scorecardresearch

IPL 2023: பிளே ஆஃப் வாய்ப்பை இழந்த முதல் அணி; இனி ஜெயித்தாலும் சான்ஸ் இல்லை

, 60 லீக் போட்டிகள் முடிந்தும் இதுவரை ஒரு அணி மட்டுமே வெளியேறியுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

IPL Cricket
MI, CSK, RCB, LSG, RR, PK Can Still Qualify for the IPL 2023

16-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில், 60 லீக் போட்டிகள் முடிந்தும் இதுவரை ஒரு அணி மட்டுமே வெளியேறியுள்ளது கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் கிரிக்கெட் திருவிழா என்று அழைக்கப்படும் ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் கடந்த மார்ச் 30-ந் தேதி தொடங்கியது. 10 அணிகள் பங்கேற்றுள்ள இந்த தொடரில் ஒவ்வொரு அணியும் 14 லீக் போட்டிகள் விளையாட வேண்டும். அந்த வகையில் தற்போது 10 அணிகளும் தலா 12 லீக் போட்டிகளில் விளையாடியுள்ளது. ஒரு சில அணிகள் 13 போட்டிகளில் விளையாடியுள்ளது.

இந்நிலையில், புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ள குஜராத் அணி 12 போட்டிகளில் விளையாடி 8 வெற்றியுடன் 16 புள்ளிகள் பெற்று முதலிடத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் அந்த அணி சன்ரைசஸ் அணியை வீழ்த்தும் பட்சத்தில் முதல் அணியாக ப்ளேஅப் சுற்றுக்கு முன்னேறலாம்.

அடுத்து 2-வது இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்ளது. 13 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை அணி 7 வெற்றி 1 டையுடன் 15 புள்ளிகள் பெற்றுள்ளது. வரும் மே 20-ந் தேதி டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி வெற்றி பெற்றால் ப்ளேஅப் சுற்றுக்கு எளிதாக முன்னேறலாம். ஆனால் தோல்வியடைந்தால் மற்ற அணிகளின் வெற்றி தோல்வியை பொறுத்து சென்னை அணியின் ப்ளே அப் வாய்ப்பு இருக்கும்.

3-வது இடத்தில் உள்ள மும்பை அணி 12 போட்டிகளில் 7 வெற்றிகளுடன் 14 புள்ளிகள் பெற்றுள்ளது. அடுத்து வரும் 2 போட்களிலும் மும்பை அணி வெற்றியை தக்க வைக்க வேண்டிய நிலையில் உள்ளது. 4-வது இடத்தில் உள்ள லக்னோ அணி 12 போட்டிகளில் 6 வெற் 1 டையுடன் 13 புள்ளிகள் பெற்றுள்ளது. இதனால் லக்னோ அணி அடுத்து வரும் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றால் மட்டுமே அடுத்த சுற்று வாய்ப்பு கிடைக்கும்.

அதே 12 போட்டிகளில் 6 வெற்றியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ள பெங்களூர் அணி 5-வது இடத்திலும்,  13 போட்டிகளில் 6 வெற்றியுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ள ராஜஸ்தான் அணி 6-வது இடத்திலும்,  அதே 13 போட்டிகளில் 6 வெற்றிகளுடன் 12 புள்ளிகள் பெற்றுள்ள கொல்கத்தா அணி 7-வது இடத்திலும், 12 புள்ளிகளுடன் பஞ்சாப் அணி 8-வது இடத்திலும் உள்ளது. இதில் ராஜஸ்தான் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இன்னும் ஒரு போட்டி மட்டுமே மீதமுள்ள நிலையில், கடைசி போட்டியில் வெற்றி பெற்றாலும் மற்ற அணிகளின் வெற்றியை பொறுத்தே ப்ளே அப் வாய்ப்பு கிடைக்கும்.

11 போட்டிகளில் 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ள சன்ரைசஸ் ஐதராபாத் அணி ஏறக்குறைய ப்ளேஅப் வாய்ப்பை இழந்துவிட்டது என்றுதான் சொல்ல வேண்டும். இன்று நடைபெறும் போட்டியில் ஐதராபாத் அணி குஜராத் அணியை எதிர்த்து விளையாடி வருகிறது. 12 போட்டிகளில் விளையாடி 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்றுள்ள டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி நடப்பு ஆண்டில் முதல் அணியாக தொடரில் இருந்து வெளியேறியுள்ளது.

அந்த அணி தனது அடுத்த 2 போட்டிகளில் (சென்னை பஞ்சாப்) வெற்றி பெற்றாலும் கூட புள்ளிப்பட்டியலில் எவ்வித பாதிப்பும் ஏற்படபோவதில்லை.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ipl cricket 2023 delhi capitals eliminated on first in the series