IPL 2024 Auction: 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2024) நடைபெறுகிறது. இதையொட்டி வீரர்களின் மினி ஏலம் இன்று செவ்வாய்க்கிழமை துபாயில் நடக்கிறது. இந்திய நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு ஏலம் நிகழ்ச்சி தொடங்க உள்ளது.
ஏலப் பட்டியலில் 214 இந்தியர்கள், 119 வெளிநாட்டவர் என்று மொத்தம் 333 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் 116 வீரர்கள் மட்டும் சர்வதேச போட்டியில் ஆடிய அனுபவம் பெற்றவர்கள்.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL Auction 2024 Live Updates
முதல் சுற்று ஐ.பி.எல். 2024 ஏலம் முடிவுகள்:
இந்திய வீரர் யாஷ் தயாள் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு 5 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்
இந்திய வீரர் சுஷாந்த் மிஸ்ரா ராயல் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 2.2 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்
இந்திய வீரர் ஆகாஷ் சிங் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு 20 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டார்
இந்திய வீரர் கார்த்திக் தியாகி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 50 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டார்
இந்திய வீரர் ரசிக் தார் 20 லட்சத்துக்கு டெல்லி கேப்பிடல்ஸுக்கு ஏலம் எடுக்கப்பட்டார்
இந்திய வீரர் மானவ் சுதர் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு 20 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டார்
இந்திய வீரர் எம் சித்தார்த் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸுக்கு 2.40 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்
இந்திய வீரர் ஸ்ரேயாஸ் கோபால் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 20 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டார்
இங்கிலாந்தைச் சேர்ந்த டாம் கோஹ்லர்-காட்மோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 40 லட்சத்துக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இந்திய வீரர் ரிக்கி புய் டெல்லி கேப்பிடல்ஸுக்கு 20 லட்சத்திற்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
இந்திய வீரர் குமார் குஷாக்ராவை டெல்லி கேப்பிடல்ஸ் அணி 7.20 கோடிக்கு வாங்கியது.
ஏலத்தில் எடுக்கப்படாத வீரர்கள் பட்டியல்
ரோஹன் குன்னும்மாள்
சவுரவ் சவுகான்
பிரியன்ஸ் ஆர்யா
மனன் வோஹ்ரா
அர்ஷத் கான்
சர்ஃப்ராஸ் கான்
ராஜ் பாவா
விவ்ராந்த் சர்மா
அஜித் சேத்
ஹிருத்திக் ஷோக்கீன்
இந்திய வீரர் ரமன்தீப் சிங்கை 20 லட்சத்திற்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.
இந்திய வீரர் ஷாரூக் கானை 7.40 கோடிக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி வாங்கியுள்ளது
இந்திய வீரர் அர்ஷின் குல்கர்னியை 20 லட்சத்திற்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி வாங்கியுள்ளது
இந்திய வீரர் சமீர் ரிஸ்வியை 8.40 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வாங்கியுள்ளது
இந்திய வீரர் ஷுபம் துபே ராஜஸ்தான் ராயல்ஸ் அணியால் 5.80 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்
ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மேன் பவலை ரூ. 7.4 கோடிக்கு வாங்கியது.
இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக் டெல்லி கேபிட்டல்ஸ் அணியால் ரூ.4 கோடிக்கு வாங்கப்பட்டார். அவரை கடந்த சீசனில் 13.25 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வாங்கி இருந்தது.
ஆஸ்திரேலிய வீரர் டிராவிஸ் ஹெட்டை ரூ. 6.8 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி வாங்கியது.
இலங்கை வீரரான வனிந்து ஹசரங்காவை ரூ. 1.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது.
உலகக்கோப்பை தொடரில் அசத்திய இளம் வீரரான நியூசிலாந்தை சேர்ந்த ரச்சின் ரவீந்திராவை ரூ. 1.80 கோடிக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது.
இந்திய ஆல் ரவுண்டரான ஷர்துல் தாக்கூரை ரூ. 4 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் வாங்கியது.
குஜராத் டைட்டன்ஸ் அணி முதல் வீரராக ஆப்கானிஸ்தானை சேர்ந்த அஸ்மத்துல்லா ஓமர்சாயை ரூ.50 லட்சத்திற்கு ஏலத்தில் எடுத்தது.
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் கேப்டனான பேட் கம்மின்சை ஏலத்தில் எடுக்க பெங்களூரு மற்றும் ஐதராபாத் அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவியது. இறுதியில் அவரை ரூ. 20.50 கோடிக்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏலத்தில் வாங்கியது.
தென் ஆப்பிரிக்க வீரரான ஜெரால்டு கோட்ஸியை ரூ. 5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணி ஏலத்தில் வாங்கியது.
இந்திய பந்து வீச்சாளரான ஹர்ஷல் படேலை ரூ. 11.75 கோடிக்கு பஞ்சாப் அணி அணி ஏலத்தில் வாங்கியது.
நியூசிலாந்து வீரரான டேரில் மிட்செலை ரூ. 14 கோடிக்கு சென்னை அணி ஏலத்தில் வாங்கியது.
இங்கிலாந்து வீரரான கிறிஸ் வோக்சை ரூ. 4.20 கோடிக்கு பஞ்சாப் அணி ஏலத்தில் வாங்கியது.
தென் ஆப்பிரிக்க வீரரான ஸ்டப்ஸ் அடிப்படை விலையான ரூ. 50 லட்சத்திற்கு டெல்லி அணி வாங்கியது.
கொல்கத்தா அணி இந்திய வீரரான கே.எஸ்.பாரத் ரூ. 50 லட்சத்திற்கு வாங்கியது.
கொல்கத்தா அணி இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் சேத்தன் சக்காரியாவை ரூ. 50 லட்சத்திற்கு வாங்கியது.
பெங்களூரு அணி முதல் வீரராக வெஸ்ட் இண்டீஸ் வேகப்பந்து வீச்சாளரான அல்சாரி ஜோசப்பை ரூ. 11.50 கோடிக்கு வாங்கியது.
குஜராத் அணி இந்திய வேகப்பந்து வீச்சாளரான உமேஷ் யாதவை ரூ. 5.80 கோடிக்கு வாங்கியது.
லக்னோ அணி இந்திய இளம் வேகப்பந்து வீச்சாளர் ஷிவம் மாவியை ரூ. 6.40 கோடிக்கு வாங்கியது.
கம்மின்ஸை முந்திய ஸ்டார்க்
மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளரான மிட்செல் ஸ்டார்க்கை ஏலத்தில் எடுக்க அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவின. இறுதியில் ஐ.பி.எல் வரலாற்றிலேயே அதிக தொகையாக ரூ. 24.75 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியது.
தற்போது நடந்து வரும் ஏலத்தில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ரூ. 20.50 கோடிக்கு பேட் கம்மின்ஸை ஏலத்தில் வாங்கியது. இதன்மூலம் பேட் கம்மின்ஸ் ஏல தொகையை மிட்செல் ஸ்டார்க் முந்தினார்.
That's a GRAND return to the IPL for Mitchell Starc 😎
— IndianPremierLeague (@IPL) December 19, 2023
DO NOT MISS the record-breaking bid of the left-arm pacer who will feature for @KKRiders 💜💪#IPLAuction | #IPL pic.twitter.com/D1A2wr2Ql3
மும்பை அணி இலங்கை வீரர் தில்ஷன் மதுஷங்காவை ரூ. 4.60 கோடிக்கு வாங்கியது.
ஜோஷ் ஹேசில்வுட், முஜீப் ரகுமான், தப்ரைஸ் ஷம்சி, சோதி உள்ளிட்ட சில முக்கிய வீரர்களை ஏலத்தில் எடுக்க எந்த அணிகளும் முன்வரவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.