Advertisment

CSK vs GT Highlights: ஆல்ரவுண்டராக அசத்திய சி.எஸ்.கே : குஜராத் அணியை வீழ்த்தி 2-வது வெற்றி

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 7-வது லீக் போட்டியில் சி.எஸ்.கே - ஜி.டி அணிகள் மோதியது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
CSK Vs GT Live Score

சென்னை சூப்பர் கிங்ஸ் - குஜராத் டைட்டன்ஸ்

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரின் 17-வது சீசன் கடந்த மார்ச் 22-ந் தேதி தொடங்கிய நிலையில், இன்று நடைபெறும் 7-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – குஜராத் டைட்டன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் இந்த போட்டி நடைபெற்றது. 

Advertisment

CSK vs GT Live Score, IPL 2024

இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச்சை தேர்வு செய்ததை தொடர்ந்து முதலில் களமிறங்கிய சென்னை அணியில், ரச்சின் ரவீந்திரா – ருத்துராஜ் கெய்க்வாட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். முதல் ஓவரில் சென்னை அணிக்கு 2 ரன்கள் மட்டுமே கிடைத்திருந்தாலும், 2-வது ஓவரில் இருந்து ரச்சின் ரவீந்திரா அதிரடி ஆட்டத்திற்கு மாறினார். இதனால் சென்னை அணியின் ஸ்கோர் மளமளவென அதிகரித்தது.

இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 62 ரன்கள் சேர்த்த நிலையில், ரச்சின் ரவீந்திரா 20 பந்துகளில் 6 பவுண்டரி 3 சிக்சருடன் 46 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரஹானே 12 ரன்களில் வெளியேறிய நிலையில், 4-வது விக்கெட்டுக்கு களமிறங்கிய சிவம் டூபே தான் சந்தித்த முதல் 2 பந்துகளையும் சிக்சருக்கு விரட்டி மிரள வைத்தார். அவரின் அதிரடியால் சென்னை அணியின் ஸ்கோர் மீண்டும் உயர்ந்தது.

அதே சமயம் மறுமுனையில் அதிரடியாக விளையாடிய கேப்டன் ருத்துராஜ் 36 பந்துகளில் 5 பவுண்டரி 1 சிக்சருடன் 46 ரன்கள் குவித்து வெளியேறினார். இதன்பிறகு களமிறங்கிய டேரில் மீச்செல் ஒருபுறம் நிதானமாக விளையாடிய நிலையில், மறுமுனையில் சிக்சர்களாக பறக்கவிட்ட சிவம் டூபே, 21 பந்துகளில் அரைசதம் கடந்து அசத்தினார். ஆனால் 23 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்சருடன் 51 ரன்கள் குவித்து வெளியேறினார்.

இறுதிக்கட்டத்தில் அசத்திய சமீர் ரிஸ்வி 2 சிக்சருடன் 14 ரன்களும், ஜடேஜா ஒரு பவுண்டரியுடன் 7 ரன்களும் எடுக்க சென்னை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்தது. 20 பந்துகளில் 24 ரன்கள் எடுத்த டேரில் மீச்செல் கடைசி பந்தில் ரன் அவுட் ஆனார். குஜராத் அணி தரப்பில் ரஷித்கான் 2 விக்கெட்டுகளும், சாய் கிஷோர், ஜான்சன், மொகித் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

207 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியில், கேப்டன் சுப்மான் கில் 8 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், சற்று அதிரடியாக விளையாடிய விருத்திமான் ச     ஹா, 17 பந்துகளில் 21 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அடுத்து களமிறங்கிய சாய் சுதர்சன் ஒரு பக்கம் போராட, மறுமுனையில், விஜய் சங்கர் 12 ரன்களுக்கும், மில்லர் 16 பந்துகளில் 21 ரன்களுக்கும், ஆட்டமிழந்து அதிர்ச்சியளித்தனர்.

ஒருபுறம் விக்கெட் சரிந்தாலும் மறுமுனையில் அவ்வப்போது பவுண்டரி அடித்த சாய் சுதர்சன், 31 பந்துகளில் 37 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். தொடந்து களமிறங்கிய ஒமர்சாய் 11 ரன்களுக்கும், தெவாட்டியா 6 ரன்களுக்கும், ரஷித் கான் ஒரு ரன்னும், எடுத்து ஆட்டமிழந்தனர். நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் குஜாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு, 143 ரன்கள் மட்டுமே எடுத்தது.

உமேஷ் யாதவ் 11 பந்துகளில் 10 ரன்களும், ஜான்சன் 5 ரன்களும் எடுத்து களத்தில் இருந்தனர். சென்னை அணி தரப்பில், சஹார், தேஷ்பாண்டே, முஸ்தாபிசூர் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும், மீச்செல், பதிரானா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். இதன் மூலம் 63 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற சி.எஸ்.கே தொடர்ந்து 2-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil

  • Mar 26, 2024 22:18 IST
    குஜராத் அணி 7.3 ஓவர்களில் 55/3

    மீச்செல் வீசிய 7-வது ஓவரின் 3-வது பந்தை அடிக்க முயன்ற விஜய் சங்கர் தோனியின் அற்புதமாக கேட்ச் மூலம் ஆட்டமிழந்தார். தற்போது குஜராத் அணி 7.3 ஓவர்களில் 55/3



  • Mar 26, 2024 22:15 IST
    7 ஓவர்கள் முடிவில் குஜராத் அணி 52/2

    207 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியில் கேப்டன் சுப்மான் கில் 8 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அதிரடியாக விளையாடிய விருத்திமான் சஹா 17 பந்துகளில் 4 பவுண்டரியுடன் 21 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். 



  • Mar 26, 2024 21:22 IST
    சென்னை அணி 206 ரன்கள் குவிப்பு

    இறுதிக்கட்டத்தில் களமிறங்கிய சமீர் ரிஸ்வி 2 சிக்சருடன் 14 ரன்களும், ஜடேஜா ஒரு பவுண்டரியுடன் 7 ரன்களும் எடுத்த நிலையில், 20 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 6 விக்கெட் இழப்பிற்கு 206 ரன்கள் எடுத்துள்ளது. மீச்செல் 24 ரன்கள் எடுத்தார். 



  • Mar 26, 2024 21:10 IST
    சிவம் டூபே அரைசதம் கடந்து அவுட்

    களமிறங்கியது முதல் அதிரடியாக விளையாடி வரும் சிவம் டூபே 22 பந்துகளில் 2 பவுண்டரி 5 சிக்சருடன் அரைசதம் கடந்தார். தற்போது சென்னை அணி 18 ஓவர்களில் 183/3 என்ற நிலையில் 19-வது ஓவரை வீசிய் ரஷித் கான் முதல் பந்தில் டூபே விக்கெட்டை வீழ்த்தினார். 



  • Mar 26, 2024 20:55 IST
    16 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 165/3

    16 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் எடுத்துள்ளது. சிவம் டூபே 16 பந்துகளில் 4 சிக்சர் 2 பவுண்டரியுடன் 41 ரன்களும், டேரல் மீச்செல் 14 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். 



  • Mar 26, 2024 20:44 IST
    அரைசதத்தை தவறவிட்ட ருத்துராஜ் கெய்க்வாட்

    அரைசதத்தை நெருங்கிய கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் ஸ்பென்சர் பந்துவீச்சில் தூக்கிய அடிக்க ஆசைப்பட்டு ஆட்டமிழந்தார். 36 பந்துகளை சந்தித்த அவர், 5 பவுண்டரி ஒரு சிக்சருடன் 46 ரன்கள் எடுத்தார். 



  • Mar 26, 2024 20:29 IST
    முதல் பந்தில் சிக்சர் பறக்கவிட்ட டூபே

    சாய் கிஷோர் வீசிய 11 ஓவரின் முதல் பந்தில் ரஹானே ஆட்டமிழந்த நிலையில், அடுத்து களமிறங்கிய சிவம் டூபே தான் சந்தித்த முதல் 2 பந்துகளிலும் சிக்சர் அடித்து அசத்தினார். 



  • Mar 26, 2024 20:16 IST
    9 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 92/1

    9 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 1 விக்கெட் இழப்பிற்கு 92 ரன்கள் எடுத்துள்ளது. ருத்துராஜ் 31 ரன்களுடனும், ரஹானே 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.



  • Mar 26, 2024 20:03 IST
    பவர்ப்ளே ஓவர்கள் முடிவில் சென்னை அணி 69/1

    6-வது ஓவரில் 11 ரன்கள் எடுத்த சென்னை அணி 6 ஓவர்கள் முடிவில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்துள்ளது. இத்துடன் பவர்ப்ளே ஓவர்கள் முடிவுக்கு வருகிறது.



  • Mar 26, 2024 20:01 IST
    அரைசதத்தை தவறவிட்ட ரச்சின் ரவீந்திரா

    6-வது ஓவரில் முதல் பந்தில் பவுண்டரி அடித்த ரச்சின் ரவீந்திரா அடுத்த பந்தில் ஸ்டெம்பிட் செய்யப்பட்டு அவுட் ஆனார். 20 பந்துகளை சந்தித்த அவர், 6 பவுண்டரி 3 சிக்சருடன் 46 ரன்கள் எடுத்தார். 



  • Mar 26, 2024 19:59 IST
    5 ஓவர்களில் சென்னை அணி 58/0

    4-வது ஓவரில் ஒரு சிக்சர் 2 பவுண்டரியுடன் 16 ரன்களும், 5-வது ஓவரில் 2 பவுண்டரி ஒரு சிக்சருடன் 17 ரன்கள் எடுத்த சென்னை அணி 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 58 ரன்கள் எடுத்துள்ளது. ரவீந்திரா 18 பந்துகளில் 42 ரன்களும், ருத்துராஜ் 13 ரன்களும் எடுத்து களத்தில் உள்ளனர். 



  • Mar 26, 2024 19:44 IST
    3 ஓவர்கள் முடிவில் சென்னை அணி 25/0

    முதலில் பேட்டிங்கை தொடங்கிய சென்னை அணி ஒமர்சாய் வீசிய முதல் ஓவரில் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில், உமேஷ் யாதவ் வீசிய 2-வது ஓவரில் ஒரு சிக்சர் ஒரு பவுண்டரியுடன் ரச்சின் ரவீந்திரா தனது அதிரடி ஆட்டத்தை தொடங்கினார். தொடர்ந்து ஒமர்சாய் வீசிய 3-வது ஓவரில் 2 பவுண்டரி அடித்த ரச்சின் ரவீந்திரா அணியின் ஸ்கோரை 25-ஆக உயர்த்தினார். 



  • Mar 26, 2024 19:10 IST
    டாஸ் வென்ற குஜராத் அணி பந்துவீச முடிவு

    போட்டியில் டாஸ் வென்ற குஜராத் அணியின் கேப்டன் ஷுப்மான் கில் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளார். இதன் காரணமாக முதலில் சென்னை அணி பேட்டிங்கை தொடங்க உள்ளது.



IPL 2024 CSK vs GT
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment