IPL 2025 Auctioned Player, Top Buys, Sold Players, Unsold Players Live Updates: 18-வது ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு (2025) மார்ச் மாதம் தொடங்க உள்ள நிலையில், இந்த தொடரில் பங்கேற்க உள்ள வீரர்களின் ஏலம் இன்று (நவம்பர் 24) மற்றும் நாளை (நவம்பர் 25) சவுதி அரேபியாவில் நடைபெறுகிறது.
இந்தியாவில் கடந்த 2008-ம் ஆண்டு முதல் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. உலகில் உள்ள மற்ற நாடு வீரர்களும் பங்கேற்று விளையாடும் இந்த தொடர் ஆண்டுதோறும் கோடை காலத்தில் நடைபெறுகிறது. இதுவரை 17 சீசன்கள் முடிந்துள்ளது. இதில், சென்னை மற்றும் மும்பை அணிகள் 5 முறை சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. கொல்கத்தா அணி 3 முறையும், ராஜஸ்தான் ராயல்ஸ், டெக்கான் சார்ஜஸ், சன்ரைசஸ் ஐதராபாத், குஜராத் டைட்டன்ஸ் ஆகிய அணிகள் தலா ஒருமுறையும் கோப்பையை வென்றுள்ளது.
இந்நிலையில், ஐபிஎல் தொடரின் 18-வது சீசன் அடுத்த ஆண்டு (2025) மார்ச் மாதம் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான ஏலம் சவுதி அரேபியாவில் நாளை (நவம்பர் 24) தொடங்குகிறது. ஏலத்திற்கு முன்னதாக ஒவ்வொரு அணியும் 5 வீரர்களை தக்கவைத்துக்கொள்ள அனுமதிக்கப்பட்ட நிலையில், அந்த வீரர்களின் சம்பளம் போன மீதி தொகையை வைத்து ஏலத்தில் வீரர்களை வாங்கலாம்.
அந்த வகையில், சென்னை அணி 55 கோடியும், டெல்லி அணி 73 கோடியும், குஜராத் அணி 69 கோடியும், கொல்கத்தா அணி 51 கோடியும், லக்னோ 69 கோடியும், மும்பை அணி 45 கோடியும், ராஜஸ்தான் ராயல்ஸ் 41 கோடியும், பெங்களூரு 83 கோடியும், ஐதராபாத் 45 கோடியும் வைத்துள்ள நிலையில், பஞ்சாப் அணி அதிகபட்சமாக 110 கோடி இருப்பு வைத்துள்ளது.
இதுவரை ஐபிஎல் தொடரில் விளையாடாத இங்கிலாந்து அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன், சமீபத்தில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஒய்வை அறிவித்த நிலையில், முதல் முறையாக ஐபிஎல் ஏலத்தில் பங்கேற்க உள்ளார். அதேபோல் கடந்த முறை சாம்பியன் பட்டம் வென்ற கொல்கத்தா அணியில் இருந்து கேப்டன் ஸ்ரோயாஸ் அய்யர், டெல்லி அணி கேப்டன் ரிஷப் பண்ட், லக்னோ அணி கேப்டன் ராகுல் ஆகியோர் அணியில் இருந்து வெளியேற்றப்பட்டு ஏலத்திற்கு வந்துள்ளனர்.
இவர்களுடன் சேர்ந்து முக்கிய வீரர்கள் பலரும் அதிக தொகைக்கு வாங்கப்படுவார்கள் என்றும், முக்கியமாக கேப்டன் இல்லாத அணிகள், பண்ட், ஸ்ரோயாஸ், ராகுல் ஆகியோரை வாங்குவதற்காக போட்டி போடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஏலத்தில் மொத்தம் 577 வீரர்கள் பஙகேற்க உள்ளனர். சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் நடைபெறும் இந்த ஏலம் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதனை ஸ்டார்ஸ்போர்ஸ் மற்றும் ஜியோசினிமாவில் நேரலையாக பார்க்கலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“