scorecardresearch

CSK-வுக்கு இள ரத்தம் பாய்ச்சுங்க… இந்த 3 வீரர்களை இப்பவே குறி வையுங்கப்பா..!

5 youngsters CSK should target in the mega auction 2022 Tamil News: அடுத்தாண்டு நடக்கும் சீசனில் கேப்டன் தோனி பங்கேற்பாரா என்பதில் சந்தேகம் எழும் நிலையில், இவர்களைப் போன்ற இளம் வீரர்களை அணிக்கு தேர்வு செய்தால் கூடுதல் வலு கிடைக்கும்.

ipl cricket Tamil News: 5 youngsters CSK should target in the mega auction 2022

IPL cricket Tamil News: கிரிக்கெட் அரங்கில் உலக அளவில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்தி வரும் ஐபிஎல் தொடர், அதன் தொடக்கத்திலிருந்தே மிகவும் போட்டித்தன்மை கொண்டதாக இருந்து வருகிறது. இந்தியா மற்றும் வெளிநாடுகளில் இருந்து வரும் உலகத் தரம் வாய்ந்த வீரர்களால், லீக்கில் உள்ள அனைத்து அணிகளும் மிகவும் வலுவானவையாக உருவெடுத்துள்ளன. மேலும் இது போன்ற மாபெரும் தொடரில் தொடர்ந்து ஆதிக்கம் செலுத்த நிறைய திட்டமிடல் மற்றும் செயல்திறன்கள் அந்த அணிகளுக்கு தேவைபடுகின்றன.

அத்தகைய செயல்திறன்களுடனும், புதிய யுத்திகளுடன் தொடர்ந்து விளையாடி வரும் கேப்டன் தோனி தலைமையிலான ‘சென்னை சூப்பர் கிங்ஸ் அணி’, தோனியின் தலைமையில் 3 முறை சாம்பியன் பட்டம் வென்றுள்ளது. கடந்த ஆண்டு நடந்த தொடரில் மட்டும் பிளே- ஆப் சுற்றுக்குள் செல்லாமல் வீடு திருப்பியது. இது போன்ற விடயங்களையும், எதிர்கால விளைவுகளையும் கவனத்தில் கொண்ட அணி நிர்வாகம், இந்தாண்டு துவக்கத்தில் சில வீரர்களை விடுவித்தும், சில வீரர்களை ஏலத்தில் வாங்கியும் இருந்தது. ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்களை நடப்பாண்டு தொடரில் இதுவரை அந்த அணி பயன்படுத்தவில்லை என்பது குறிபிடத்தக்க ஒன்று.

இந்த நிலையில், தற்போது நடைபெற்று வரும் தொடரில் அசத்தி வரும் இளம் வீரர்களை குறி வைத்து, அடுத்தாண்டு நடக்கும் ஏலத்தில் அவர்களை அந்த அணி எடுக்குமா என்ற கேள்வி பரவலாக எழுந்து வருகிறது. அப்படி எந்தெந்த இளம் வீரர்களை குறி வைக்கலாம் என்கிற சிறிய தொகுப்பை இங்கு காண்போம்.

1.தேவதூத் படிக்கல்

உள்ளூர் போட்டிகளில் அசத்திய கர்நாடகவின் படிக்கல் கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் ஆர்.சி.பி அணியில் விளையாடி வருகிறார். அறிமுக ஐபிஎல் தொடரில் அரைசதம் அடித்த அவர், 16 போட்டிகளில் 473 ரன்கள் சேர்த்து, சீசனில் முதல் ஐந்து ரன்கள் எடுத்தவர்களில் ஒருவரானார்.

தேவதூத் படிக்கல்

தற்போது வலுவான துவக்க வீரர் கிடைக்கமால் தவித்து வரும் சி.எஸ்.கே அணிக்கு தேவதூத் படிக்கல் பொறுத்தமான வீரராக இருப்பார் என நம்பலாம்.

  1. அர்ஷ்தீப் சிங்

பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு பந்து வீச்சில் வலு சேர்த்து வரும் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், அவரது தனித்துவமான பந்து வீச்சால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளார். 2018ம் ஆண்டில் நடந்த 19 வயதுக்குட்படோருக்கான உலக கோப்பை கிரிக்கெட்டில் கோப்பையை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்த அர்ஷ்தீப் சிங், 2019ம் ஆண்டு பஞ்சாப் அணியால் வாங்கப்பட்டார்.

அர்ஷ்தீப் சிங்

கடந்த ஆண்டு நடந்த தொடரில் சிறப்பாக பந்து வீசிய இவர், 9 விக்கெட்டுகளை வீழ்த்தி 8.77 புள்ளிகளை சராசரியாக வைத்திருந்தார். தற்போது நடக்கும் தொடரிலும் சிறப்பாக பந்து வீசி அவரின் டெத் ஓவர்களின் பந்து வீச்சும், அவர் பயன்படுத்தும் யார்க்கர்களும் மெய்சிலிற்க வைக்கின்றன. எனவே இவரை போன்ற வேகப்புயலை சென்னை அணி ஏலத்தில் வாங்க முனைப்பு காட்டலாம்.

  1. இஷான் கிஷன்

ஜார்க்கண்ட் அணியில் சிறப்பாக விளையாடி கவனம் பெற்ற இஷான் கிஷன், கடந்த 2019ம் ஆண்டில் நடந்த ஏலத்தில் சுமார் ரூ.5.5 கோடிக்கு மும்பை இந்தியன்ஸ் அணியால் வாங்கப்பட்டார். கடந்த சீசனில் அதிரடி காட்டிய இஷான், அறிமுகமான முதல் போட்டியிலே 99 ரன்களை திரட்டினார். மேலும் சீசன் முழுதும் பேட்டிங்கில் அசத்திய அவர், அதிக ரன்கள் சேர்த்த வீரர்களின் பட்டியலில் இடம் பிடித்தார்.

இஷான் கிஷன்

அடுத்தாண்டு நடக்கும் சீசனில் தோனி பங்கேற்பாரா என்பதில் சந்தேகம் எழும் நிலையில், இவர் போன்ற இளம் வீரரை சென்னை பக்கம் இழுத்து போட்டால் அணியின் பேட்டிங்கிற்கு கூடுதல் வலு கிடைக்கும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  ” (https://t.me/ietamil)

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ipl cricket tamil news 5 youngsters csk should target in the mega auction 2022