ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் அதிகப்படியான ரசிகர்களை கொண்ட தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா இணைந்துள்ளார் என்று அணி நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
2023-ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31-ந் தேதி தொடங்குகிறது. இந்த தொடருக்கான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாகவே இந்த பயிற்சி தொடர்பான புகைப்படங்களை சென்னை அணி நிர்வாகம் தங்களது சமூக வலைதள பக்கத்தில் பதிவேற்றம் செய்து வருகிறது.
இதில் சில புகைப்படங்களில் ரவீந்திர ஜடேஜா இடம்பெற்றிருந்தார். மேலும் கடந்த சீசனுக்கு பிறகு அவர் எவ்வாறு அணியில் இணைந்தார் என்பது குறித்து பல பதிவுகள் வெளியாகி இருந்தன. 4 முறை ஐபிஎல் சாம்பியனான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் முக்கிய ஆல்ரவுண்டராக திகழும் ரவீந்திர ஜடேஜா, கடந்த முறை அணி நிர்வாகத்துடன் சற்று கருத்து வேறுபாடுடன் இருந்ததாக தகவல் வெளியானது.
மேலும் கடந்த சீசனில் மும்பையில் சென்னை அணி வீரர்கள் தங்கியிருந்த ஹோட்டலை விட்டு வெளியேறியதாக கூறப்படும் ஜடேஜா, கேப்டன் எம்எஸ் தோனியுடன் நீண்ட, வெளிப்படையாக பேசியதாக தகவல் வெளியானது. மேலும் ஜடேஜா தவறான புரிதல் காரணமாக அவ்வாறு நடந்துகொண்டதாக தகவல் வெளியாவதற்கு முன்பு அவர் சென்னை அணியின் சி.இ.ஒ காசி விஸ்வநாதனிடம் பேசியதாக கூறப்பட்டது. ஆனால் தனது உரையாடலின் விவரங்களை அவர் வெளியிட மறுத்துவிட்டார்.
அதே சமயம் சென்னை அணியின் வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் என அனைவருமே சுதந்திரமான, வெளிப்படையான மற்றும் நீண்ட உரையாடல்களைக் கொண்டிருந்ததை அவர் உறுதிப்படுத்தினார். ஜடேஜா அணியில் இணைவதற்கு முன்பே, வெளிப்படையான பரிமாற்றம் சில காலத்திற்கு முன்பு நடைபெற்றது. கடந்த 2022 சீசன் தொடங்குவதற்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தோனியும் காசி விஸ்வநாதனும் ஜடேஜாவை கேப்டனாக அறிவித்தனர்.
ஆனால் தொடர் தோல்விகள் காரணமாக தொடரில் நடுவில் ஜடேஜாவிடம் இருந்து கேப்டன் பதவி பறிக்கப்பட்டு மீண்டும் தோனியின் வசம் ஒப்படைக்கப்பட்டது. லீக்கில் மிகவும் வலிமையான அணிகளில் ஒன்றான சிஎஸ்கே, 2022-ம் ஆண்டு சீசனில் 10 அணிகள் கொண்ட பட்டியலில் 10 தோல்விகள் மற்றும் நான்கு வெற்றிகளுடன் 9-வது இடத்தைப் பிடித்தது.
ஆனால் சிஎஸ்கே அணியில் இருந்து வீரர்கள் மற்றும் நிர்வாகிகள் யாருமே இது குறித்து எந்தவிதமாக தகவல்களையும் பகிர்ந்துகொள்ளவில்லை என்றாலும், ஜடேஜா இரண்டு காரணங்களுக்காக வருத்தப்பட்டார் என்பது தெரியவருகிறது. இதில் ஒன்று கேப்டன் பதவி அவரிடமிருந்து பறிக்கப்பட்டது மற்றொன்று அவரால் சிறந்த முறையில் செயல்பட முடியவில்லை. கடந்த சீசனில் அவர் விளையாடிய 10 ஆட்டங்களில், 19 சராசரியாக 116 ரன்கள் எடுத்தார் மற்றும் 7.52 என்ற எகானமி விகிதத்தில் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.
The hype is unreal, but this photo is real!🔥#WhistlePodu #Yellove 🦁💛@imjadeja @benstokes38 pic.twitter.com/JMJ8wXuLjL
— Chennai Super Kings (@ChennaiIPL) March 25, 2023
மேலும் அவரது கேப்டன்சி குறித்த கருத்து தெரிவித்த தோனி, "கடந்த சீசனில் ஜடேஜா இந்த ஆண்டு கேப்டனாக இருப்பார் என்று எனக்குத் தெரியும். முதல் இரண்டு ஆட்டங்களில், நான் அவருடைய பணியை பார்வையிட்டேன். பின்னர் அவர் முழுமையாக செயல்பட அனுமதித்தேன். அதன் பிறகு, அவர் தனது சொந்த முடிவுகளையும் பொறுப்பையும் எடுக்க வேண்டும் என்று நான் வலியுறுத்தினேன். ஒருமுறை நீங்கள் கேப்டனாக ஆக வேண்டும் என்றால் நிறைய கோரிக்கைகள் வரும்.
ஆனால் பணிகள் வளர வளர அது அவரது மனதை பாதித்தது. கேப்டன் பதவி அவரது ஆட்டதிறன் மற்றும் செயல்பாடுகளுக்கு சுமையாக மாற்றியது என்று நான் நினைக்கிறேன்," என்று மே 1 அன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்திற்கு பிறகு தோனி கூறியிருந்தார். தோனியின் கருத்தும் அவரைப் புண்படுத்தியிருக்கலாம் என்று கூறப்படுகிறது..
இறுதியில், கேப்டன் பதவி அவருக்கு சுமையாக இருக்கலாம் என்றும் அது அவரது செயல்திறனைப் பாதித்தது என்றும் அவருக்கு விளக்கப்பட்டது. தற்போது அதனை புரிந்துகொண்ட ஜடேஜா மார்ச் 22 அன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது மற்றும் கடைசி ஒருநாள் போட்டிக்காக சென்னை வந்த அவர், தற்போது சிஎஸ்கே முகாமில் இணைந்துள்ளார். "ஜட்டு நலமாக உள்ளார், அவர் மீண்டும் அணிக்கு வந்ததில் மகிழ்ச்சியடைகிறார், மேலும் சிறப்பாக செயல்பட ஆர்வமாக உள்ள அவர் சீசனை எதிர்நோக்குகிறார்" என்று சிஎஸ்கே அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
2023-ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மோதுகிறது. இந்த போட்டி வரும் மார்ச் 31-ம் தேதி அகமதாபாத்தில் தொடங்குகிறது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.