IPL 2021 CSK VS SRH 23rd League Match : ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐதராபாத் சன்ரைசஸ் அணியுடன் மோதுகிறது.
இந்தியாவின் மிக்பெரிய உள்ளூர் டி20 கிரக்கெட் தொடரான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கடந்த 9-ந் தேதி தொடங்கியது. 8 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரில் அனைத்து அணிகளும் தலா 5 போட்டிகளில் விளையாடியுள்ளன. இதில் இன்று நடைபெறும் 23-வது லீக் ஆட்டத்தில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி டேவிட் வார்னர் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசஸ் அணியுடன் மோதுகிறது.
சென்னை சூப்பர் கிங்ஸ் :
இதுவரை தான் பங்கேற்ற அனைத்து தொடர்களிலும் பிளேஅப் சுற்றுக்கு முன்னேறிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கடந்த ஆண்டு அமீரகத்தில் நடைபெற்ற தொடரில் முதல்முறையாக பிளேஅப் சுற்றுக்கு தகுதி பெறமுடியாமல் லீக் சுற்றுடன் வெளியேறியது. இதனால் இந்த தொடரில் எழுச்சிய பெறவேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய சென்னை அணி முதல் ஆட்டத்தில் டெல்லி அணியுடன் 7 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்த்து.
அதனைத் தொடர்ந்து பஞ்சாப் அணியுடன் 6 விக்கெட் வித்தியாசத்திலும், ராஜஸ்தான் அணியுடன் 45 ரன்கள் வித்தியாசத்திலும், கொல்கத்தா அணியுடன் 18 ரன்கள் வித்தியாசத்திலும், பெங்களூர் அணியுடன் 69 ரன்கள் வித்தியாசத்தில் தொடர் வெற்றிகள் பெற்று புள்ளிபட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இதில் கடைசியாக கடந்த இரு தினங்களுக்கு முன்பு பலம் வாய்ந்த பெங்களூர் அணியை 122 ரன்களில் சுருட்டிய சென்னை அணி அதே உத்வேகத்துடன் இன்று களமிறங்கி வெற்றியை தக்க வைக்க போராடும்.
சென்னை அணியில், ருத்துராஜ் கெய்க்வாட், பாப் டூபிளசிஸ், ஆகியோர் தொடக்கத்தில் ரன்கள் குவித்து வருவதும் மிடில் ஆர்டரில், ரெய்னா, ராயுடு, தோனி, மொயின் அலி ஆகியோரும், கடைசி கட்டத்தில் ஜடேஜா, பிராவோ, சாம் கரன் ஆகியோரும் பேட்டிங்கில் வலு சேர்க்கின்றனர். முக்கியமாக கடந்த போட்டியின் கடைசி ஓவரில் 37 ரன்கள் குவித்து அசத்திய ஜடேஜா பீல்டிங்கிலும் முத்திரை பதித்தார். அதே பார்மை இன்றும் தொடர்நதால் சென்னை அணியில் வெற்றி எளிதாகும்.
கடந்த போட்டியில் காயம் காரணமாக மொயின் அலி இடம்பெறவில்லை. ஆளால் இன்றைய போட்டியில் அவர் இடம்பெறுவாரா என்பது குறித்து பொட்டி தொடங்கும் முன் அறிவிக்கப்படும் என்று தகவல் வெளியாகியுள்ளது. பந்துவீச்சை பொருத்தவரை தீபக் சஹார் 5 போட்டிளில் 8 விக்கெட்டுகள் கைப்பற்றி அதிக விக்கெட் வீழ்த்தியவர்கள் பட்டியலில் 5-வது இடத்தில் உள்ளார். அவரைத் தொடர்ந்து, சாம்கரன், நிகிடி, ஷர்துல் தாகூர் ஆகியோரும் பந்துவீச்சில் பலம் சேர்க்கின்றனர். இதில் ஷர்துல் தாகூர் அதிக ரன்கள் விட்டுக்கொடுக்காமல் கட்டுப்படுத்தினால் சென்னை அணிக்கு சாதகமாக அமையும்
ஐதரபாத் சன்ரைசஸ் :
டேவிட் வார்னர் தலைமையலான ஐதராபாத் சன்ரைசஸ் அணி இந்த தொடரில், கொல்கத்தா பெங்களூர் மும்பை ஆகிய அணிகளுக்கு எதிராக தொடர் தோல்விகளை சந்தித்த நிலையில், 4 போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக 9 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பெற்றது. ஆனால் அடுத்து போட்டியில் டெல்லியுடன் மோதிய ஐதராபாத் அணி சூப்பர் ஓவரில் தோல்வியை சந்தித்தது. இதனால் 5 போட்டிகிளில் விளையாடி 1 வெற்றியுடன் புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.
இந்த நிலையில் ஐதராபாத் அணி தனது 6-வது ஆட்டத்தில் சென்னை அணியுடன் இன்று மோதுகிறது. அந்த அணியில் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோரை தவிர மற்ற யாவரும் சொல்லிக்கொள்ளும்படி ரன்கள் குவிக்கவில்லை. தொடக்க ஆட்டகாரர்களான இவர்கள் இருவரையும் வீழ்த்தினாலே வெற்றி பெற்று விடலாம் என்று எதிரணிகள் முடிவு செய்யும் அளவுக்குதான் ஐதரபாத் அணியின் பேட்டிங் வரிசை உள்ளது.
இந்த நிலைக்கு முடிவு கட்டும் விதமாக கடந்த போட்டியில் கடைசி வரை வெற்றிக்காக போராடிய கேன் வில்லியம்சன் அரைசதம் கடந்து போட்டி டையில் முடிய பெரும் உதவியாக இருந்தார். ஆனாலும் சூப்பர் ஓவரில் டெல்லி அணிக்கு எதிராக இவர்களால் ஈடு செய்ய முடியவில்லை. பந்துவீச்சை பொருத்தவரை ரஷித் கானை தவிர மற்ற யாவரும் சொல்லிக்கொள்ளும்படி விக்கெட்டுகள் வீழ்த்தவில்லை. இதற்கு முன் நடந்த போட்டிகளை மறந்தவிட்டு அணி வீரர்கள் ஒற்றுமையுடன் இந்த போட்டியில் களமிறங்கினால் சென்னை அணியை வீழ்த்தலாம்.
நேருக்கு நேர் :
இரு அணிகளும் இதுவரை 14 போட்டிகளில் நேருக்கு நேர் மோதியுள்ளது. இதில் சென்னை 10 முறையும், ஐதராபாத் அணி 4 முறையும் வெற்றி பெற்றுள்ளது. கடந்த ஆண்டு அமீரகத்தில் நடைபெற்ற 2 லீக் போட்டியில் ஒன்றில் 7 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணியும், மற்றொரு போட்டியில் 20 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியும் வெற்றி பெற்றது.
டெல்லி அருண்ஜெட்லி மைதானம் :
தனது முதல் 5 போட்டிகளை மும்பையில் ஆடிய சென்னை அணி அடுத்து டெல்லியில் உள்ள டெல்லி அருண்ஜெட்லி மைதானத்தில் அடுத்த 4 போட்டிகளை விளையாட உள்ளது. மும்பையில் பெற்ற வெற்றியை டெல்லியில் சென்னை அணி தொடருமா என்று ரசிகர்கள் பெரும் எதிர்பார்பில் காத்திருக்கின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.