Advertisment

IPL 2024 CSK vs KKR Highlights : ருத்துராஜ் அரைசதம், ஷிவம் டூபே அதிரடி : சென்னை அணிக்கு 3-வது வெற்றி

சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் சென்னை மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடி வருகிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
KKR vs CSK

சென்னை சூப்பர் கிங்ஸ் vs கொல்கத்தா நைட் ரைடர்ஸ்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 22-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி – கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியுடன் மோதியது.

Advertisment

CSK vs KKR Live Score, IPL 2024

டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய கொல்கத்தா அணியில், பிலிப் சால்ட், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களமிறங்கினர். துஷார் தேஷ்பாண்டே வீசிய ஆட்டத்தில் முதல் பந்திலேயே ஜடேஜாவிடம் கேட்ச் சொடுத்த பிலிப் சால்ட் ரன் கணக்கை தொடங்காமலே ஆட்டமிழந்தார்.

அடுத்து களமிறங்கிய ரகுவன்சி தொடக்க வீரர் நரைனுடன் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடினர். இதனால் கொல்கத்தா அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்த நிலையில், 7-ஓவரை வீசிய் ரவீந்திர ஜடேஜா இரட்டை செக் வைத்து அசத்தினார். இந்த ஓவரின் முதல் பந்தில் ரகுவன்சியை 24 ரன்களுக்கு வீழ்த்திய ஜடேஜா அந்த ஓவரின் 5-வது பந்தில் அதிரடியாக விளையாடிய சுனில் நரைன் (26) விக்கெட்டையும் வீழ்த்தி அசத்தினார்.

அதன்பிறகு களமிறங்கிய வெங்கடேஷ் அய்யர், 8-வது ஓவரின் முதல் 5 பந்துகளை டாட் பாலாக மாற்றிய நிலையில், 9-வது ஓவரின் 2-வது பந்தில் விக்கெட்டை பறிகொடுத்தார். இவரது விக்கெட்டை ஜடேஜா வீழ்த்தினார். 8 பந்துகளை சந்தித்த அவர் 3 ரன்களில் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ரமன்தீப் சிங் 13, ரின்கு சிங் 9, ரஸல் 10 மீச்செல் ஸ்டார்க் 0 என அடுத்தடுத்து வீழ்ந்த நிலையில், மந்தமாக விளையாடிய கேப்டன் ஸ்ரேயாஸ் அய்யர் 32 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

நிர்ணையிக்கப்பட்ட 20 ஓவர்களில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்தது. சென்னை அணி தரப்பில் ஜடேஜா 4 ஓவர்களில் 18 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளும், தேஷ்பாண்டே 33 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளும், முஸ்தாபிசூர் ரஹ்மான் 22 ரன்கள் விட்டுக்கொடுத்து 2 விக்கெட்டுகளும், தீக்ஷனா 28 ரன்கள் விட்டுக்கொடுத்து ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர்.

தொடர்ந்து 138 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய சென்னை அணிக்கு ருத்துராஜ் – ரச்சின் இருவரும் நல்ல தொடக்கம் கொடுத்தனர். இருவரும் முதல் விக்கெட்டுக்கு 3.2 ஓவர்களில் 27 ரன்கள் சேர்த்தபோது ரச்சின் 8 பந்துகளில் 3 பவுண்ரியுடன் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டேரல் மீச்செல், ருத்துராஜூடன் இணைந்து சிறப்பாக விளையாடினார். இருவரும் ஏதுவான பந்துகளை பவுண்டரிக்கு விரட்டி ரன்கள் சேர்த்தனர்.

அணியின் ஸ்கோர் 12.3 ஓவர்களில் 97 ரன்களை எட்டியபோது, 19 பந்துகளில் ஒரு பவுண்டரி ஒரு சிக்சருடன் 25 ரன்கள் குவித்து மீச்செல் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த ஷிவம் டூபே அதிரடியாக விளையாடிய நிலையில், மறுமுனையில் நிதானமாக விளையாடிய கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் 45 பந்துகளில் அரைசதம் கடந்தார். மறுமுனையில் 18 பந்துகளில் 3 சிக்சர் ஒரு பவுண்டரியுடன் 28 ரன்கள் எடுத்த ஷிவம் டூபே ஆட்டமிழந்தார்.

கடைசியில் வெற்றிக்கு 3 ரன்கள் தேவை என்ற நிலையில், தோனி களமிறங்கினார். சிக்சர் அடிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிக்கிள் எடுத்த அவர், 1 ரன்னுடன் கடைசி வரை களத்தில் இருந்தார். 17.4 ஓவர்களில் சென்னை அணி 3 விக்கெட் இழப்பிற்கு 141 ரன்கள் எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடந்த 2 போட்டிகளில் தொடர் தோல்வியை சந்தித்த சென்னை அணி மீண்டும் வெற்றிப்பாதைக்கு திரும்பியுள்ள நிலையில், இந்த சீசனில் கொல்கத்தா அணி முதல் தோல்வியை சந்தித்துள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

  • Apr 08, 2024 22:29 IST
    கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் 45 பந்துகளில் அரைசதம்

    ஆரம்பம் முதலே மந்தமாக விளையாடிவரும் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் 45 பந்துகளில் அரைசதம் கடந்துள்ளார். 12 ஓவர்கள் முடிவில் சென்னை அணி ஒரு விக்கெட் இழப்பிற்கு 95 ரன்கள் எடுத்துள்ளது.



  • Apr 08, 2024 21:51 IST
    ரச்சின் ரவீந்திரா அவுட்

    138 ரன்கள் வெற்றி இலக்கை நோக்கி களமிறங்கிய சென்னை அணிக்கு சிறப்பான தொடக்கம் கொடுத்த ரச்சின் 8 பந்துகளில் 3 பவுண்டரியுடன் 15 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்



  • Apr 08, 2024 21:26 IST
    கொல்கத்தா 137 ரன்கள் குவிப்பு

    20 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 9 விக்கெட் இழப்பிற்கு 137 ரன்கள் எடுத்துள்ளது. அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் அய்யர் 32 பந்துகளில் 34 ரன்களும், நரைன் 20 பந்துகளில் 27 ரன்களும், ரகுவன்சி 18 பந்துகளில் 24 ரன்களும் எடுத்தனர். சென்னை அணி தரப்பில் ஜடேஜா, தேஷ்பாண்டே ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளும், முஸ்தாபிசூர் ரஹ்மான் 2 விக்கெட்டுகளும், தீக்ஷனா ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். 



  • Apr 08, 2024 20:29 IST
    ரன் குவிக்க கொல்கத்தா போராட்டம்

    12 ஓவர்கள் முடிவில் கொல்கத்தா அணி 5 விக்கெட் இழப்பிற்கு 85 ரன்கள் எடுத்துள்ளது. ரிங்கு சிங் ரன் கணக்கை தொடங்காமலும், ஸ்ரேயாஸ் 11 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.



  • Apr 08, 2024 20:13 IST
    வெங்கடேஷ் அய்யர் அவுட் : ஜடேஜா 3-வது விக்கெட்

    9-வது ஒவரை வீசிய ஜடேஜா 2-வது பந்தில் வெங்கடேஷ் அய்யர் விக்கெட்டை வீழ்த்தினார். 8-வது ஓவரில் 5பந்துகளை டாட் செய்த வெங்கடேஷ் அய்யர், 8 பந்துகளில் 3 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.



  • Apr 08, 2024 20:06 IST
    ஒரே ஓவரில் இரட்டை செக் வைத்த ஜடேஜா

    7-வது ஓவரின் முதல் பந்தை வீசிய ஜடேஜா ரகுவன்சி விக்கெட்டை வீழ்த்தினார். 18 பந்துகளை சந்தித்த அவர் 24 ரன்கள எடுத்து ஆட்டமிழந்தார்.  அதேபோல் இந்த ஓவரின் 5-வது பந்தில் அதிரடியாக விளையாடிய சுனில் நரைன் விக்கெட்டையும் வீழ்த்தினார். நரைன் 20 பந்துகளில் 57 ரன்கள் எடுத்தார். 



  • Apr 08, 2024 20:04 IST
    சுனில் நரைன் அதிரடி

    சுனில் நரைன் அதிரடியில் கொல்கத்தா அணி 6 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 56 ரன்கள் எடுத்துள்ளது. நரைன் 18 பந்துகளில் 3 பவுண்டரி 2 சிக்சருடன் 26 ரன்கள் எடுத்துள்ளார்.



  • Apr 08, 2024 19:32 IST
    முதல் பந்தில் விக்கெட்

    முதல் ஓவரின் முதல் பந்தை வீசிய துஷார் தேஷ்பாண்டே, பிலிப் சால்ட் விக்கெட்டை வீழ்த்தினார். அவர் அடித்த பந்தை ஜடேஜா கேட்ச் செய்து அசத்தினார்.



  • Apr 08, 2024 19:16 IST
    சென்னை - கொல்கத்தா நேருக்கு நேர்

    சென்னை - கொல்கத்தா அணிகள் இதுவரை 28 முறை நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் சென்னை அணி 18 போட்டிகளிலும், கொல்கத்தா அணி 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது.



  • Apr 08, 2024 19:08 IST
    மீண்டும் அணியில் முஸ்தாபிசூர் ரஹ்மான்

    சென்னை அணியில், கடந்த போட்டியில் விளையாடாத முஸ்தாபிசூர் ரஹ்மான் இன்றைய போட்டிகளில் களம் திரும்பியுள்ள நிலையில், ஷர்துல் தாகூர் ஆடும் வெலன் அணியில் இடம் பிடித்துள்ளார். கடந்த போட்டியில் விளையாடிய மொயின் அலி, தீபக் சஹார் அணியில் நீக்கப்பட்டுள்ளனர். 



  • Apr 08, 2024 19:05 IST
    சேப்பாக்கத்தில் சென்னை அணி?

    சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 2013-ம் ஆண்டு முதல் 34 போட்டிகளில் விளையாடியுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 8 போட்டிகளில் தோல்வியை சந்தித்துள்ளது.



  • Apr 08, 2024 19:03 IST
    சென்னை அணி பந்துவீச்சு

    டாஸ் வென்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளார். இதனால் கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது.



IPL 2024 CSK vs KKR
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment