”ததித்திரிகிட தோனி...” ஐபிஎல் நடைபெறவில்லை என்றாலும் தோனி மீது பாசம் குறையுமா?

கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இறுதியாக தோனி விளையாடினார்.

IPL Chennai super kings fan recites Dhoni name in his Carnatic music practice : கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி வருகின்ற நிலையில் பொதுமக்கள் அனைவரும் சுய ஊரடங்கினை பின்பற்றி வருகின்றனர்.   உலகின் பல்வேறு இடங்களில் நடைபெற இருந்த பல்வேறு முக்கியமான நிகழ்வுகள் ரத்து செய்யப்பட்டது.  இந்த வருடம் நடைபெற இருந்த ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளும் அதற்கு விதிவிலக்கல்ல.

மேலும் படிக்க : ரத்தாகிறது விம்பிள்டன் போட்டிகள்… இரண்டாம் உலக போருக்கு பின்பு இது தான் முதல்முறை!

IPL chennai super kings fan recites Dhoni name in his Carnatic music practice

ஐ.பி.எல். போட்டிகளுக்கான தேதிகள் முடிவு செய்யப்பட்ட நிலையில்  சென்னைக்கு வந்து பயிற்சியில் ஈடுபட ஆரம்பித்தார் சிஎஸ்கே தலைவர் மகேந்திர சிங் தோனி.  கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் இறுதியாக தோனி விளையாடினார். அதன் பின்பு மைதானத்தில் கூட தோனியை பார்க்க முடியாத நிலை தான் நிலவி வருகிறது.

இந்நிலையில் அவரின் வருகையை எதிர்பார்த்து வெறித்தனமாக காத்துக்கொண்டிருந்தனர் சிஎஸ்கே ரசிகர்கள்.  ஆனால் கொரோனா பரவலால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.  ஆனாலும் சுய ஊரடங்கில் இருக்கும் ரசிகர்கள் தங்களின் விருப்பமான விளையாட்டு வீரர் தோனியை மறக்கவில்லை.  சென்னையை சேர்ந்த சர்வஜித் என்பவர் தோனி மற்றும் சிஎஸ்கே’வை நினைவு கூறும் வகையில் கர்நாடிக் இசையில் பாடலுடன் சேர்த்து மிருதங்கமும் இசைத்து மக்கள் மனதில் இடம் பெற்றிருக்கிறார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்” 

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close