நட்சத்திர வீரரான விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பன்டை ரூ. 27 கோடிக்கு லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி ஏலம் எடுத்துள்ளது. முன்னதாக, இதே ஏலத்தில் ஷ்ரேயஸ் ஐயர் ரூ. 26.75 கோடிக்கு ஏலம் போனதே அதிக தொகையாக கருதப்பட்டது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: WATCH: The bidding drama that made Rishabh Pant the most expensive IPL player at Rs 27 crore
ஏலத்திற்கு முந்தைய கணிப்பை நியாப்படுத்தும் விதமாக அதிகப்படியாக ரூ. 27 கோடிக்கு ரிஷப் பன்ட் ஏலம் எடுக்கப்பட்டுள்ளார். குறிப்பாக, ரூ. 11.75 கோடியில் இருந்த போது ஏலம் முடிந்து விடும் எனக் கருதப்பட்டது. எனினும், பன்ட் தவிர்க்க முடியாத இடம் பெற்றிருந்தால், அவர் இவ்வளவு தொகைக்கு ஏலம் போனார். இது குறித்து அணியின் உரிமையாளர்களும் தீவிரமாக கலந்து ஆலோசனை நடத்தினர். லக்னோ அணியின் பயிற்றுநரான ஜாகீர் கானும் இதில் தீவிரம் காண்பித்தார். இறுதியாக லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ரூ. 27 கோடிக்கு அவரை ஏலம் எடுத்தார்.
ஐபிஎல் தொடரில் 2016-ஆம் ஆண்டு அறிமுகமான ரிஷப் பன்ட் டெல்லி அணிக்காக விளையாடி வந்தார். அவர் கடந்த 2021 முதல் டெல்லி அணியின் கேப்டனாக செயல்பட்டார். எனினும், அவர் டெல்லி அணியால் தக்கவைக்கப்படவில்லை.
ஐபில் தொடரில் 111 போட்டிகளில் விளையாடிய ரிஷப் பன்ட் 3284 ரன்கள் அடித்துள்ளார். இந்தியாவுக்காக 66 டி20 போட்டிகளில் விளையாடிய அவர் 1209 ரன்கள் குவித்து 127.26 ஸ்ட்ரைக் ரேட்டுடன் உள்ளார்.
லக்னோ அணிக்காக விளையாடவுள்ள ரிஷப் பன்ட், தனது முழுத் திறனையும் வெளிப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“