/tamil-ie/media/media_files/uploads/2021/04/ipl-2021-6.jpg)
IPL cricket Tamil News: 2021ம் ஆண்டுக்கான ஐபிஎல் லீக் தொடரில் டெல்லி அணிக்கெதிராக தோல்வியை தழுவிய சென்னை சூப்பர் அணி, தொடர்ந்து பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கெதிராக நடந்த போட்டிகளில் வெற்றியை ருசித்தது. மேலும் வான்கடே மைதானத்தில் கொல்கத்தா அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்திலும் வென்று 'ஹாட்ரிக்' வெற்றி பெற்றது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு எதிரான ஆட்டங்களில் தலா 4 விக்கெட்டுகளை எடுத்து அசத்தினார். தற்போது அவர் அதிக விக்கெட்டுகள் எடுத்த வீரர்களின் பட்டியலில் 2ம் இடத்தில் உள்ளார்.
உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவைச் சேர்ந்த தீபக் சாஹரின் அப்பா முன்னாள் விமான படை அதிகாரி ஆவர். இவரது தங்கை 'மால்டி சாஹர்' ஒரு மாடல் ஆவர். சமூக வலைதள பக்கங்களில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் மால்டி சாஹர் 'சிஎஸ்கே' அணியின் தீவிர ரசிகையாம். மேலும் சிஎஸ்கே போட்டி நடக்கும் மைதானங்களுக்கு தவறாமல் விசிட் அடிப்பாராம்.
தற்போது கொரோனா தொற்று அச்சம் நீடித்து வருவதால் போட்டியை வீட்டிலிருந்ததே ரசித்து வருகிறாராம். இந்த நிலையில், மஞ்சள் நிற டீ-ஷர்ட் அணிந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்த அவர், 'சிஎஸ்கே வெற்றி பெற என் வாழ்த்துக்கள்' என்று பதிவிட்டிருந்தார். இந்த புகைப்படம் அவரது ரசிகர்களால் பெரிதும் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது.
Yellow on my mind💛
All the best #csk#CSKvsKKR#WhistlePodupic.twitter.com/kH4nMNAqnZ— Malti Chahar🇮🇳 (@ChaharMalti) April 21, 2021
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.