IPL 2023 Auction - Sunrisers Hyderabad - Kavya Maran Tamil News: 16-வது ஐ.பி.எல். டி-20 கிரிக்கெட் போட்டிக்கான மினி ஏலம் கேரள மாநிலம் கொச்சியில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் 10 அணிகளும் தங்களுக்கான வீரர்களை வாங்கி வருகின்றன. இந்நிலையில், இந்த மினி ஏலத்தில் 'சன்ரைசர்ஸ் ஐதராபாத்’ அணி தங்களது அணிக்கு தேவையான வீரர்களை போட்டி போட்டு வாங்கி வருகிறது.
இந்நிலையில், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நிர்வாகியான காவ்யா மாறன் சமூக வலைதளத்தில் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார். அவரது பெயரை டேக் செய்து கிரிக்கெட் ரசிகர்கள் பதிவு செய்து வருகின்றனர்.
இன்றைய ஏலத்திற்கு வரும் முன் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் இருப்புத் தொகை 42.25 கோடி ரூபாயாக இருந்தது. சொல்லப்போனால் அந்த அணி தான் மற்ற 9 அணிகளை விடவும் அதிக தொகையை கையில் வைத்திருந்தது. ஆனால், அவர்களால் பென் ஸ்டோக்ஸ், கேமரூன் கிரீன் மற்றும் சாம் கரனை போன்ற முன்னணி வீரர்களை ஏலத்தில் எடுக்க முடியவில்லை. இறுதியில் இங்கிலாந்து வீரர் ஹாரி புரூக்கை 13.25 கோடிக்கு வாங்கினர்.
காவ்யா மாறனை கலாய்க்கும் ரசிகர்கள்
இந்த நிலையில், சமூக வலைதளத்தில் சில ரசிகர்கள் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் நிர்வாகி காவ்யா மாறனின் மோசமான ஏலமாக இது அமைந்து போனது என்று பதிவிட்டு வருகின்றனர். ஆனால். இன்னும் சிலரோ, காவியா அக்காவுக்காகவே ஐபிஎல் ஏலத்தை பார்த்தேன்' என கமெண்ட்களை போட்டிருக்கிறார்கள். எவ்வாறாயினும், இன்றைய ஐ.பி.எல். மினி ஏலத்தில் வீரர்களை விட காவ்யா மாறன் தான் ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறார் என்பது குறிபிடத்தக்கது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil