ipl-2024 | IPL 2024 Auction Free Live Streaming: 17-வது ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2024) நடைபெறுகிறது. இதையொட்டி வீரர்களின் மினி ஏலம் நாளை செவ்வாய்க்கிழமை (டிச.19ம் தேதி) துபாயில் நடக்கிறது. ஏலப் பட்டியலில் 214 இந்தியர்கள், 119 வெளிநாட்டவர் என்று மொத்தம் 333 பேர் இடம் பெற்றுள்ளனர்.
இதில், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த முன்னணி வீரர்களான டிராவிஸ் ஹெட், மிட்செல் ஸ்டார்க் மற்றும் பாட் கம்மின்ஸ் போன்றோரும் இடம் பிடித்துள்ளனர். இதேபோல், சமீபத்தில் முடிவடைந்த ஒருநாள் உலகக் கோப்பையில் மிகவும் சிறப்பாக செயல்பட்ட ரச்சின் ரவீந்திரா மற்றும் அஸ்மத்துல்லா உமர்சாய் ஆகிய நம்பிக்கைக்குரிய இளம் வீரர்களும் இடம் பிடித்துள்ளனர். இந்த வீரர்களை வாங்க 10 அணிகளும் நிச்சயம் போட்டி போடும்.
ஐபிஎல் ஏலம் 2024: இடம்
ஐபிஎல் ஏலம் துபாயில் உள்ள கோகோ கோலா அரங்கில் நடைபெறவுள்ளது. இந்தியாவிற்கு வெளியே ஐபிஎல் ஏலம் நடைபெறுவது இதுவே முதல் முறையாகும்.
ஐபிஎல் ஏலம் 2024: எப்போது தொடங்கும்?
ஐபிஎல் ஏலம் இந்திய நேரப்படி பிற்பகல் 1 மணிக்கு தொடங்குகிறது.
ஐபிஎல் ஏலம் 2024: லைவ் ஆக பார்ப்பது எப்படி?
ஐபிஎல் 2024 ஏலம் தொடர்பாக தொலைக்காட்சியில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நெட்வொர்க்கில் ஒளிபரப்பப்பட உள்ளது.
ஆன்லைனில் உங்களது மொபையில் அல்லது லேப்டாப்பில் நீங்கள் ஜியோ சினிமா இனைய பக்கம் அல்லது ஆப்-பில் நேரலையில் ஸ்ட்ரீம் செய்து பார்க்கலாம்.
ஐபிஎல் ஏலம் 2024: பங்கேற்கும் வீரர்கள் எண்ணிக்கை?
இந்த மினி ஏலத்தில் மொத்தம் 333 வீரர்கள் களமிறங்குவார்கள். 10 அணிகளில் மொத்தம் 77 இடங்கள் நிரப்பப்பட உள்ளன.
ஐபிஎல் 2024 ஏலம்: ஒவ்வொரு அணியிடமும் மீதமுள்ள தொகை
சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே) - ரூ.31.4 கோடி
டெல்லி கேபிட்டல்ஸ் (டி.சி) - 28.95 கோடி
குஜராத் டைட்டன்ஸ் (ஜி.டி) - ரூ 38.15 கோடி
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) - ரூ 32.7 கோடி
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்.எஸ்.ஜி) - ரூ 13.15 கோடி
மும்பை இந்தியன்ஸ் (எம்.ஐ) - ரூ 17.75 கோடி
பஞ்சாப் கிங்ஸ் (பி.பி.கே.எஸ்) - ரூ 29.1 கோடி
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (ஆர்.சி.பி) - 23.25 கோடி
ராஜஸ்தான் ராயல்ஸ் (ஆர்.ஆர்) - ரூ 14.5 கோடி
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (எஸ்.ஆர்.எச்) - ரூ 34 கோடி
10 ஆணிகளால் விடுவிக்கப்பட்ட வீரர்களின் முழு பட்டியல் பின்வருமாறு:
சென்னை சூப்பர் கிங்ஸ் - 8
விடுவிக்கப்பட்ட வீரர்கள்: பென் ஸ்டோக்ஸ், டுவைன் பிரிட்டோரியஸ், பகத் வர்மா, சுப்ரான்சு சேனாபதி, அம்பதி ராயுடு (ஓய்வு), ஆகாஷ் சிங், கைல் ஜேமிசன் மற்றும் சிசண்டா மகலா.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் - 11
விடுவிக்கப்பட்ட வீரர்கள்: வனிந்து ஹசரங்கா, ஜோஷ் ஹேசில்வுட், ஹர்ஷல் படேல், ஃபின் ஆலன், மைக்கேல் பிரேஸ்வெல், டேவிட் வில்லி, வெய்ன் பார்னெல், சோனு யாதவ், அவினாஷ் சிங், சித்தார்த் கவுல், கேதர் ஜாதவ்.
மும்பை இந்தியன்ஸ் - 11
விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஜோஃப்ரா ஆர்ச்சர், டிரிஸ்டன் ஸ்டப்ஸ், டுவான் ஜான்சன், ஜே ரிச்சர்ட்சன், ரிலே மெரிடித், கிறிஸ் ஜோர்டான், சந்தீப் வாரியர், முகமது அர்ஷத் கான், ராமன்தீப் சிங், ஹிருத்திக் ஷோக்கீன், ராகவ் கோயல்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் - 8
விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஜெய்தேவ் உனத்கட், டேனியல் சாம்ஸ், மனன் வோஹ்ரா, ஸ்வப்னில் சிங், கரண் சர்மா, அர்பித் குலேரியா, சூர்யன்ஷ் ஷெட்ஜ், கருண் நாயர்.
குஜராத் டைட்டன்ஸ் - 8
விடுவிக்கப்பட்ட வீரர்கள்: பிரதீப் சங்வான், ஒடியன் ஸ்மித், அல்ஜாரி ஜோசப், தசுன் ஷனகா, யாஷ் தயாள், கே.எஸ்.பரத், சிவம் மாவி, உர்வில் படேல்.
சன்ரைசர்ஸ் ஐதராபாத் - 6
விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஹாரி புரூக், சமர்த் வியாஸ், கார்த்திக் தியாகி, விவ்ராந்த் சர்மா, அகேல் ஹொசைன், அடில் ரஷித்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் - 8
ஷாகிப் அல் ஹசன், லிட்டன் தாஸ், ஆர்யா தேசாய், டேவிட் வைஸ், நாராயண் ஜெகதீசன், மன்தீப் சிங், குல்வந்த் கெஜ்ரோலியா, ஷர்துல் தாக்கூர், லாக்கி பெர்குசன், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, ஜான்சன் சார்லஸ்.
டெல்லி கேபிட்டல்ஸ் - 11
விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ரிலீ ரோசோவ், சேத்தன் சகாரியா, ரோவ்மன் பவல், மணீஷ் பாண்டே, பில் சால்ட், முஸ்தாபிசுர் ரஹ்மான், கமலேஷ் நாகர்கோட்டி, ரிபால் பட்டேல், சர்பராஸ் கான், அமன் கான், பிரியம் கார்க்.
பஞ்சாப் கிங்ஸ் - 5
விடுவிக்கப்பட்ட வீரர்கள்: பானுகா ராஜபக்சே, மோஹித் ரதீ, பால்தேஜ் தண்டா, ராஜ் அங்கத் பாவா, ஷாருக் கான்.
ராஜஸ்தான் ராயல்ஸ் - 9
விடுவிக்கப்பட்ட வீரர்கள்: ஜோ ரூட், அப்துல் பாசித், ஜேசன் ஹோல்டர், ஆகாஷ் வசிஷ்ட், குல்தீப் யாதவ், ஓபேட் மெக்காய், முருகன் அஷ்வின், கே.சி. கரியப்பா, கே.எம்.ஆசிப்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.