன்கள்) எடுத்த வீரர்கள் பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளார். அவருக்கு முன்னால் விராட் கோலி, ஷிகர் தவான் மற்றும் ரோஹித் சர்மா ஆகிய வீரர்கள் உள்ளனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil • 22:15 (IST) 13 Feb 2022
  10 அணிகளுக்கான மொத்த வீரர்கள் பட்டியல் பின்வருமாறு!

  சென்னை சூப்பர் கிங்ஸ்:

  ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, மொயீன் அலி, எம்எஸ் தோனி, ரவீந்திர ஜடேஜா, ஷிவம் துபே, தீபக் சாஹர், டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, கேஎம் ஆசிப், துஷார் தேஷ்பாண்டே, மகேஷ் தீக்ஷனா, என் ஜெகதீசன், ஹரிகேஷ்பதி, நிஷாந்த், சுப்ரான்ஷுபதி சௌத்ரி, சிமர்ஜீத் சிங், ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், பகத் வர்மா, பிரசாந்த் சோலங்கி, கிறிஸ் ஜோர்டான், டுவைன் பிரிட்டோரியஸ், டெவோன் கான்வே, ஆடம் மில்னே, மிட்செல் சான்ட்னர்.

  டெல்லி கேபிட்டல்ஸ்

  டேவிட் வார்னர், பிருத்வி ஷா, மிட்செல் மார்ஷ், ரிஷப் பந்த், சர்பராஸ் கான், கே.எஸ்.பாரத், மன்தீப் சிங், அக்சர் படேல், ஷர்துல் தாக்கூர், குல்தீப் யாதவ், அன்ரிச் நார்ட்ஜே, கமலேஷ் நாகர்கோடி, முஸ்தாபிசுர் ரஹ்மான், சேத்தன் சகாரியா, கலீல் அஹ்மத், கலீல் அகமது , ரிபால் படேல், யாஷ் துல், விக்கி ஓஸ்ட்வால், லுங்கி என்கிடி, டிம் சீஃபர்ட், பிரவீன் துபே, ரோவ்மேன் பவல், லலித் யாதவ்.

  குஜராத் டைட்டன்ஸ்:

  ஷுப்மன் கில், ஜேசன் ராய், விருத்திமான் சாஹா, அபினவ் மனோகர், விஜய் சங்கர், ஹர்திக் பாண்டியா, ராகுல் டெவாடியா, டொமினிக் டிரேக்ஸ், ரஷித் கான், முகமது ஷமி, லாக்கி பெர்குசன், யாஷ் தயால், ஜெயந்த் யாதவ், ஆர் சாய் கிஷோர், அல் நூர் அஹ்மத், அல் நூர் அஹ்மத் ஜோசப், பிரதீப் சங்வான், டேவிட் மில்லர், மேத்யூ வேட், குர்கீரத் சிங், பி சாய் சுதர்ஷன்.

  கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

  வெங்கடேஷ் ஐயர், நிதிஷ் ராணா, ஷ்ரேயாஸ் ஐயர், ஷெல்டன் ஜாக்சன், அஜிங்க்யா ரஹானே, ரின்கு சிங், ஆண்ட்ரே ரஸ்ஸல், சுனில் நரைன், பாட் கம்மின்ஸ், சிவம் மவி, வருண் சக்ரவர்த்தி, சாம் பில்லிங்ஸ், அனுகுல் ராய், ரசிக் சலாம், அபிஜேத் சலாம். சிங், அமன் கான், ரமேஷ் குமார், அசோக் ஷர்மா, டிம் சவுத்தி, அலெக்ஸ் ஹேல்ஸ், முகமது நபி, உமேஷ் யாதவ், பி இந்திரஜித், சமிகா கருணாரத்னே.

  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:

  கேஎல் ராகுல், குயின்டன் டி காக், மனிஷ் பாண்டே, தீபக் ஹூடா, மார்கஸ் ஸ்டோனிஸ், க்ருனால் பாண்டியா, ஜேசன் ஹோல்டர், கே கவுதம், ரவி பிஷ்னோய், அவேஷ் கான், மார்க் வூட், துஷ்மந்த சமீரா, அங்கித் ராஜ்பூத், ஷாபாஸ் நதீம், மொஹ்சின் கான், ஆயுஷ் படோனி, கரண் ஷர்மா, மயங்க் யாதவ், கைல் மேயர்ஸ், கே கௌதம், எவின் லூயிஸ்.

  மும்பை இந்தியன்ஸ்:

  ரோஹித் சர்மா, இஷான் கிஷன், சூர்யகுமார் யாதவ், டெவால்ட் ப்ரீவிஸ், கீரன் பொல்லார்ட், ஜஸ்பிரித் பும்ரா, எம் அஷ்வின், பசில் தம்பி, ஜெய்தேவ் உனத்கட், மயங்க் மார்கண்டே, சஞ்சய் யாதவ், ராமன்தீப் சிங், ஆர்யன் ஜூயல், அர்ஜுன் டெண்டுல்கர், திலக் வர்மா, ஹிருத்திக் வர்மா , ராகுல் புத்தி, அர்ஷத் கான், டைமல் மில்ஸ், ஜோஃப்ரா ஆர்ச்சர், ஃபேபியன் ஆலன், டேனியல் சாம்ஸ், அன்மோல்ப்ரீத் சிங், டிம் டேவிட், ரிலே மெரிடித்.

  பஞ்சாப் கிங்ஸ்:

  ஷிகர் தவான், மயங்க் அகர்வால், ஜானி பேர்ஸ்டோவ், லியாம் லிவிங்ஸ்டோன், ஜிதேஷ் சர்மா, பிரப்சிம்ரன் சிங், ஒடியன் ஸ்மித், ஷாருக் கான், ஹர்ப்ரீத் ப்ரார், ககிசோ ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங், இஷான் போரல், சந்தீப் ஷர்மா, அதர்வ தாடேரோ , அன்ஷ் படேல், ராஜ் அங்கத் பாவா, பென்னி ஹோவெல், ரிஷி தவான், பானுகா ராஜபக்சே, பால்தேஜ் சிங், ரிட்டிக் சாட்டர்ஜி, நாதன் எல்லிஸ், பிரேராக் மன்காட்.

  ராஜஸ்தான் ராயல்ஸ்:

  தேவ்தத் படிக்கல், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன், ஜோஸ் பட்லர், ஷிம்ரோன் ஹெட்மியர், ரியான் பராக், ஆர் அஷ்வின், டிரென்ட் போல்ட், யுஸ்வேந்திர சாஹல், பிரசித் கிருஷ்ணா, கே.சி கரியப்பா, நவ்தீப் சைனி, தேஜஸ் பரோகா, அனுனய் சிங், ஜுரல் சென்னாய் சிங், குல்வ்தீப். , குல்தீப் யாதவ், ஷுபம் கர்வால், நாதன் கூல்டர்-நைல், ரஸ்ஸி வான் டெர் டுசென், ஜேம்ஸ் நீஷம், டேரில் மிட்செல், கருண் நாயர், ஓபேட் மெக்காய்.

  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

  ஃபாஃப் டு பிளெசிஸ், விராட் கோலி, கிளென் மேக்ஸ்வெல், அனுஜ் ராவத், தினேஷ் கார்த்திக், ஷாபாஸ் அகமது, வனிந்து ஹசரங்கா, ஹர்ஷல் படேல், ஜோஷ் ஹேசில்வுட், முகமது சிராஜ், ஆகாஷ் தீப், சுயாஷ் பிரபுதேசாய், லுவ்னித் சிசோடியா, அனிஸ்வர் கசோடியா, அனிஸ்வர் கசோடியா, கர்ன் சர்மா, டேவிட் வில்லி, சித்தார்த் கவுல், சாமா மிலிந்த், மஹிபால் லோம்ரோர், ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட், ஃபின் ஆலன்.

  சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

  அபிஷேக் சர்மா, ராகுல் திரிபாதி, கேன் வில்லியம்சன், நிக்கோலஸ் பூரன், ஐடன் மார்க்ரம், பிரியம் கார்க், அப்துல் சமத், வாஷிங்டன் சுந்தர், மார்கோ ஜான்சன், புவனேஷ்வர் குமார், ஜே சுசித், ஸ்ரேயாஸ் கோபால், கார்த்திக் தியாகி, டி நடராஜன், உம்ரான் மாலிக், சௌரப் மாலிக், , ஷஷாங்க் சிங், சீன் அபோட், ஆர் சமர்த், ஜே சுசித், ரொமாரியோ ஷெப்பர்ட், விஷ்ணு வினோத், க்ளென் பிலிப்ஸ், ஃபசல்ஹாக் ஃபரூக்கி. • 21:39 (IST) 13 Feb 2022
  ஐபிஎல் 2022க்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வீரர்கள் விபரம் • 21:38 (IST) 13 Feb 2022
  ஐபிஎல் 2022க்கான மும்பை இந்தியன்ஸ் அணி!

  ஐபிஎல் 2022க்கான மும்பை இந்தியன்ஸ் அணி. • 21:34 (IST) 13 Feb 2022
  ஐபிஎல் 2022 ஏலத்தில் 10 அணிகளால் வாங்கப்படாத வீரர்கள் விபரம்!

  சுரேஷ் ரெய்னா

  ஸ்டீவ் ஸ்மித்

  ஷகிப் அல் ஹசன்

  அடில் ரஷித்

  முஜீப் சத்ரன்

  இம்ரான் தாஹிர்

  ஆடம் ஜம்பா

  அமித் மிஸ்ரா

  ரஜத் படிதார்

  முகமது அசாருதீன்

  விஷ்ணு சோலங்கி

  எம் சித்தார்த்

  சந்தீப் லமிச்சனே

  சேதேஷ்வர் புஜாரா

  டேவிட் மாலன்

  மார்னஸ் லாபுசாக்னே

  இயோன் மோர்கன்

  ஆரோன் பிஞ்ச்

  சௌரப் திவாரி

  இஷாந்த் சர்மா

  ஷெல்டன் காட்ரெல்

  தப்ரைஸ் ஷம்சி

  கைஸ் அகமது

  இஷ் சோதி

  விராட் சிங்

  சச்சின் பேபி

  ஹிம்மத் சிங்

  ஹர்னூர் சிங்

  ரிக்கி புய்

  விக்கி ஓஸ்ட்வால்

  வாசு வட்ஸ்

  அர்சான் நாக்வாஸ்வல்லா

  யாஷ் தாக்கூர்

  ஆகாஷ் சிங்

  முஜ்தபா யூசுப்

  சரித் அசலங்க

  ஜார்ஜ் கார்டன்

  பென் மெக்டெர்மாட்

  ரஹ்மானுல்லா குர்பாஸ்

  சமீர் ரிஸ்வி

  தன்மய் அகர்வால்

  டாம் கோலர்-காட்மோர்

  சந்தீப் வாரியர்

  ரீஸ் டோப்லி

  ஆண்ட்ரூ டை

  பிரசாந்த் சோப்ரா

  பங்கஜ் ஜெய்ஸ்வால்

  யுவராஜ் சுடாசமா

  அபூர்வ் வான்கடே

  அதர்வா அன்கோலேகர்

  மிதுன் சுதேசன்

  பங்கஜ் ஜஸ்வால்

  பென் துவர்ஷுயிஸ்

  மார்ட்டின் குப்டில்

  பென் கட்டிங்

  ரோஸ்டன் சேஸ்

  பவன் நேகி

  தவால் குல்கர்னி

  கேன் ரிச்சர்ட்சன்

  லாரி எவன்ஸ்

  கென்னர் லூயிஸ்

  பிஆர் ஷரத்

  ஹேடன் கெர்

  ஷம்ஸ் முலானி

  சௌரப் குமார்

  துருவ் படேல்

  அதிட் ஷெத்

  டேவிட் வைஸ்

  சுஷாந்த் மிஸ்ரா

  முசரபானி ஆசீர்வாதம்

  கௌஷல் தம்பே

  நினாத் ரத்வா

  அமித் அலி

  அசுதோஷ் சர்மா

  கிசர் தஃபேதார்

  ரோஹன் ராணா • 21:15 (IST) 13 Feb 2022
  ஐபிஎல் 2022 மெகா ஏலம் முடிவுக்கு வந்தது; ஏலத்தின் முடிவில் அணிகள்! • 20:17 (IST) 13 Feb 2022
  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இதுவரை...!

  ராகுல் புத்தி 20 லட்சத்துக்கு வாங்கியது மும்பை அணி.

  டிம் சௌதி 1.5 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா அணி.

  குர்கீரத் சிங் 50 லட்சத்துக்கு வாங்கியது குஜராத் டைட்டன்ஸ்.

  துருவ் ஜுரெல் 20 லட்சத்துக்கு வாங்கியது ராஜஸ்தான் அணி.

  அதர்வா டெய்டு 20 லட்சத்துக்கு வாங்கியது பஞ்சாப் அணி.

  ஃபசல்பக் ஃபரூக்கி 50 லட்சத்துக்கு வாங்கியது ஐதராபாத் அணி.

  நாதன் எல்லிஸ் 75 லட்சத்துக்கு வாங்கியது பஞ்சாப் அணி.

  கிளென் பிலிப்ஸ் 1.5 கோடிக்கு வாங்கியது ஐதராபாத் அணி.

  கருன் நாயர் 1.4 கோடிக்கு வாங்கியது ராஜஸ்தான் அணி.

  ஈவின் லீவிஸ் 2 கோடிக்கு வாங்கியது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ். • 19:58 (IST) 13 Feb 2022
  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் தற்போது வாங்கப்பட்ட வீரர்கள் பட்டியல்!

  விஷ்ணு வினோத் 50 லட்சத்துக்கு வாங்கியது ஐதராபாத் அணி.

  கிறிஸ் ஜோர்டன் 3.6 கோடிக்கு வாங்கியது சென்னை அணி.

  லுங்கி இங்கிடி 50 லட்சத்துக்கு வாங்கியது டெல்லி அணி.

  கரன் ஷர்மா 50 லட்சத்துக்கு வாங்கியது பெங்களூரு அணி.

  அலெக்ஸ் ஹேல்ஸ்1.5 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா அணி. • 19:55 (IST) 13 Feb 2022
  ஜெகதீசன் - 20 லட்சம் - சென்னை அணி!

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் தமிழக வீரர் ஜெகதீசன் ரூ.20 லட்சத்துக்கு வாங்கியது சென்னை அணி. • 19:51 (IST) 13 Feb 2022
  ஹரி நிஷாந்த் - 20 லட்சம் - சென்னை அணி!

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் தமிழக வீரர் ஹரி நிஷாந்த் ரூ 20 லட்சத்துக்கு சென்னை அணி வாங்கியது. • 19:49 (IST) 13 Feb 2022
  மேத்யூ வேட் - 2.4 கோடி - குஜராத்!

  நேற்றைய ஏலத்தில் விற்கப்படாத மேத்யூ வேட் - இன்று ரூ2.4 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் வாங்கியது. • 19:35 (IST) 13 Feb 2022
  விருத்திமான் சஹா - 1.9 கோடி - குஜராத் டைட்டன்ஸ்!

  நேற்றைய ஏலத்தில் விற்கப்படாத விருத்திமான் சஹா - இன்று 1.9 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் வாங்கியது. • 19:34 (IST) 13 Feb 2022
  சாம் பில்லிங்ஸ் - 2 கோடி - கொல்கத்தா அணி!

  நேற்றைய ஏலத்தில் விற்கப்படாத இங்கிலாந்து வீரர் சாம் பில்லிங்ஸ் - இன்று ரூ. 2 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியது. • 19:33 (IST) 13 Feb 2022
  டேவிட் மில்லர் - 3 கோடி - குஜராத் டைட்டன்ஸ்!

  நேற்றைய ஏலத்தில் விற்கப்படாத தென்னாப்பிரிக்கா வீரர் டேவிட் மில்லர் ரூ. 3 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் வாங்கியது. • 19:20 (IST) 13 Feb 2022
  சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் தற்போதுவரை வாங்கப்பட்டுள்ள வீரர்கள் பட்டியல்!

  முதல்நாள் ஏலத்தில்...

  1. அம்பதி ராயாடு (ரூ 6.75 கோடி)

  2. டுவைன் பிராவோ (4.4 கோடி)

  3. ராபின் உத்தப்பா (ரூ 2 கோடி)

  4. தீபக் சாஹர் (ரூ 14 கோடி)

  5. கே.எம்.ஆசிப் (ரூ. 20 லட்சம்)

  6. துஷார் தேஷ்பாண்டே (ரூ 20 லட்சம்)

  2ம் நாள் ஏலத்தில்...

  1. சிவம் துபே - 4 கோடி

  2. மகேஷ் தீக்ஷனா - 70 லட்சம்

  3. ராஜ்வர்தன் ஹங்கர்கேகர் - 1.5 கோடி

  4. சிமர்ஜீத் சிங் - 20 லட்சம்

  5. டெவோன் கான்வே - ரூ 1 கோடி

  6. டுவைன் பிரிட்டோரியஸ் - ரூ 50 லட்சம்

  7. மிட்செல் சான்ட்னர் - 1.9 கோடி

  8. ஆடம் மில்னே - ரூ 1.9 கோடி

  9. சுப்ரான்சு சேனாபதி - ரூ 20 லட்சம்

  10. முகேஷ் சவுத்ரி - 20 லட்சம்

  11. பிரசாந்த் சோலங்கி - 1.2 கோடி • 18:49 (IST) 13 Feb 2022
  அணி நிலை: இப்போது அனைத்து அணிகளுக்கும் மீதமுள்ள பணத்தொகை! • 18:27 (IST) 13 Feb 2022
  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் தற்போது வரை!

  இந்திய வீரர் பிரவின் துபே 50 லட்சத்துக்கு வாங்கியது டெல்லி கேபிடல்ஸ்.

  இந்திய வீரர் ப்ரேக் மங்கத் 20 லட்சத்துக்கு வாங்கியது பஞ்சாப் கிங்ஸ் அணி

  இந்திய வீரர் சுயாஷ் பிரபுதேசாய் 30 லட்சத்துக்கு வாங்கியது பெங்களூர் அணி

  முகேஷ் சவுத்ரி 20 லட்சத்துக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ்.

  ரஷிக் தார் 20 லட்சத்துக்கு வாங்கியது கொல்கத்தா அணி.

  சாமா மிலைண்ட் 25 லட்சத்துக்கு வாங்கியது பெங்களூரு அணி.

  பிரசாந்த் சொலான்கி 1.2 கோடிக்கு வாங்கியது சென்னை அணி.

  ஆஸ்திரேலிய வீரர் ஷான் அப்பாட் 2.4 கோடிக்கு வாங்கியது ஐதராபாத் அணி.

  மேற்கிந்திய தீவுகள் வீரர் அல்ஜரி ஜோசப் 2.4 கோடிக்கு வாங்கியது குஜராத் டைட்டன்ஸ்.

  ஆஸ்திரேலியா வீரர் ரிலி மெரிடித் 1 கோடிக்கு வாங்கியது மும்பை அணி.

  ஆயுஷ் பதோனி 20 லட்சத்துக்கு வாங்கியது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்.

  அனீஷ்வர் கௌதம் 20 லட்சத்துக்கு வாங்கியது பெங்களூரு அணி.

  பாபா இந்திரஜித் 20 லட்சத்துக்கு வாங்கியது கொல்கத்தா அணி.

  இலங்கை வீரர் சமிகா கருனாரத்னே 20 லட்சத்துக்கு வாங்கியது கொல்கத்தா அணி.

  ஆர் சமர்த் 20 லட்சத்துக்கு வாங்கியது ஐதராபாத் அணி.

  பிரதீப் சங்வான் 20 லட்சத்துக்கு வாங்கியது குஜராத் டைட்டன்ஸ்.

  ரித்திக் சட்டர்ஜி 20 லட்சத்துக்கு வாங்கியது பஞ்சாப் அணி.

  கைல் மேயர்ஸ் 50 லட்சத்துக்கு வாங்கியது லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ்.

  ஷசான்க் சிங் 20 லட்சத்துக்கு வாங்கியது ஐதராபாத் அணி. • 17:49 (IST) 13 Feb 2022
  அணிகள் அதிக விலை கொடுத்து வாங்கிய வீரர்கள் பட்டியல்!

  மும்பை இந்தியன்ஸ்

  15.25 கோடிக்கு இஷான் கிஷன்: கிஷன் ஆக்ரோஷமான தொடக்க ஆட்டக்காரராகவும் விக்கெட் கீப்பராகவும் பொருந்துகிறார்.

  சென்னை சூப்பர் கிங்ஸ்

  தீபக் சாஹர் ரூ. 14 கோடிக்கு: பவர்பிளே ஸ்பெஷலிஸ்ட் மற்றும் சிறந்த ளோ - ஆர்டர் பேட்ஸ்மேன். அணியின் சிறந்த வேகப்பந்து வீச்சு விருப்பமாகவும் சாஹர் இருந்துள்ளார்.

  டெல்லி கேபிட்டல்ஸ்

  ஷர்துல் தாக்குர் ரூ. 10.75 கோடி: ஷர்துல் பார்ட்னர்ஷிப்-பிரேக்கராகவும், பேட்ஸ்மேனாக ஆர்டரைக் குறைக்கும் ஆட்டத்தை மாற்றியவராகவும் தாமதமாக வெளிப்படுத்தப்பட்டுள்ளார்.

  கொல்கத்தா

  12.25 கோடிக்கு ஷ்ரேயாஸ் ஐயர்: கொல்கத்தா அணியில் கேப்டன் பதவி காலியாக உள்ள நிலையில், ஷ்ரேயாஸ் ஐயர் முக்கிய தேர்வாக இருக்கலாம்.

  ஐதராபாத்

  8.75 கோடிக்கு வாஷிங்டன் சுந்தர்: பவர்பிளேயில் பந்துவீசக்கூடிய ஒரு ஆஃப் ஸ்பின்னர் மற்றும் ஆர்டரைக் குறைக்கும் திறமையான பேட்ஸ்மேன்.

  ஆர்சிபி

  ஹர்ஷல் படேல் மற்றும் வனிந்து ஹசரங்க, இருவரும் ரூ. 10.75 கோடிக்கு வாங்கியுள்ளது.

  பஞ்சாப் கிங்ஸ்

  காகிசோ ரபாடா ரூ 9.25 கோடி, ஷாருக் கான் ரூ 9 கோடி: ரபாடா வேகப்பந்து வீச்சு ராயல்டி, அதே சமயம், கான் ஃபினிஷராக தனது நற்பெயரை உயர்த்திக் கொண்டுள்ளார்.

  ராஜஸ்தான் ராயல்ஸ்

  பிரசித் கிருஷ்ணா ரூ. 10 கோடிக்கு: இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் ஒருநாள் போட்டித் தொடர் வேகப்பந்து வீச்சாளராக தனது பங்கை மேம்படுத்தியது.

  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்

  ரூ. 10 கோடிக்கு அவேஷ் கான்: விக்கெட் வீழ்த்தியவர், கடந்த ஆண்டு ஐபிஎல் அவருக்கு சிறந்த அனுபவம் கொடுத்தது.

  குஜராத் டைட்டன்ஸ்

  10 கோடிக்கு லாக்கி பெர்குசன்: ஒரு தாக்க பந்து வீச்சாளர், அவர் போட்டியின் எல்லா நேரத்திலும் விக்கெட் எடுக்க கூடியவராக இருப்பார். • 17:12 (IST) 13 Feb 2022
  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் தற்போது!

  ஆடம் மில்னே - ₹1.9 கோடிக்கு வாங்கியது சென்னை அணி.

  டைமல் மில்ஸ் - ₹1.5 கோடிக்கு வாங்கியது மும்பை அணி.

  ஓபட் மெக்காய் - ₹75 லட்சத்துக்கு வாங்கியது ராஜஸ்தான் அணி.

  வைபவ் அரோரா - ₹2 கோடிக்கு வாங்கியது பஞ்சாப் அணி • 16:59 (IST) 13 Feb 2022
  சிங்கப்பூர் வீரர் டிம் டேவிட் 8.25 கோடி மும்பை இந்தியன்ஸ்!

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் சிங்கப்பூர் வீரர் டிம் டேவிட் 8.25 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார் • 16:55 (IST) 13 Feb 2022
  தொடர் நாயகன் ஏலம் போகவில்லை!

  ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் நடந்த பிக்பாஷ் லீக் தொடர் நாயகன் பென் மெக்டெர்மோட் ஏலம் போகவில்லை • 16:54 (IST) 13 Feb 2022
  சுப்ரன்ஷு சேனாபதி - 20 லட்சம்!

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இந்திய வீரர் சுப்ரன்ஷு சேனாபதியை 20 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் வாங்கியது • 16:50 (IST) 13 Feb 2022
  unsold வீரர்கள்!

  அபூர்வ் வான்கடே, சமீர் ரிஸ்வி, டாம் கோஹ்லெர், தன்மய் அகர்வால், சந்தீப் வாரியர், ஆண்ட்ரூ டை, ரீஸ் டோப்லே ஆகிய வீரர்களை யாரும் வாங்க முன்வரவில்லை • 16:32 (IST) 13 Feb 2022
  டேனியல் சாம்ஸ் - 2.6 கோடி - மும்பை இந்தியன்ஸ்!

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேனியல் சாம்ஸ் - ₹2.6 கோடிக்கு வாங்கியது மும்பை அணி! • 16:30 (IST) 13 Feb 2022
  மிட்செல் சாண்ட்னர் - 1.9 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ்!

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் நியூசிலாந்து வீரர் மிட்செல் சாண்ட்னர் - ₹1.9 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. • 16:29 (IST) 13 Feb 2022
  ஷெர்ஃபேன் ரூதர்போர்ட் - 1 கோடி - பெங்களூரு!

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் ஷெர்ஃபேன் ரூதர்போர்ட் 1 கோடிக்கு பெங்களூரு அணி வாங்கியது • 16:24 (IST) 13 Feb 2022
  டுவைன் பிரிடோரியஸ் - 50 லட்சம் சென்னை சூப்பர் கிங்ஸ்!

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் டுவைன் பிரிடோரியஸ் - ₹50 லட்சத்துக்கு வாங்கியது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி! • 16:23 (IST) 13 Feb 2022
  ரிஷி தவான் - 55 லட்சம் - பஞ்சாப் கிங்ஸ்!

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இந்திய வீரர் ரிஷி தவான் - ₹55 லட்சத்துக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது. • 16:21 (IST) 13 Feb 2022
  ஜோப்ரா ஆர்சர் - மும்பை இந்தியன்ஸ் - 8 கோடி!

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இங்கிலாந்து வீரர் ஜோப்ரா ஆர்சர் மும்பை இந்தியன்ஸ் அணியால் 8 கோடிக்கு வாங்கப்பட்டார்! • 16:15 (IST) 13 Feb 2022
  கருண் நாயர், எவின் லூயிஸ், அலெக்ஸ் ஹால்ஸ் UNSOLD!

  கருண் நாயர், எவின் லூயிஸ், அலெக்ஸ் ஹால்ஸ் ஆகியோரை எந்த அணியும் வாங்க முன்வரவில்லை • 16:08 (IST) 13 Feb 2022
  டேவோன் கான்வே - 1 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ்!

  நியூசிலாந்து வீரர் டேவோன் கான்வே சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 1 கோடிக்கு வாங்கபட்டார். • 16:07 (IST) 13 Feb 2022
  80 லட்சம் - ஃபின் ஆலன் - பெங்களூரு!

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் நியூசிலாந்து வீரர் ஃபின் ஆலன் 80 லட்சத்துக்கு பெங்களூரு அணி வாங்கியது. • 15:48 (IST) 13 Feb 2022
  சிமர்ஜீத் சிங் - 20 லட்சம் சென்னை சூப்பர் கிங்ஸ்!

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இந்திய வீரர் சிமர்ஜீத் சிங் - ₹20 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது • 15:47 (IST) 13 Feb 2022
  அர்ஸன், யாஷ் தாகூர், வாசு UNSOLD!

  இந்திய வீரர்கள் அர்ஸன், யாஷ் தாகூர், வாசு ஆகியோரை எந்த அணியும் ஏலம் எடுக்கவில்லை • 15:43 (IST) 13 Feb 2022
  அனுகுல் ராய் - 20 லட்சம் - கொல்கத்தா!

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் அனுகுல் ராய் - ₹20 லட்சத்துக்கு வாங்கியது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி • 15:42 (IST) 13 Feb 2022
  விக்கி ஓஸ்ட்வால் ஏலம் போகவில்லை!

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் U19 உலகக்கோப்பை தொடரில் ஜொலித்த இந்திய வீரர் விக்கி ஓஸ்ட்வால் ஏலம் போகவில்லை • 15:42 (IST) 13 Feb 2022
  தர்ஷன் நல்கண்டே - 20 லட்சம் - குஜராத் டைடன்ஸ்!

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் தர்ஷன் நல்கண்டே - ₹20 லட்சத்துக்கு குஜராத் டைடன்ஸ் வாங்கியது! • 15:41 (IST) 13 Feb 2022
  சஞ்சய் யாதவ் - 50 லட்சம் - மும்பை இந்தியன்ஸ்!

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இந்திய வீரர் சஞ்சய் யாதவ் - ₹50 லட்சத்துக்கு மும்பை இந்தியன்ஸ் வாங்கியது. • 15:40 (IST) 13 Feb 2022
  மஹிபால் லோம்ரோர் - 95 லட்சம் ஆர்.சி.பி !

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் மஹிபால் லோம்ரோர் - ₹95 லட்சத்துக்கு ஆர்.சி.பி அணி வாங்கியது. • 15:39 (IST) 13 Feb 2022
  ராஜ் அங்கத் பாவா - 2 கோடி - பஞ்சாப் கிங்ஸ்!

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இந்திய வீரர் ராஜ் அங்கத் பாவா - ₹2 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது. • 15:21 (IST) 13 Feb 2022
  திலக் வர்மா - 1.70 கோடி - மும்பை இந்தியன்ஸ்!

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இந்திய வீரர் திலக் வர்மாவை ₹1.70 கோடிக்கு வாங்கியது மும்பை இந்தியன்ஸ் அணி • 15:16 (IST) 13 Feb 2022
  யாஷ் துல் - டெல்லி கேபிடல்ஸ் - 50 லட்சம் !

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் U19 உலகக்கோப்பையை வென்ற இந்திய அணியின் கேப்டன் யாஷ் துல் ₹50 லட்சத்துக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி வாங்கியது • 15:14 (IST) 13 Feb 2022
  ரிபால் படேல் - 20 லட்சம் - டெல்லி கேபிடல்ஸ்!

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இந்திய வீரர் ரிபால் படேலை ₹20 லட்சத்திற்கு வாங்கியது டெல்லி கேபிடல்ஸ் அணி. • 15:11 (IST) 13 Feb 2022
  10 ஐபிஎல் அணிகளுக்கான மீதமுள்ள தொகை!

  சிஎஸ்கே - 15.75 கோடி (12 வீரர்கள்)

  DC - 5 95 கோடி (16 வீரர்கள்)

  ஜிடி - 14.65 கோடி (13 வீரர்கள்)

  KKR - 11.10 கோடி (11 வீரர்கள்)

  LSG - 3.30 கோடி (15 வீரர்கள்)

  MI - 25.90 கோடி (10 வீரர்கள்)

  பிபிகேஎஸ் - 10.65 கோடி (14 வீரர்கள்)

  RCB - 9.25 கோடி (11 வீரர்கள்)

  SRH - 13.25 கோடி (15 வீரர்கள்) • 14:51 (IST) 13 Feb 2022
  ரின்கு சிங் - 55 லட்சம் - கொல்கத்தா!

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இந்திய வீரர் ரின்கு சிங்கை, ₹55 லட்சத்திற்கு ஏலத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்கியது. • 14:50 (IST) 13 Feb 2022
  மகேஷ் தீக்ஷனா - 70 லட்சம் - சென்னை சூப்பர் கிங்ஸ்!

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இலங்கை வீரர் மகேஷ் தீக்ஷனாவை ₹70 லட்சத்திற்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியது. • 14:49 (IST) 13 Feb 2022
  மனன் வோரா - 20 லட்சம் - லக்னோ!

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இந்திய வீரர் மனன் வோராவை, ₹20 லட்சத்திற்கு ஏலத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டார். • 14:48 (IST) 13 Feb 2022
  ஏலம் போகாத இந்திய மற்றும் அயல்நாட்டு வீரர்கள் பட்டியல்!

  பியூஸ் சாவ்லா, விராட் சிங், ஹிம்மத் சிங், சச்சின் பேபி, ஹர்னூர் சிங், ஹிமன்சு ரானா, ரிக்கி புய், கர்ண் சர்மா ஆகிய இந்திய வீரர்களை எந்த அணி நிர்வாகமும் ஏலத்தில் எடுக்கவில்லை.

  இதேபோல், நியூசிலாந்து அணி வீரர் சோதி, ஆப்கானிஸ்தான் வீரர் கயஸ் அஹ்மத் ஆகியோரை எந்த அணி நிர்வாகமும் ஏலத்தில் எடுக்கவில்லை. • 14:03 (IST) 13 Feb 2022
  நவ்தீப் சைனி - 2.60 கோடி - ராஜஸ்தான் ராயல்ஸ்

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இந்திய வீரர் நவ்தீப் சைனியை ₹2.60 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வாங்கியது • 14:03 (IST) 13 Feb 2022
  ஜெய்தேவ் உனத்கண்ட் - 1.30 கோடி - மும்பை இந்தியன்ஸ்!

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இந்திய வீரர் ஜெய்தேவ் உனத்கண்ட் ரூ.1.30 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி வாங்கியது • 14:02 (IST) 13 Feb 2022
  நேதன் கவுல்டெர் நைல் - ஷெல்டோன் காட்ரெல் UNSOLD!

  ஆஸ்திரேலியா வீரர் நேதன் கவுல்டெர் நைல் மற்றும் மேற்கிந்திய தீவுகள் வீரர் ஷெல்டோன் காட்ரெல்லை யாரும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை • 13:54 (IST) 13 Feb 2022
  சந்தீப் சர்மா - 50 லட்சம் - பஞ்சாப் கிங்ஸ்!

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இந்திய வீரர் சந்தீப் சர்மாவை ₹50 லட்சத்துக்கு பஞ்சாப் கிங்ஸ் அணி வாங்கியது • 13:54 (IST) 13 Feb 2022
  சேட்டன் சகாரியா - 4.20 கோடி - டெல்லி கேபிடல்ஸ்!

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இந்திய வீரர் சேட்டன் சகாரியாவை ₹4.20 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி வாங்கியது • 13:53 (IST) 13 Feb 2022
  லுங்கி நிகிடி UNSOLD!

  தென்னாப்பிரிக்க வீரர் லுங்கிசைனி நிகிடியை எந்த அணியும் ஏலத்தில் எடுக்க முன்வரவில்லை • 13:52 (IST) 13 Feb 2022
  துஷ்மந்த சமீரா - 2 கோடி - லக்னோ!

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இலங்கை வீரர் துஷ்மந்த சமீராவை ₹2 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியது. • 13:36 (IST) 13 Feb 2022
  சையத் கலீல் அகமது - 5.25 கோடி - டெல்லி கேபிடல்ஸ்!

  இந்திய இளம் வீரர் சையத் கலீல் அகமதுவை ₹5.25 கோடிக்கு டெல்லி கேபிடல்ஸ் அணி வாங்கியது • 13:31 (IST) 13 Feb 2022
  பஞ்சாப் கிங்ஸ் அணியில் விளையாடும் 11; உத்தேச பட்டியல்!

  தவான், அகர்வால், பேர்ஸ்டோவ், லிவிங்ஸ்டோன், ஷாருக் கான், ஒடியன் ஸ்மித், ப்ரார், ரபாடா, ராகுல் சாஹர், அர்ஷ்தீப் சிங் • 13:30 (IST) 13 Feb 2022
  இஷாந்த் சர்மா - UNSOLD!

  இந்திய வீரர் இஷாந்த் சர்மாவை ஏலம் எடுக்க எந்த அணியும் முன்வரவில்லை. • 13:19 (IST) 13 Feb 2022
  கிருஷ்ணப்பா கௌதம் - 90 லட்சம் - லக்னோ!

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இந்திய வீரர் கிருஷ்ணப்பா கௌதம் 90 லட்சத்துக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டார். ஆஃப்-ஸ்பின்னர் கிருஷ்ணப்பா கௌதம் ஐபிஎல் 2021 ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் சுமார் ரூ.9.25 கோடிக்கு வாங்கப்பட்ட இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. • 13:16 (IST) 13 Feb 2022
  கிருஷ்ணப்பா கௌதம் - 90 லட்சம் - லக்னோ!

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இந்திய வீரர் கிருஷ்ணப்பா கௌதம் 90 லட்சத்துக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டார். ஆஃப்-ஸ்பின்னர் கிருஷ்ணப்பா கௌதம் ஐபிஎல் 2021 ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் சுமார் ரூ.9.25 கோடிக்கு வாங்கப்பட்ட இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. • 13:08 (IST) 13 Feb 2022
  மார்கோ ஜான்சன் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 4.20 கோடி!

  தென்னாப்பிரிக்க வீரர் மார்கோ ஜான்சன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் 4.20 கோடிக்கு வாங்கப்பட்டார். • 12:58 (IST) 13 Feb 2022
  ஒடியன் ஸ்மித் - பஞ்சாப் கிங்ஸ் - 6 கோடி!

  ஐ.பி.எல். மெகா ஏலத்தி வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஒடியன் ஸ்மித் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 6 கோடிக்கு வாங்கப்பட்டார். • 12:56 (IST) 13 Feb 2022
  விஜய் சங்கர் - 1.40 கோடி - குஜராத்!

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இந்திய வீரர் விஜய் சங்கரை ₹1.40 கோடிக்கு குஜராத் டைடன்ஸ் அணி வாங்கியது. • 12:44 (IST) 13 Feb 2022
  ஜெயந்த் யாதவ் - குஜராத் - 1.70 கோடி

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இந்திய வீரர் ஜெயந்த் யாதவ் குஜராத் அணியால் 1.70 கோடிக்கு வாங்கப்பட்டார் • 12:40 (IST) 13 Feb 2022
  டொமினிக் டிரேக்ஸ் - குஜராத் - 1.10 கோடி!

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டொமினிக் டிரேக்ஸ் 1.10 கோடிக்கு குஜராத் அணியால் வாங்கப்பட்டார் • 12:38 (IST) 13 Feb 2022
  லியாம் லிவிங்ஸ்டோன் - பஞ்சாப் கிங்ஸ் - 11.50 கோடி!

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இங்கிலாந்து வீரர் லியாம் லிவிங்ஸ்டோன் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 11.50 கோடிக்கு வாங்கப்பட்டார் • 12:32 (IST) 13 Feb 2022
  மார்னஸ், மோர்கன், ஃபின்ச், புஜாரா மற்றும் திவாரி எந்த அணியும் வாங்கவில்லை!

  மார்னஸ் லாபுஷாக்னே, இயோன் மோர்கன், ஆரோன் பின்ச், சௌரப் திவாரி மற்றும் சேதேஷ்வர் புஜாரா ஆகிய வீரர்களை எந்த அணியும் வாங்க முன் வரவில்லை. • 12:30 (IST) 13 Feb 2022
  மந்தீப் சிங் - 1.10 கோடி - டெல்லி அணி!

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இந்திய வீரர் மந்தீப் சிங்கை ₹1.10 கோடிக்கு வாங்கியது டெல்லி அணி. • 12:29 (IST) 13 Feb 2022
  அஜிங்கியா ரஹானே - 1 கோடி - கொல்கத்தா!

  ஐ.பி.எல். மெகா ஏலத்தில் இந்திய வீரர் அஜிங்கியா ரஹானேவை ₹1 கோடிக்கு வாங்கியது கொல்கத்தா அணி • 12:26 (IST) 13 Feb 2022
  ஐடன் மார்க்ரம் - ரூ2.60 கோடி - சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி!

  2வது நாளாக நடைபெற்று வரும் ஐ.பி.எல். மெகா ஏலத்தில் தென்னாப்பிரிக்க வீரர் ஐடன் மார்க்ரமை ரூ2.60 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வாங்கியுள்ளது. • 22:01 (IST) 12 Feb 2022
  முதல் நாள் ஐபிஎல் 2022 ஏலத்தில் அணிகளால் வாங்கப்படாத வீரர்கள் பட்டியல்!

  1. டேவிட் மில்லர்

  2. சுரேஷ் ரெய்னா

  3. ஸ்டீவ் ஸ்மித்

  4. ஷகிப் அல் ஹசன்

  5. முகம்மது நபி

  6. மேத்யூ வேட்

  7. விருத்திமான் சாஹா

  8. சாம் பில்லிங்ஸ்

  9. உமேஷ் யாதவ்

  10. அடில் ரஷித்

  11. முஜீப் சத்ரன்

  12. இம்ரான் தாஹிர்

  13. ஆடம் ஜம்பா

  14. அமித் மிஸ்ரா

  15. ரஜத் படிதார்

  16 சி ஹரி நிஷாந்த்

  17. அன்மோல்பிரீத் சிங்

  18. முகமது அசாருதீன்

  19. விஷ்ணு வினோத்

  20. விஷ்ணு சோலங்கி

  21. என் ஜெகதீசன்

  22. எம் சித்தார்த்

  23. சந்தீப் லமிச்சனே • 21:58 (IST) 12 Feb 2022
  முதல் நாள் ஐபிஎல் 2022 ஏலத்தில் அணிகளால் வாங்கப்பட்ட வீரர்கள் பட்டியல் (விலையுடன்)!

  1. ஷிகர் தவான்- பஞ்சாப் கிங்ஸ் - ரூ 8.25 கோடி

  2. ரவிச்சந்திரன் அஸ்வின் – ராஜஸ்தான் ராயல்ஸ் – 5 கோடி

  3. பேட் கம்மின்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ 7.25 கோடி

  4. ககிசோ ரபாடா – பஞ்சாப் கிங்ஸ் – ரூ 9.25 கோடி

  5. டிரென்ட் போல்ட் - ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ 8 கோடி

  6. ஷ்ரேயாஸ் ஐயர் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – 12.25 கோடி

  7. முகமது ஷமி – குஜராத் டைட்டன்ஸ் – ரூ. 6.25 கோடி

  8. ஃபாஃப் டு பிளெசிஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ரூ 7 கோடி

  9. குயின்டன் டி காக் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ரூ 6.75 கோடி

  10. டேவிட் வார்னர் – டெல்லி கேப்பிடல்ஸ் – 6.25 கோடி

  11. மணீஷ் பாண்டே - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 4.60 கோடி

  12. ஷிம்ரோன் ஹெட்மியர் - ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ 8.50 கோடி

  13. ராபின் உத்தப்பா – சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ 2 கோடி

  14. ஜேசன் ராய் - குஜராத் டைட்டன்ஸ் - ரூ 2 கோடி

  15. தேவ்தத் படிக்கல் - ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ 7.75 கோடி

  16. டுவைன் பிராவோ – சென்னை சூப்பர் கிங்ஸ் – 4.40 கோடி

  17. நிதிஷ் ராணா - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ 8 கோடி

  18. ஜேசன் ஹோல்டர் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ரூ 8.75 கோடி

  19. ஹர்ஷல் படேல் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ரூ 10.75 கோடி

  20. தீபக் ஹூடா - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ரூ 5.75 கோடி

  21. வனிந்து ஹசரங்க – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் – ரூ 10.75 கோடி

  22. வாஷிங்டன் சுந்தர் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ 8.75 கோடி

  23. க்ருனால் பாண்டியா - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ரூ 8.25 கோடி

  24. மிட்செல் மார்ஷ் – டெல்லி கேப்பிடல்ஸ் – ரூ 6.50 கோடி

  25. அம்பதி ராயுடு – சென்னை சூப்பர் கிங்ஸ் – 6.75 கோடி

  26. இஷான் கிஷன் - மும்பை இந்தியன்ஸ் - ரூ 15.25 கோடி

  27. ஜானி பேர்ஸ்டோ - பஞ்சாப் கிங்ஸ் - 6.75 கோடி

  28. தினேஷ் கார்த்திக் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ரூ 5.50 கோடி

  29. நிக்கோலஸ் பூரன் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ 10.75 கோடி

  30. டி நடராஜன் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ 4 கோடி

  31. தீபக் சாஹர் – சென்னை சூப்பர் கிங்ஸ் – 14 கோடி

  32. பிரசித் கிருஷ்ணா - ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ 10 கோடி

  33. லாக்கி பெர்குசன் - குஜராத் டைட்டன்ஸ் - ரூ 10 கோடி

  34. ஜோஷ் ஹேசில்வுட் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ரூ 7.75 கோடி

  35. மார்க் வுட் -லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ரூ 7.50 கோடி

  36. புவனேஷ்வர் குமார் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ 4.20 கோடி

  37. ஷர்துல் தாக்கூர் - டெல்லி கேப்பிடல்ஸ் - ரூ 10.75 கோடி

  38. முஸ்தாபிசுர் ரஹ்மான் – டெல்லி கேபிடல்ஸ் – ரூ 2 கோடி

  39. குல்தீப் யாதவ் – டெல்லி கேப்பிடல்ஸ் – ரூ 2 கோடி

  40. யுஸ்வேந்திர சாஹல்- ராஜஸ்தான் ராயல்ஸ்- 6.50 கோடி

  41. பிரியம் கார்க் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ 20 லட்சம்

  42. அபினவ் சதராங்கனி – குஜராத் டைட்டன்ஸ் – 2.60 கோடி

  43. டெவால்ட் ப்ரீவிஸ் - மும்பை இந்தியன்ஸ் - ரூ 3 கோடி

  44. அஸ்வின் ஹெப்பர் - டெல்லி கேப்பிடல்ஸ் - ரூ 20 லட்சம்

  45. ராகுல் திரிபாதி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – 8.50 கோடி

  46. ரியான் பராக் - ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ 3.80 கோடி

  47.அபிஷேக் சர்மா – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – 6.50 கோடி

  48. சர்பராஸ் கான் - டெல்லி கேப்பிடல்ஸ் - ரூ 20 லட்சம்

  49. ஷாருக்கான் - பஞ்சாப் கிங்ஸ் - ரூ 9 கோடி

  50. சிவம் மாவி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ 7.25 கோடி

  51. ராகுல் தெவாடியா – குஜராத் டைட்டன்ஸ் – 9 கோடி

  52. கமலேஷ் நாகர்கோடி - டெல்லி கேப்பிடல்ஸ் - ரூ 1.1 கோடி

  53. ஹர்ப்ரீத் ப்ரார் - பஞ்சாப் கிங்ஸ் - ரூ 3.8 கோடி

  54. ஷாபாஸ் அகமது - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ரூ 2.4 கோடி

  55. கேஎஸ் பாரத் - டெல்லி கேப்பிடல்ஸ் - ரூ 2 கோடி

  56. அனுஜ் ராவத் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ரூ 3.4 கோடி

  57. பிரப்சிம்ரன் சிங் - பஞ்சாப் கிங்ஸ் - ரூ 60 லட்சம்

  58. ஷெல்டன் ஜாக்சன் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - ரூ 60 லட்சம்

  59. ஜிதேஷ் சர்மா - பஞ்சாப் சர்மா - ரூ 20 லட்சம்

  60. பாசில் தம்பி - மும்பை இந்தியன்ஸ் - ரூ 30 லட்சம்

  61. கார்த்திக் தியாகி – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் – ரூ 4 கோடி

  62. ஆகாஷ்தீப் - ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - ரூ 20 லட்சம்

  63. கேஎம் ஆசிப் – சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ 20 லட்சம்

  64. அவேஷ் கான் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ரூ 10 கோடி

  65. இஷான் போரல் - பஞ்சாப் கிங்ஸ் - ரூ 25 லட்சம்

  66. துஷார் தேஷ்பாண்டே – சென்னை சூப்பர் கிங்ஸ் – ரூ 20 லட்சம்

  67. அங்கித் ராஜ்பூட் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - ரூ 50 லட்சம்

  68. நூர் அகமது - குஜராத் டைட்டன்ஸ் - ரூ 30 லட்சம்

  69. முருகன் அஸ்வின் - மும்பை இந்தியன்ஸ் - ரூ 1.60 கோடி

  70. கே.சி கரியப்பா - ராஜஸ்தான் ராயல்ஸ் - ரூ 30 லட்சம்

  71. ஷ்ரேயாஸ் கோபால் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ 75 லட்சம்

  72. ஜெகதீஷா சுசித் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - ரூ 20 லட்சம்

  73. ஆர் சாய் கிஷோர் - குஜராத் டைட்டன்ஸ் - ரூ 3 கோடி • 21:46 (IST) 12 Feb 2022
  முதல் நாள் ஏலம் முடிவுக்கு வந்தது!

  இன்று பிற்பகல் 12 மணிக்கு தொடங்கிய ஐ.பி.எல். மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது முடிவடைந்தது. மீண்டும் நாளை பிற்பகல் 12 மணிக்கு 2ம் நாள் ஏலம் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. • 21:43 (IST) 12 Feb 2022
  சாய் கிஷோர் - 3 கோடி - குஜராத் அணி!

  ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் தமிழக வீரர் சாய் கிஷோர் 3 கோடிக்கு குஜராத் அணியால் வாங்கப்பட்டார். • 21:28 (IST) 12 Feb 2022
  ஷ்ரேயாஸ் கோபால் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 75 லட்சம்!

  ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் இந்திய ஷ்ரேயாஸ் கோபால் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் 75 லட்சத்துக்கு வாங்கப்பட்டார். • 21:24 (IST) 12 Feb 2022
  முருகன் அஸ்வின் - மும்பை இந்தியன்ஸ் அணி - 1.60 கோடி!

  ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் இந்திய வீரர் முருகன் அஸ்வின் 1.60 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். • 21:19 (IST) 12 Feb 2022
  அதிக விலைக்கு வாங்கப்பட்ட அன்-கேப்டு வீரர் அவேஷ் கான்!

  இந்திய வீரர் அவேஷ் கான் லக்னோ அணியால் 10 கோடி வாங்கப்பட்டார். இவர் அன்-கேப்டு வீரர்களில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட வீரர்களில் முதன்மையானவராக இருக்கிறார். • 21:08 (IST) 12 Feb 2022
  கே.எம்.ஆசிப் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு 20 லட்சம்!

  ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் இந்திய வீரர் கே.எம்.ஆசிப் 20 லட்சத்துக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். • 21:06 (IST) 12 Feb 2022
  கார்த்திக் தியாகி - 4 கோடி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

  ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் இந்திய வீரர் கார்த்திக் தியாகி 4 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டார். • 20:52 (IST) 12 Feb 2022
  அனுஜ் ராவத் - பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் - 3.40 கோடி!

  ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் இந்திய வீரர் அனுஜ் ராவத் 3.40 கோடிக்கு பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். • 20:50 (IST) 12 Feb 2022
  கேஎஸ் பாரத் - 2 கோடி - டெல்லி கேப்பிடல்ஸ்!

  ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் இந்திய வீரர் கேஎஸ் பாரத் 2 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார். • 20:44 (IST) 12 Feb 2022
  ஹர்ப்ரீத் பிரார் - 3.80 கோடி - பஞ்சாப் கிங்ஸ்!

  ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் இந்திய வீரர் ஹர்ப்ரீத் பிரார் 3.80 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். • 20:16 (IST) 12 Feb 2022
  கமலேஷ் நாகர்கோடி - 1.10 கோடி - டெல்லி கேப்பிடல்ஸ்!

  ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் இந்திய வீரர் கமலேஷ் நாகர்கோடி 1.10 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார். • 20:11 (IST) 12 Feb 2022
  ராகுல் தெவாடியா - 9 கோடிக்கு குஜராத்!

  ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் இந்திய வீரர் ராகுல் தெவாடியா 9 கோடிக்கு குஜராத் அணியால் வாங்கப்பட்டார். • 20:09 (IST) 12 Feb 2022
  பஞ்சாப் கிங்ஸ் அணி தற்போது வரை ஏலத்தில் வாங்கியுள்ள வீரர்கள் பட்டியல்!

  மயங்க் அகர்வால், ஷிகர் தவான், பேர்ஸ்டோவ், அர்ஷ்தீப், ராகுல் சாஹர், ரபாடா, ஷாருக்கான் ஆகியோரை பஞ்சாப் கிங்ஸ் அணி தற்போது வரை ஏலத்தில் வாங்கியுள்ளது. • 20:08 (IST) 12 Feb 2022
  சிவம் மாவி - 7.25 கோடி - கொல்கத்தா நைட் ரைடர்ஸ்!

  ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் இந்திய வீரர் சிவம் மாவி 7.25 கோடிக்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் வாங்கப்பட்டார். • 19:55 (IST) 12 Feb 2022
  தமிழக வீரரை வசப்படுத்திய பஞ்சாப்!

  ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் தமிழக வீரர் ஷாருக் கான் பஞ்சாப் கிங்ஸ் அணியால் 9 கோடிக்கு வாங்கப்பட்டார். • 19:53 (IST) 12 Feb 2022
  அபிஷேக் சர்மா - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் - 6.50 கோடி!

  ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் இந்திய வீரர் அபிஷேக் சர்மா சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் 6.50 கோடிக்கு வாங்கப்பட்டார். • 19:30 (IST) 12 Feb 2022
  அபினவ் மனோகர் - 2.6 கோடி - குஜராத் டைட்டன்ஸ்!

  ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் கர்நாடக அணியின் நட்சத்திர வீரர் அபினவ் மனோகர் குஜராத் டைட்டன்ஸ் அணியால் 2.6 கோடிக்கு வாங்கப்பட்டார். • 19:29 (IST) 12 Feb 2022
  டெவால்ட் ப்ரீவிஸ் - 3 கோடி - மும்பை இந்தியன்ஸ்!

  தென்னாப்பிரிக்க வீரர் டெவால்ட் ப்ரீவிஸ் 3 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். • 19:23 (IST) 12 Feb 2022
  ராகுல் திரிபாதி - 8.50 கோடி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

  ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் இந்திய வீரர் ராகுல் திரிபாதி 8.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டார். • 19:10 (IST) 12 Feb 2022
  புவனேஷ்வர் குமாரை ரூ.4.2 கோடிக்கு ஏலம் எடுத்தது ஹைதராபாத் அணி

  ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் புவனேஷ்வர் குமாரை ரூ.4.2 கோடிக்கு ஹைதராபாத் அணி ஏலம் எடுத்தது • 18:35 (IST) 12 Feb 2022
  ராகுல் சாஹர் ரூ 5.25 கோடி பஞ்சாப் கிங்ஸ்!

  ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் இந்திய வீரர் ராகுல் சாஹர் ரூ 5.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார். • 18:25 (IST) 12 Feb 2022
  குல்தீப் யாதவ் - 2 கோடி - டெல்லி கேபிடல்ஸ்!

  ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய அணி வீரர் குல்தீப் யாதவ், ₹2 கோடிக்கு ஏலம் எடுத்தது டெல்லி கேபிடல்ஸ் அணி! • 18:23 (IST) 12 Feb 2022
  தவிர்க்கப்பட்ட சுழல் வீரர்கள்!

  அடில் ரஷீத், இம்ரான் தாஹிர், முஜீப் ரகுமான் ஆகியோர் எந்த அணியாலும் வாங்கப்படவில்லை. • 18:17 (IST) 12 Feb 2022
  ஷர்துல் தாக்கூர் - 10.75 கோடி - டெல்லி கேப்பிடல்ஸ்!

  ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் இந்திய வீரர் ஷர்துல் தாக்கூர் 10.75 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார். • 18:06 (IST) 12 Feb 2022
  புவனேஷ்வர் குமார் - 4.20 கோடி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

  ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் இந்திய வீரர் புவனேஷ்வர் குமார் 4.20 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டார். • 18:00 (IST) 12 Feb 2022
  மார்க் வுட் - லக்னோ - 7.50 கோடி!

  ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் இங்கிலாந்து வீரர் மார்க் வுட் லக்னோ அணியால் 7.50 கோடிக்கு வாங்கப்பட்டார். • 17:58 (IST) 12 Feb 2022
  சாம்பியன் பட்டம் வெல்ல உதவிய வீரர்களை தக்க வைத்து வரும் சென்னை அணி!

  ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் இதுவரை 4 வீரர்களை வாங்கியுள்ளது. அவர்கள் அனைவரும் 2021ல் அந்த அணியில் இடம்பெற்று இருந்த வீரர்கள் ஆவர். • 17:57 (IST) 12 Feb 2022
  ஜோஷ் ஹேசில்வுட் - ராயல் சேலஞ்சர்ஸ் - 7.75 கோடி!

  ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஜோஷ் ஹேசில்வுட் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் 7.75 கோடிக்கு வாங்கப்பட்டார். • 17:51 (IST) 12 Feb 2022
  லாக்கி பெர்குசன் - 10 கோடி குஜராத் டைட்டன்ஸ்!

  ஐபிஎல் மெகா ஏலத்தில் நியூசிலாந்து வீரர் லாக்கி பெர்குசன், ₹10 கோடிக்கு ஏலம் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ்! • 17:45 (IST) 12 Feb 2022
  பிரசித் கிருஷ்ணா 10 கோடி ராஜஸ்தான் ராயல்ஸ்!

  ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் பிரசித் கிருஷ்ணா ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 10 கோடிக்கு வாங்கப்பட்டார். • 17:34 (IST) 12 Feb 2022
  தீபக் சாஹர் - 14 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ் அணி!

  ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் தீபக் சாஹர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 14 கோடிக்கு வாங்கப்பட்டார். • 17:25 (IST) 12 Feb 2022
  நடராஜன் - 4 கோடிசன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

  தமிழக வீரர் நடராஜன் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் 4 கோடிக்கு வாங்கப்பட்டார். • 17:21 (IST) 12 Feb 2022
  இஷான் கிஷன் பேட்டி!

  மும்பை இந்தியன்ஸ் அணியால் 15.25 கோடிக்கு ஏலத்தில் வாங்கப்பட்ட விக்கெட் கீப்பர் வீரர் இஷான் கிஷன் "நான் மும்பை அணிக்கு திரும்பியதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், அணியில் உள்ள அனைவரும் என்னை ஒரு குடும்பமாக நடத்தினார்கள்" என கூறியுள்ளார். • 17:05 (IST) 12 Feb 2022
  பூரன் - 10.75 கோடி - சன்ரைசர்ஸ் ஹைதராபாத்!

  ஐபிஎல் மெகா ஏலத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர் நிக்கோலஸ் பூரன், ரூ.10.75 கோடிக்கு ஏலம் எடுத்தது சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி. • 16:54 (IST) 12 Feb 2022
  தினேஷ் கார்த்திக் - 5.50 கோடி பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ்!

  ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் தினேஷ் கார்த்திக் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் ரூ.5.50 கோடிக்கு வாங்கப்பட்டார். • 16:46 (IST) 12 Feb 2022
  ஐபிஎல் ஏல வரலாற்றில் அதிக விலைக்கு வாங்கப்பட்ட இந்திய வீரர்கள்!

  யுவராஜ் சிங் - 16 கோடி

  இஷான் கிஷன் - 15.25 கோடி • 16:44 (IST) 12 Feb 2022
  ஜானி பேர்ஸ்டோ - 6.75 கோடி - பஞ்சாப் கிங்ஸ் அணி!

  ஐபிஎல் மெகா ஏலத்தில் இங்கிலாந்து வீரர் ஜானி பேர்ஸ்டோ 6.75 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. • 16:38 (IST) 12 Feb 2022
  அம்பத்தி ராயுடு - ₹6.75 கோடி - சென்னை சூப்பர் கிங்ஸ்!

  ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் அம்பத்தி ராயுடு, ₹6.75 கோடிக்கு ஏலம் எடுத்தது சென்னை சூப்பர் கிங்ஸ் CSK அணி. • 16:36 (IST) 12 Feb 2022
  இஷான் கிஷன் - 15.25 கோடி - மும்பை இந்தியன்ஸ்!

  ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் இஷான் கிஷன், ரூ 15.25 கோடிக்கு ஏலம் எடுத்தது மும்பை இந்தியன்ஸ் அணி. • 16:22 (IST) 12 Feb 2022
  முகமது நபி - மேத்யூ வேட் (UNSOLD)!

  ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆப்கானிஸ்தான் வீரர் முகமது நபி மற்றும் ஆஸ்திரேலியா வீரர் மேத்யூ வேட் ஆகிய வீரர்களை எடுக்க எந்த அணி நிர்வாகமும் முன் வரவில்லை (UNSOLD). • 16:15 (IST) 12 Feb 2022
  மிட்செல் மார்ஷ் - 6.50 கோடி - டெல்லி கேப்பிடல்ஸ் அணி!

  ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் மிட்செல் மார்ஷ் ரூ. 6.50 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்! • 16:10 (IST) 12 Feb 2022
  க்ருனால் பாண்டியா - ரூ. 8.25 கோடி - லக்னோ அணி!

  ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் க்ருனால் பாண்டியாவை ரூ. 8.25 கோடிக்கு லக்னோ அணி வாங்கியுள்ளது. • 16:00 (IST) 12 Feb 2022
  வாஷிங்டன் சுந்தர் 8.75 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டார்!

  ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் வாஷிங்டன் சுந்தர் 8.75 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியால் வாங்கப்பட்டார்! • 15:57 (IST) 12 Feb 2022
  ஹசரங்கா 10.75 கோடிக்கு RCB அணியால் வாங்கப்பட்டார்!

  ஐபிஎல் மெகா ஏலத்தில் இலங்கை வீரர் வனிந்து ஹசரங்கா ரூ. 10.75 கோடிக்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியால் வாங்கப்பட்டார். • 15:43 (IST) 12 Feb 2022
  மெகா ஏலம் மீண்டும் 3:45 மணிக்கு தொடங்கும்!

  இன்று காலை மதியம் 12 மணியளவில் தொடங்கிய ஐ.பி.எல் மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்த ஏலத்தை நடத்திக்கொண்டிருந்த ஹக் எட்மீட்ஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் ஐ.பி.எல் ஏலம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

  இந்நிலையில், ஹக் எட்மீட்ஸ் நலமாக உள்ளார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மீண்டும் ஏலம் சரியாக 3:45 மணிக்கு தொடங்கும் என்றும், அதனை சாரு சர்மா என்பவர் நடத்துவார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. • 15:28 (IST) 12 Feb 2022
  இதுவரை பணம் செலவழிக்காத இரு அணிகள்!

  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் மும்பை இந்தியன்ஸ் இந்த ஏலத்தில் இதுவரை தங்களது மீத பணத்திலிருந்து ஒரு ரூபாயைக்கூட செலவு செய்யவில்லை. அதாவது அந்த அணி இதுவரை எந்த வீரரையும் வாங்கவில்லை. • 14:19 (IST) 12 Feb 2022
  ஐபிஎல் மெகா ஏலம் : தொகுப்பாளர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு

  ஐபிஎல் மெகா ஏலம் நடைபெறும் மேடையிலேயே தொகுப்பாளர் ஹக் எம்மாண்டஸ் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. • 14:08 (IST) 12 Feb 2022
  லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியில் தீபக் ஹூடா

  ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் தீபக் ஹூடா, ₹5.75 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ்! • 14:00 (IST) 12 Feb 2022
  ஹர்ஷல் படேல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 10.75 கோடிக்கு வாங்கப்பட்டார்!

  ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் ஹர்ஷல் படேல் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணி 10.75 கோடிக்கு வாங்கப்பட்டார்! • 13:53 (IST) 12 Feb 2022
  ஜேசன் ஹோல்டர் 8.75 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டார்!

  ஐபிஎல் மெகா ஏலத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஜேசன் ஹோல்டர் 8.75 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டார். • 13:51 (IST) 12 Feb 2022
  கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் நிதிஷ் ராணா 8 கோடிக்கு வாங்கப்பட்டார்!

  ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் நிதிஷ் ராணா கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 8 கோடிக்கு வாங்கப்பட்டார்! • 13:48 (IST) 12 Feb 2022
  டிஜே பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ 4.40 கோடிக்கு வாங்கப்பட்டார்!

  ஐபிஎல் மெகா ஏலத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் டிஜே பிராவோ சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் ரூ 4.40 கோடிக்கு வாங்கப்பட்டார்! • 13:47 (IST) 12 Feb 2022
  ஸ்டீவ் ஸ்மித் UNSOLD!

  ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித்யை வாங்க எந்த அணி நிர்வாகமும் முன் வரவில்லை! (UNSOLD) • 13:45 (IST) 12 Feb 2022
  சுரேஷ் ரெய்னா - UNSOLD!

  ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் சுரேஷ் ரெய்னாவை வாங்க எந்த அணி நிர்வாகமும் முன் வரவில்லை (UNSOLD). • 13:42 (IST) 12 Feb 2022
  டேவிட் மில்லர் - UNSOLD!

  ஐபிஎல் மெகா ஏலத்தில் தென்னாப்பிரிக்க வீரர் டேவிட் மில்லரை வாங்க எந்த அணி நிர்வாகமும் முன் வரவில்லை (UNSOLD). • 13:41 (IST) 12 Feb 2022
  தேவ்தத் படிக்கல் 7.75 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்!

  ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் தேவ்தத் படிக்கல்-ஐ, ₹7.75 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ்! • 13:31 (IST) 12 Feb 2022
  ராபின் உத்தப்பா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 2 கோடிக்கு வாங்கப்பட்டார்!

  ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் ராபின் உத்தப்பா சென்னை சூப்பர் கிங்ஸ் அணியால் 2 கோடிக்கு வாங்கப்பட்டார்! • 13:29 (IST) 12 Feb 2022
  ஷிம்ரோன் ஹெட்மியர் 8.50 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்!

  ஐபிஎல் மெகா ஏலத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஷிம்ரோன் ஹெட்மியர் 8.50 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்! • 13:23 (IST) 12 Feb 2022
  மணீஷ் பாண்டே 4.60 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டார்!

  ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் மணீஷ் பாண்டே ரூ4.60 கோடிக்கு லக்னோ அணியால் வாங்கப்பட்டார். • 12:58 (IST) 12 Feb 2022
  டேவிட் வார்னர் 6.25 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார்!

  ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆஸ்திரேலிய வீரர் டேவிட் வார்னர் 6.25 கோடிக்கு டெல்லி கேப்பிடல்ஸ் அணியால் வாங்கப்பட்டார். • 12:55 (IST) 12 Feb 2022
  குயின்டன் டி காக், ₹6.75 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணியால் வாங்கப்பட்டார்!

  ஐபிஎல் மெகா ஏலத்தில் தென்னாப்பிரிக்க வீரர் குயின்டன் டி காக், ₹6.75 கோடிக்கு ஏலம் எடுத்தது லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணி. • 12:48 (IST) 12 Feb 2022
  ஃபாஃப் டு பிளெசிஸ் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் 7 கோடிக்கு வாங்கப்பட்டார்!

  ஐபிஎல் மெகா ஏலத்தில் தென்னாப்பிரிக்க வீரர் ஃபாஃப் டு பிளெசிஸ் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் 7 கோடிக்கு வாங்கப்பட்டார். • 12:45 (IST) 12 Feb 2022
  இந்திய வீரர் முகமது ஷமி குஜராத் டைட்டன்ஸ் அணியால் 6.25 கோடிக்கு வாங்கப்பட்டார்.

  ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் முகமது ஷமி, ₹6.25 கோடிக்கு ஏலம் எடுத்தது குஜராத் டைட்டன்ஸ் அணி • 12:40 (IST) 12 Feb 2022
  ஸ்ரேயாஸ் ஐயர் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியால் 12.25 கோடிக்கு வாங்கப்பட்டார்!

  ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் ஸ்ரேயாஸ், 12.25 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி. • 12:31 (IST) 12 Feb 2022
  ககிசோ ரபாடா 9.25 கோடிக்கு பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார்

  ஐபிஎல் மெகா ஏலத்தில் தென்னாப்பிரிக்க வீரர் காகிசோ ரபாடாவை, 9.25 கோடிக்கு ஏலம் எடுத்தது பஞ்சாப் கிங்ஸ் அணி. • 12:31 (IST) 12 Feb 2022
  பாட் கம்மின்ஸ் கொல்கத்தா அணியால் 7.25 கோடிக்கு வாங்கப்பட்டார்

  ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆஸ்திரேலியா வீரர் பாட் கம்மின்ஸ்-ஐ, ₹7.25 கோடிக்கு ஏலம் எடுத்தது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி! • 12:27 (IST) 12 Feb 2022
  அஸ்வினை 5 கோடிக்கு வாங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ்!

  ஐபிஎல் மெகா ஏலத்தில் இந்திய வீரர் ரவிச்சந்திரன் அஸ்வினை, ₹5 கோடிக்கு ஏலம் எடுத்தது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி. டெல்லி மற்றும் ராஜஸ்தான் இடையே சில கடுமையான போட்டி நடந்த நிலையில் அஸ்வினை 5 கோடிக்கு வாங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ். • 12:23 (IST) 12 Feb 2022
  ஷிகர் தவான் பஞ்சாப் கிங்ஸ் அணியால் வாங்கப்பட்டார்!

  ஷிகர் தவானுக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் ரூ. 2 கோடிக்கு ஏலத்தைத் தொடங்கியது, பின்னர் டெல்லி கேப்பிட்டல்ஸ் குதித்தது. இரண்டிற்கும் இடையே ஏலம் முன்னும் பின்னுமாக சென்றது. தவானின் ஏலம் 5 கோடியைத் தாண்டியதால் RR மற்றும் DC இரண்டும் பின்வாங்கின. இறுதியில் நுழைந்த பஞ்சாப் கிங்ஸ் ஏலத்தில் அவரை 8.25 கோடிக்கு வாங்கியது. • 12:20 (IST) 12 Feb 2022
  ஐ.பி.எல். மெகா ஏலம் இனிதே தொடக்கம்!

  ஐ.பி.எல். 2022 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தொடங்கியது. ஏலப்பட்டியலில் மொத்தம் 600 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். • 11:47 (IST) 12 Feb 2022
  தக்கவைக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியல்!

  சென்னை சூப்பர் கிங்ஸ்:

  ரவீந்திர ஜடேஜா (16 கோடி), எம்எஸ் தோனி (12 கோடி), மொயீன் அலி (8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (6 கோடி)

  கொல்கத்தா நைட் ரைடர்ஸ்:

  ஆண்ட்ரே ரசல் (12 கோடி, பர்சில் இருந்து 16 கோடி), வருண் சக்ரவர்த்தி (8 கோடி, பர்ஸில் இருந்து 12 கோடி), வெங்கடேஷ் ஐயர் (8 கோடி), சுனில் நரைன் (6 கோடி)

  சன்ரைசர்ஸ் ஹைதராபாத்:

  கேன் வில்லியம்சன் (14 கோடி), அப்துல் சமத் (4 கோடி), உம்ரான் மாலிக் (4 கோடி)

  மும்பை இந்தியன்ஸ்:

  ரோஹித் சர்மா (16 கோடி), ஜஸ்பிரித் பும்ரா (12 கோடி), சூர்யகுமார் யாதவ் (8 கோடி), கீரன் பொல்லார்டு (6 கோடி)

  ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்:

  விராட் கோலி (15 கோடி), கிளென் மேக்ஸ்வெல் (11 கோடி), முகமது சிராஜ் (7 கோடி)

  டெல்லி கேப்பிடல்ஸ்:

  ரிஷப் பந்த் (16 கோடி), அக்சர் படேல் (9 கோடி, பர்ஸில் இருந்து 12 கோடி), பிருத்வி ஷா (7.5 கோடி, 8 கோடி பர்ஸில் இருந்து கழிக்கப்படும்), அன்ரிச் நார்ட்ஜே (6.5 கோடி)

  ராஜஸ்தான் ராயல்ஸ்:

  சஞ்சு சாம்சன் (14 கோடி), ஜோஸ் பட்லர் (10 கோடி), யஷஸ்வி ஜெய்ஸ்வால் (4 கோடி)

  பஞ்சாப் கிங்ஸ்:

  மயங்க் அகர்வால் (12 கோடி, பர்ஸில் இருந்து 14 கோடி), அர்ஷ்தீப் சிங் (4 கோடி)

  குஜராத் டைட்டன்ஸ்:

  ஹர்திக் பாண்டியா (15 கோடி), ரஷித் கான் (15 கோடி), சுப்மான் கில் (8 கோடி)

  லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:

  கேஎல் ராகுல் (17 கோடி), மார்கஸ் ஸ்டோனிஸ் (9.2 கோடி), ரவி பிஷ்னோய் (4 கோடி) • 11:11 (IST) 12 Feb 2022
  அணிகளிடம் மீதமுள்ள தொகை விபரம்!

  ஐ.பி.எல். 2022 மெகா ஏலத்தில் கலந்து கொள்ள உள்ள 10 அணிகளிடம் உள்ள மீத தொகை.

  CSK - 48 கோடி

  DC - 47 கோடி

  GT - 52 கோடி

  KKR - 48 கோடி

  LSG - 59 கோடி

  MI - 48 கோடி

  PBKS - 72 கோடி

  RR - 62 கோடி

  RCB - 57

  SRH - 68 • 10:47 (IST) 12 Feb 2022
  சரியான நேரத்தில் நடந்த நிகழ்வுகள்!

  2013 ஐபிஎல்லுக்கு முன்னதாக, உள்நாட்டு டி20 ஆட்டத்தின் போது மும்பய் இந்தியன்ஸ் அணியின் (MI) திறமை சாரணர் (talent scout) ஜான் ரைட் ஜஸ்பிரித் பும்ராவைக் கண்டுபிடித்தார். அந்த ஆண்டு நடந்த ஏலத்தில் மும்பை அணிக்காக அவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். பின்னர் நடந்தவை அவரின் மீத வரலாறு.

  2018 ஐபிஎல் ஏலத்திற்கு ஒரு நாள் முன்பு, மும்பையின் சிவம் துபே பரோடா சுழற்பந்து வீச்சாளர் ஸ்வப்னில் சிங் வீசிய ஒரு ஓவரில் ஐந்து சிக்ஸர்களை பறக்க விட்டார். பிறகு ஏலத்தில் (RCB) பெங்களூரு அணி அவரை 5 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

  அக்டோபர் 2019 இல், மும்பை இளம் வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால், விஜய் ஹசாரே டிராபியில் ஜார்கண்ட் அணிக்கு எதிராக (203 ரன்கள்) லிஸ்ட் ஏ கிரிக்கெட்டில் இரட்டை சதம் அடித்த இளம் இந்திய பேட்ஸ்மேன் ஆனார். இரண்டு மாதங்களுக்குப் பிறகு ஐபிஎல் ஏலத்தில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் அவர் 2.4 கோடி ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டார்.

  2021 ஐபிஎல் ஏலத்திற்கு முன், ஹிமாச்சல பிரதேசத்திற்கு எதிரான சையத் முஷ்டாக் அலி டிராபி ஆட்டத்தில் ஷாருக் கான் 19 பந்துகளில் 40 அடித்தார். மேலும், தமிழக அணி கோப்பை வெல்ல ஒரு பினிஷராகவும் செயல்பட்டார். ஏலத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி அவரை ரூ.5.25 கோடிக்கு வாங்கியது. • 10:38 (IST) 12 Feb 2022
  மும்பை இந்தியன்ஸ் அணி எந்தெந்த வீரர்களை ஏலத்தில் வாங்கும்?

  மும்பை இந்தியன்ஸ் (MI) போன்ற ஒரு அணிக்கு ‘அணியின் கோர்’ பல ஆண்டுகளாக அணிக்கு சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளனர். ரோகித் சர்மா தலைமையிலான மும்பை அணி சமீபத்திய ஆண்டுகளில் இந்தியன் பிரீமியர் லீக்கில் (ஐபிஎல்) ஆதிக்கம் செலுத்தி ஐந்து முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. அந்த அணியின் கேப்டன் ரோகி த் சர்மா (16 கோடி) உட்பட ஜஸ்பிரித் பும்ரா (12 கோடி), சூர்யகுமார் யாதவ் (8 கோடி), கீரன் பொல்லார்ட் (6 கோடி) ஆகிய 4 வீரர்களை தக்கவைத்துள்ளது.

  தற்போது நடக்கும் மெகா ஏலத்தில் அந்த அணியின் முதல் பார்வை விக்கெட் கீப்பர்-பேட்டர் பக்கம் தான் இருக்கும். அதற்காக அந்த அணி குயின்டன் டி காக் மற்றும் இஷான் கிஷனை மீண்டும் அணியில் கொண்டு வர அதிக கவனம் செலுத்தும்.

  மேலும், மும்பை அணி தக்க வைக்க தவறிய முக்கிய வீரர்களுள் ஒருவரான வேகப்பந்துவீச்சாளர் ட்ரென்ட் போல்ட் வசம் மீண்டும் பார்வையை திருப்பும். அந்த அணிக்காக கடந்த சில சீசன்களில் ட்ரென்ட் போல்ட் அளப்பரிய பங்களித்துள்ளார். இதேபோல், லெக்-ஸ்பின்னர் ராகுல் சாஹரையும் வசப்படுத்தவும் அந்த அணி முயலும்.

  மற்றொரு சுழற்பந்து வீச்சாளருக்கு அனுபவம் வாய்ந்த ரவிச்சந்திரன் அஷ்வினை வாங்க மும்பை அணி முயற்சி மேற்கொள்ளலாம். இந்திய ஆடுகளங்களில் அவர் தனது சுழலில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடியவர். • 10:12 (IST) 12 Feb 2022
  வெற்றிக்கு உழைத்த வீரர்களை மீண்டும் ஏலத்தில் எடுக்குமா சென்னை சூப்பர் கிங்ஸ் அணி?

  இந்த மெகா ஏலத்தில் ஒவ்வொரு அணியும் வீரர்களின் ஏலத்துக்காக ரூ.90 கோடி வரை செலவழிக்கலாம். சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அதன் நீண்ட கால கேப்டன் மகேந்திர சிங் தோனி, ரவீந்திர ஜடேஜா (ரூ. 16 கோடி), மொயீன் அலி (ரூ. 8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (ரூ. 6 கோடி) ஆகிய 4 வீரர்களை தக்க வைத்ததன் மூலம் ரூ.42 கோடியை செலவழித்து உள்ளது. இதனால் அந்த அணி எஞ்சிய தொகையான (Purse Balance) ரூ.48 கோடியை மட்டுமே ஏலத்தில் பயன்படுத்த முடியும்.

  கடந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்ற சென்னை அணி, இந்த மெகா ஏலத்தில் முடிந்தவரை அணியின் வெற்றிக்கு உழைத்த வீரர்களை தக்கவைக்க அணி நிர்வாகம் முயற்சி எடுக்கும் என சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் உரிமையாளர் என். சீனிவாசன் குறிப்பிட்டு இருந்தார். எனவே, அந்த அணி முடிந்தவரை போராடும் என எதிர்பார்க்கலாம். • 09:35 (IST) 12 Feb 2022
  ஐ.பி.எல். 2022 மெகா ஏலம்: காலை 11 மணிக்கு தொடக்கம்!

  ஐ.பி.எல். 2022 கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெங்களூருவில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இன்றும், நாளையும் நடக்க உள்ள நிலையில், ஏலம் காலை 11 மணி முதல் நடைபெறுகிறது. • 09:35 (IST) 12 Feb 2022
  ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்.

  ஐ.பி.எல். 2022 மெகா ஏலம் குறித்த செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.Sports Ipl Ipl Cricket Ipl News Bangalore Ipl Auction Ipl Auction Live Ipl 2022 Ipl 2022 Mega Auction Live
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment