IPL 15 Season Fill Schedule Update : இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் தொடருக்கு உலகளவில் பெரிய வரவேற்பு இருந்து வருகிறது. இதுவரை 14- சீசன்கள் முடிந்துள்ள நிலையில், 15-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 26-ந் தேதி தொடங்க உள்ளதாக பிசிசிஐ அறிவித்துள்ளது.
இதுவரை சென்னை மும்பை கொல்கத்தா ஐதராபாத், டெல்லி, ராஜஸ்தான் பஞ்சாப் பெங்களூர் உள்ளிட்ட 8 அணிகள் மட்டுமே பங்கேற்று வந்த இந்த தொடரில் நடப்பு ஆண்டு லக்னோ மற்றும் அகமதாபாத் என இரண்டு புதிய அணிகள் இணைந்துள்ளது. இந்த தொடருக்கான வீரர்கள் மெகா ஏலம் கடந்த பிப்ரவரி 12 மற்றும் 13-ந் தேதி பெங்களூருவில் நடைபெற்றது.
இந்நிலையில், ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் 10 அணிகளும் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது இதில் ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் உள்ள அணிகளுடன் 2 முறையும், மற்ற பிரிவில் உள்ள அணிகளுடன் தலா ஒருமுறையும் மோதும். மொத்தம் 70 லீக் ஆட்டங்கள் 65 நாட்கள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இதில் மார்ச் 26-ந் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெறும் முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன. தொடர்ந்து அடுத்த நாள் (மார்ச் 27ம்) 2- போட்டிகள் நடைபெறுகிறது. இதில் முதல் போட்டியில், மும்பை இந்தியன்ஸ் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகள் புனே பிரபோர்ன் மைதாத்தில் நடைபெறுகிறது.
தொடர்ந்து மராட்டியத்தில் உள்ள டிஒய் பாட்டீல் ஸ்டேடியத்தில் நடைபெறும் 2-வது ஆட்டத்தில், பஞ்சாப் கிங்ஸ் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதுகின்றன. டிஒய் பாட்டீல் ஸ்டேடியம், புனேவில் உள்ள பிரபோர்ன் மற்றும் எம்சிஏ இன்டர்நேஷனல் ஸ்டேடியத்தில் தலா 15 போட்டிகள் நடைபெற உள்ளது. 2 ஆட்டங்கள் நடைபெறும் நாளில் முதல் போட்டி பிற்பகல் 3:30 மணிக்கு தொடங்கும். 2-வது போட்டி இரவு 7:30 மணிக்கு தொடங்கும்.
https://bcciplayerimages.s3.ap-south-1.amazonaws.com/documents/IPL/document/2022/03/TATA_IPL_2022-Match_Schedule.pdf
மொத்தம் 12 நாட்கள் 2 போட்டிகள் நடைபெற உள்ளது பிளேஆஃப்களுக்கான அட்டவணை மற்றும் இறுதிப் போட்டி நடைபெறும் நாள் மே 29 ஆம் தேதிக்கு பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறிப்பிடப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“