Advertisment

ஐ.பி.எல் மினி ஏலம்: தமிழக வீரர்களை குறிவைக்குமா சி.எஸ்.கே? யார் யாருக்கு வாய்ப்பு?

ஜெகதீசன் சி.எஸ்.கே-வின் பட்ஜெட்டில் பொருந்தவில்லை என்றால், கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக விளையாடிய பாபா இந்திரஜித்தை அடிப்படை விலையில் பெறலாம்.

author-image
WebDesk
New Update
IPL Auction 2022: will CSK Target TN Players? Tamil News

Will Chennai Super Kings to Target Tamil Nadu Players in IPL mini Auction 2022? Tamil News

Chennai Super Kings (CSK) - IPL mini auction Tamil News: இந்தியன் பிரீமியர் லீக் தொடர் (ஐ.பி.எல்.)அதன் 16வது சீசனில் அடியெடுத்து வைத்துள்ளது. இந்த தொடருக்கான மினி ஏலம் நாளை மறுநாள் வெள்ளிக்கிழமை (டிசம்பர் 23 ஆம் தேதி) கேரளாவில் உள்ள கொச்சியில் நடக்கிறது. இதில் எந்தெந்த வீரர்களை 10 அணிகள் போட்டி போட்டு வாங்கும் என்பதைக் காண ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துள்ளனர்.

Advertisment

ஐகான் பிளேயராக உருவெடுத்த தோனி

ஐ.பி.எல் தொடர் கடந்த 2008ல் தொடங்கப்பட்டது. அப்போது நடைபெற்ற மெகா ஏலத்தில் பெரும்பாலான அணிகள் "ஐகான் வீரர்களை" தேடியது. அப்போது, ​​சென்னை சூப்பர் கிங்ஸ் கணக்குப்போடுவதில் கவனம் செலுத்தியது. மேலும், "ஐகான் பிளேயர்களுக்கு" கூடுதல் பணத்தை வழங்குவதற்கு பதிலாக, எம்எஸ் தோனியை எப்படியாவது வாங்கி விட வேண்டும் என்பதில் நிர்வாகம் ஆர்வமாக இருந்தது. ஏலத்திலன் போது தோனியை வசப்படுத்த மும்பை இந்தியன்ஸுடன் ஒரு போரையே நடத்தி இருந்தது சி.எஸ்.கே. மறுபுறம், தங்களின் "ஐகான் பிளேயர்" என சச்சின் டெண்டுல்கரை முடிவு செய்த மும்பை அணி தோனிக்காக செலவழிக்க யோசித்தது. அதனால் தொடர்ந்து ஏலம் கேட்பதையும் நிறுத்திக்கொண்டது.

‘128 ரன் ரேட்டில் வெறும் 200 ரன்கள் எடுத்த கேப்டன்தான் சி.எஸ்.கே-வுக்கு தேவையா?’

இறுதியில், சி.எஸ்.கே அணி தோனியை ரூ.6 கோடி கொடுத்து ஏலத்தில் எடுத்தது. அன்றைய காலக்கட்டத்தில் அது மிகப்பெரிய தொகையாகும். அன்றுமுதல் ராஞ்சியில் பிறந்த தோனியின் பயணம் சென்னையை நோக்கி தொடங்கியது. இந்த மெகா ஏலத்தில் பெரும்பாலான அணிகள் தங்கள் சொந்த மாநில வீரர்களை தேடி சென்று வாங்கின. குறிப்பாக, வீரேந்திர சேவாக் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கும், யுவராஜ் சிங் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கும், ராகுல் டிராவிட் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்கும், சச்சின் டெண்டுல்கர் மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் சென்றனர்.

இந்த நிலையில், சென்னை அணி மட்டும் வேறு வழியில் சென்று, சொந்த மாநிலத்தை அல்லாதவரான விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தோனியை வசப்படுத்தியது. தோனிக்கு அவரின் மாநிலத்தைச் சேர்ந்த அணி ஐபிஎல் தொடரில் இல்லை. இதனால், அவரும் வேறு வழியின்றி சென்னை அணியில் வந்து சேர்ந்தார்.

"தல" தோனி

பல ஆண்டுகளாக, மேலே குறிப்பிடப்பட்ட பெரும்பாலான "ஐகான் வீரர்கள்" தாங்கள் இருந்து மாநில அணியில் இருந்து அடுத்த அணிகளுக்கு மாறிக் கொண்டே இருந்தனர். ஆனால், தோனியும் சிஎஸ்கேயும் சொர்க்கத்தில் முடிவு செய்யப்பட்ட ஜோடியாக மாறிப் போயினர். ஒவ்வொரு சீசனிலும் அவர் தன்னைத் தானே மேம்படுத்திக் கொண்டதோடு அணி 3 முறையை சாம்பியன் பட்டத்தை வாகை சூடவும் உதவினார். அவரது தலைனையிலான அணி வெற்றி களிப்பை கொண்டாடிய போதும், சில சீசன்னிகளில் பெரும் ஏமாற்றத்துடன் வெளியேறிய போதும் நிர்வாகம் அதன் அன்பை அவருக்கென தொடர்ந்து பொழிந்து கொண்டே இருந்தது.

மறுபுறம், சென்னை அணியின் ரசிகர்களும் தோனி மீது அன்பு மழை பொழிந்தனர். தோனியின் ஒவ்வொரு சீசனின் போதும் அவர்களின் எண்ணிக்கை பல மடங்காக உயர்ந்து வருகிறது. "தல" எனும் மாசான புனைப்பெயருடன் அவரை அழைத்து மகிழ்கிறார்கள் அவரது ரசிர்கள். இது தோனிக்கும் ரசிகர்களுக்கும் இடையே பந்தை இன்னும் அதிகரிக்க செய்துள்ளது.

ஓசூரில் முழுநேர கிரிக்கெட் பள்ளி… பாசத்தை மறக்காத ‘தல’ தோனி

கடந்த காலத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த உள்ளூர் வீரர்களான ஆர் அஷ்வின், முரளி விஜய், எஸ் பத்ரிநாத் மற்றும் அபினவ் முகுந்த் போன்றவர்கள் அணியில் களமாடி விளையாடியிருக்கிறார்கள். ஆனால் அவர்களில் எவரும் தோனிக்கு மாற்று வீரராக மற்றாக இருக்க முடியவில்லை. இதேபோல் தான், “சின்ன தல” என ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த சுரேஷ் ரெய்னாவின் கதையும்.

இந்த சீசன் தோனியின் கடைசி சீசனாக இருக்கும் என்று அவரே குறிப்பிட்டுள்ள நிலையில், அவரது இடத்தை நிரப்பு போவது யார்? என்ற கேள்வி எழுந்துள்ளது. இதுபோல பல தொடர் கேள்விகளும் எழுப்பப்பட்டு வருகின்றன. உண்மையில், தோனிக்கு மாற்று வீரராக களமாடும் வீரரை சி.எஸ்.கே கண்டுபிடித்திருக்கும். ஆனால், அந்த வீரர் உள்ளூர் வீரராக இருப்பாரா? இல்லை வேறு மாநிலத்தை சேர்ந்த வீரருக்குத்தான் அந்த வாய்ப்பு கிடைக்குமா என்று பொறுத்திருந்து பார்க்கலாம்.

தமிழக வீரர்களை குறிவைக்குமா சி.எஸ்.கே?

இதுஒருபுறமிருக்கு, கடந்த ஐந்தாண்டுகளில் சிஎஸ்கே தரவரிசையில் தமிழக வீரர்களின் எண்ணிக்கை வெகு சிலரே விளையாடி இருக்கின்றனர். 2012ல், அணியில் எட்டு தமிழக வீரர்கள் இருந்தனர். ஆனால் 2022 சீசனில் வெறும் 2 வீரர்கள் தான் இருந்தனர். அவர்களில் ஹரி நிஷாந்த் மற்றும் என் ஜெகதீசன் ஆகிய இரு வீரர்கள் ஆவர். தற்போது இந்த இரண்டு வீரர்களையும் 2023 மினி ஏலத்திற்கு முன்னதாக சென்னை அணி விடுவித்துள்ளது.

இந்த முறை எந்தெந்த உள்ளூர் வீரர்களை சி.எஸ்.கே வாங்கும்?

கொச்சியில் நடைபெறவிருக்கும் ஐபிஎல் மினி ஏலம் சில உள்ளூர் வீரர்களை அணியில் சேர்க்க சிஎஸ்கேக்கு வாய்ப்பளிக்கிறது. கடந்த ஐந்தாண்டுகளில் ஒயிட்-பால் போட்டிகளில் தமிழக அணி நிறைய முன்னேற்றம் கண்டுள்ளது மற்றும் ஏராளமான வீரர்கள் உள்நாட்டு தொடர்களில் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு இரண்டிலும் நிலையான செயல்திறனை வெளிப்படுத்தியுள்ளனர். டிசம்பர் 23 ஏலத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 405 வீரர்களில் 16 பேர் தமிழகத்தைச் சேர்ந்தவர்களாக உள்ளனர்.

சென்னை அணியிடம் மீதமுள்ள தொகை ரூ. 20.45 கோடியாகும். தற்போதைய 18 பேர் கொண்ட அணியின் அளவு, குறிப்பிட்ட வீரர்களை அதிக விலைக்கு வாங்குவதற்கும், குறைந்த விலையில் வாங்கப்படாத வீரர்களை வாங்குவதற்கும் அவர்களை அனுமதிக்கிறது. என் ஜெகதீசன் அணி நிர்வாகத்தின் ரேடாரில் இருக்க வேண்டும். ஆனால் உள்நாட்டு தொடர்களில் அவரது சமீபத்திய ரன் வேட்டை அவரை மலிவான விலையில் வாங்க முடியா நிலை ஏற்படும். மேலும் ஒரு டாப்-ஆர்டர் விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் தேவைப்படும் மற்ற அணிகளும் உள்ளன.

மிடில் ஆர்டரில் உள்ள ஆல்-ரவுண்டர்கள், அம்பதி ராயுடு மற்றும் ஷிவம் துபே ஆகியோருக்குப் பதிலாகப் பார்த்துக் கொள்ளக்கூடியவர்கள். 2013 முதல் 2015 வரை உரிமையுடன் இருந்த பாபா அபராஜித், மிடில் ஆர்டருக்கு சரியாக பொருந்துகிறார். ஏனெனில் அவர் ஒரு சிறந்த சுழற்பந்து வீச்சாளர் மற்றும் சிறப்பான ஆஃப் ஸ்பின்னர் ஆவார்.

மேலும் என் ஜெகதீசன் அவர்களின் பட்ஜெட்டில் பொருந்தவில்லை என்றால், கடந்த பதிப்பில் கொல்கத்தா அணிக்காக விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேனாக விளையாடிய பாபா இந்திரஜித்தை அடிப்படை விலையில் பெறலாம். ஏன்னென்றால், உள்ளூர் நிலைமைகளை நன்கு அறிந்த வீரர்களைக் கொண்டிருப்பது உரிமையாளருக்கு ஒரு பெரிய ப்ளஸாக இருக்கும்.

சென்னை அணியை பேப்பரில் பார்த்தால், அந்த அணி செய்ய விரும்பும் சில சேர்க்கைகள் உள்ளன. சாம் கர்ரானை மீண்டும் அணியில் சேர்ப்பது மற்றும் உள்ளூர் திறமைகளை கண்டுபிடிப்பதாகும். தவிர, ராயுடு-வுக்கு வயதாகி கொண்டே செல்லும் நிலையில், மிடில் ஆர்டர் ஸ்பாட் பேக்கப்-க்கு ஒரு வீரர் தேவை. சுழற்பந்துவீச்சிற்கு உள்ளூர் வீரர் எம் சித்தார்த் சரியான பொருத்தமாக இருப்பார். இடது கை சுழற்பந்து வீச்சாளரான அவர் துல்லியமாக பந்துகளை வீசி விக்கெட்டுகளை வீழ்த்தி வருகிறார். நல்ல சராசரியையும் கொண்டிருக்கிறார்.

இதேபோல், கடந்த ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம்பிடித்த சஞ்சய் யாதவ், தமிழகத்திலிருந்து கிடைக்கும் மற்ற இடது கை சுழற்பந்து வீச்சாளர் தேர்வாக இருக்கிறார். அவர் பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் அணியின் சிறந்த வீரராக இருப்பார்.

பல ஆண்டுகளாக சிஎஸ்கே அணியில் இடம் பிடித்த தமிழக வீரர்கள்

2012: ஸ்ரீகாந்த் அனிருத்தா, எஸ் பத்ரிநாத், ஆர் அஷ்வின், அபினவ் முகுந்த், யோ மகேஷ், முரளி விஜய், குத்தேதுர்ஸ்ரீ வாசுதேவதாஸ், கணபதி விக்னேஷ்,

2013: அபராஜித், ஸ்ரீகாந்த் அனிருத்தா, எஸ் பத்ரிநாத், விஜய் சங்கர், ஆர் அஷ்வின், ரவி கார்த்திகேயன், முரளி விஜய்

2014: அபராஜித், அஷ்வின், விஜய் சங்கர்

2015: பாபா அபராஜித், ஆர் அஸ்வின்

2018: என் ஜெகதீசன், முரளி விஜய்

2019: என் ஜெகதீசன், முரளி விஜய்

2020: ஜெகதீசன், ஆர் சாய் கிஷோர், முரளி விஜய்,

2021: ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன்,

2022: ஹரி நிஷாந்த், என் ஜெகதீசன்

(2016 மற்றும் 2017 சீசன்களில் சென்னை அணி ஐபிஎல்லில் இருந்து தடை செய்யப்பட்டது)

சென்னை சூப்பர் கிங்ஸ்

மீதமுள்ள தொகை: 20.45 கோடி ரூபாய்

விடுவிக்கப்பட்ட வீரர்கள்: டுவைன் பிராவோ, ராபின் உத்தப்பா, ஆடம் மில்னே, ஹரி நிஷாந்த், கிறிஸ் ஜோர்டான், பகத் வர்மா, கேஎம் ஆசிப், என் ஜெகதீசன்

தற்போதைய அணி: எம்.எஸ்.தோனி (கேப்டன்), டெவோன் கான்வே, ருதுராஜ் கெய்க்வாட், அம்பதி ராயுடு, சுப்ரான்ஷு சேனாபதி, மொயின் அலி, ஷிவம் துபே, ராஜ்வர்தன் ஹங்கர்கேகர், டுவைன் பிரிட்டோரியஸ், மிட்செல் சான்ட்னர், ரவீந்திர ஜடேஜா, துஷார் தேஷ்பாண்டே, சிம்ஹார், சிம்ஹோவ். , தீபக் சாஹர், பிரசாந்த் சோலங்கி, மகேஷ் தீக்ஷனா

Chennai Super Kings Sports Cricket Ipl Ipl Cricket Ipl News Csk Ms Dhoni Ipl Auction
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment