சேப்பாக்கத்தில் ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை தொடக்கம்!

கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஒருவருக்கு 2 டிக்கெட்மே வழங்கப்படும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது

சென்னையில் நடைபெற உள்ள ஐபிஎல் கிரிக்கெட் முதல் போட்டிக்கான டிக்கெட் விற்பனை,  இன்று (2.4.18) காலை முதல் தொடங்கியது.

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள 11வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடர் வரும் 7ஆம் தேதி முதல் ஆரம்பமாகி வரும்  மே 27ஆம் தேதி வரை நடைபெறுகிறது. மும்பையில் நடைபெறும் முதல் போட்டியில், நடப்பு சாம்பியனான மும்பை அணியும் , தடைகளை தகர்த்து களம் இறங்கியுள்ள   சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும்  மோதி கொள்கின்றன.

இந்நிலையில்,  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சென்னையில் உள்ள சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் 7 போட்டிகளில் விளையாடுகிறது. இந்த மைதானத்தில் நடக்கும் முதல் போட்டியில் கொல்கத்தா அணியை சென்னை அணியை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டி வரும் 10ஆம் தேதி நடக்க உள்ளது.

இந்த டிக்கெட்டுக்காக விற்பனை இன்று காலை 9.30 மணி முதல் தொடங்கியுள்ளது. மாலை 6 மணி வரை டிக்கெட் விற்பனை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தொடருக்கான டிக்கெட்டை பெற இளைஞர்கள் மற்றும் ஐபிஎல் ரசிகர்கள் பலர் நீண்ட நேரம் வரிசையில் நின்று டிக்கெட்  வாங்கிக் கொண்டு செல்கின்றனர்.

மேலும், பல்வேறு நிபந்தனைகளுக்கு இடையில் டிக்கெட்டுகள் விநியோக்கிப்பட்டு வருகின்றன. கூட்ட நெரிசலைத் தவிர்க்க ஒருவருக்கு 2 டிக்கெட்மே வழங்கப்படும் என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. டிக்கெட்டின் விலை 4 பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளது.

டிக்கெட்டின் குறைந்தபட்ச விலை ரூ.1,300. மேலும் ரூ.2,500, 4,500 ரூ.5,000, ரூ.6,500 ஆகியவை ஆகும்.  ஆன்லைன் மூலமாகவும் டிக்கெட் பெற்றுக் கொள்ள சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.  www.chennaisuperkings.com, www.bookmyshow.com ஆகிய இணையதளங்களில் டிக்கெட்டுகளை பதிவு செய்துக் கொள்ளலாம்.

ஐபிஎஸ் தொடரை நேரில் காண, ரசிகர்கள் வெயில் நேரம் என்று கூட பாராமல் நீண்ட வரிசையில்  நின்று டிக்கெட்டுகளை பெற்று வருகின்றன.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close