Advertisment

IPL Auction: சவுதியில் அரங்கேறும் மெகா ஏலம்... களமிறங்கும் 1,574 வீரர்கள்!

ஐ.பி.எல். 2025 தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் வருகிற 24 மற்றும் 25 ஆம் தேதி ஆகிய இரு நாட்கள் ஜெட்டாவில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது.

author-image
WebDesk
New Update
IPL Auction Mega auction to be held on November 24 and 25 in Saudi Arabia Jeddah 1574 players Tamil News

ஐ.பி.எல். மெகா ஏலம்: ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 25 வீரர்களை சேர்க்கலாம். தக்க வைத்துள்ள வீரர்கள் போக 204 இடங்களை ஏலத்தின் மூலம் நிரப்ப வேண்டி உள்ளது.

10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் இந்தாண்டில் நடைபெற இருக்கிறது. இந்த ஏலத்திற்கு முன்பாக தொடரில் களமாடும் 10 அணிகளும் சேர்ந்து 46 வீரர்களை தக்க வைத்துள்ளன. மற்ற வீரர்கள் அனைவரும் ஏலத்திற்கு வருகிறார்கள்.

Advertisment

இந்நிலையில், ஐ.பி.எல். 2025 தொடருக்கான மெகா ஏலம் நடைபெறும் இடமாக சவுதி அரேபியாவின் ரியாத் மற்றும் ஜெட்டா ஆகிய நகரங்கள் பி.சி.சி.ஐ பரிசீலனை செய்த சூழலில், துறைமுக நகரான ஜெட்டாவை தற்போது தேர்வு செய்துள்ளது. இதன்படி ஐ.பி.எல். 2025 தொடருக்கான வீரர்களின் மெகா ஏலம் வருகிற 24 மற்றும் 25 ஆம் தேதி ஆகிய இரு நாட்கள் ஜெட்டாவில் நடைபெறும் என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பி.சி.சி.ஐ) நேற்று செவ்வாய்க்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்தது.

இந்த ஏலத்தில் கலந்து கொள்ள 1574 வீரர்கள் பதிவு செய்துள்ளனர். இதில் 1,165 இந்தியர், 409 வெளிநாட்டவர்கள் ஆவர். மேலும், இதில் 48 இந்தியர்கள் உள்பட 320 வீரர்கள் சர்வதேச போட்டியில் ஆடியவர்கள் ஆவர்.

வெளிநாட்டு வீரர்களில் அதிகபட்சமாக தென் ஆப்பிரிக்காவில் இருந்து 91 பேரும், ஆஸ்திரேலியாவில் இருந்து 76 வீரர்களும், இங்கிலாந்தை சேர்ந்த 52 வீரர்களும் ஏலப்பட்டியலில் இடம் பிடித்துள்ளனர். இவர்களில் இருந்து அணிகளின் விருப்பத்தின் அடிப்படையில் ஏலத்திற்கு முன்பாக இறுதிப்பட்டியல் தயாரிக்கப்படும்.

ஒவ்வொரு அணியிலும் அதிகபட்சமாக 25 வீரர்களை சேர்க்கலாம். தக்க வைத்துள்ள வீரர்கள் போக 204 இடங்களை ஏலத்தின் மூலம் நிரப்ப வேண்டி உள்ளது. 

10 அணிகளும் 46 வீரர்களை தக்கவைத்திருக்கும் நிலையில், நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் முன்னாள் சாம்பியனான ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய அணிகள் தலா 6 வீரர்களை தக்கவைத்துள்ளன. சென்னை சூப்பர் கிங்ஸ், குஜராத் டைட்டன்ஸ், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் ஆகிய ஐந்து அணிகள் தலா ஐந்து வீரர்களைத் தக்கவைத்துள்ளன. 

இதற்கிடையில், டெல்லி கேப்பிடல்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் பஞ்சாப் கிங்ஸ் (பிபிகேஎஸ்) முறையே நான்கு, மூன்று மற்றும் இரண்டு வீரர்களைத் தக்கவைத்துள்ளன. கையில் ரூ.110.5 கோடியுடன், பஞ்சாப் கிங்ஸ் மிகப்பெரிய பர்ஸுடன் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட அதிரடி-பேக் மெகா ஏலத்தில் இறங்குகிறது.

ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்கும் பங்கேற்கும் வீரர்களின் விவரம்:

கேப்டு இந்தியர்கள்: 48 வீரர்கள்

கேப்டு வெளிநாட்டு வீரர்கள்: 272 வீரர்கள்

முந்தைய ஐபிஎல் சீசன்களின் இருந்த அன்கேப்டு இந்தியர்கள்: 152 வீரர்கள்

முந்தைய ஐபிஎல் சீசன்களின் இருந்த கேப்டு வெளிநாட்டு வீரர்கள்: 3 வீரர்கள்

அன்கேப்டு இந்தியர்கள்: 965 வீரர்கள்

அன்கேப்டு வெளிநாட்டு வீரர்கள்: 104 வீரர்கள்

409 வெளிநாட்டு வீரர்களின் நாடு வாரியான விவரம்:

ஆப்கானிஸ்தான் - 29
ஆஸ்திரேலியா - 76
வங்கதேசம் - 13
கனடா - 4
இங்கிலாந்து - 52
அயர்லாந்து - 9
இத்தாலி - 1
நெதர்லாந்து - 12
நியூசிலாந்து - 39
ஸ்காட்லாந்து - 2
தென் ஆப்பிரிக்கா - 91
இலங்கை - 29
ஐக்கிய அரபு எமிரேட்ஸ் - 1
அமெரிக்கா - 10
வெஸ்ட் இண்டீஸ் - 33
ஜிம்பாப்வே - 8.

Ipl Cricket Ipl Auction Ipl
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment