IPL 2021 cricket Tamil News: இந்திய பந்து வீச்சாளர்கள் உட்பட பல சர்வதேச பந்து வீச்சாளர்கள், அவர்களின் பந்து வீச்சு திறனை மாற்றி அமைத்து விக்கெட்டுகள் வீழ்த்த காரணமாக இருந்தவர் தோனி தான் என்று கூறி நெகிழ்ந்துனர். மேலும் பீல்டிங்கிலும் மட்டும்மல்லாமல், வீரர்களின் பந்து வீச்சுகளிலும் புத்தி கூர்மை உடையவர் 'கேப்டன் கூல்' தோனி என்று பல வீரர்கள் கூறியிருக்கிறார்கள். தற்போது அந்த வரிசையில் தமிழக வீரர் நடராஜனும் இணைந்துள்ளார்.
இப்போது யார்க்கர் ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கப்படும் தமிழக வீரர் நடராஜன், கடந்த சீசனில் மற்ற வேகப்பந்து வீச்சாளர்களை விட71 யார்க்கர்களை வீசியிருந்தார். மேலும் தோனி, டி - வில்லியர்ஸ் போன்ற ஜாம்பவான்களின் விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருந்தார். மெதுவான பவுன்சர்கள் மற்றும் கட்டர்களை வீசுவதற்கான முன்னாள் இந்திய கேப்டனின் அறிவுரை, அவரை ஒரு சிறந்த பந்து வீச்சாளராக மாற்றியது என்றுள்ளார்.
"தோனியைப் போன்ற ஒருவரிடம் பேசுவது ஒரு பெரிய விஷயம். அவர் எனது உடற்தகுதி பற்றிப் பேசியதோடு, என்னை ஊக்கப்படுத்தினார். நான் அனுபவத்துடன் தொடர்ந்து முன்னேறுவேன் என்றும் என்னிடம் கூறினார். மெதுவான பவுன்சர்கள், கட்டர்கள் போன்ற மாறுபாடுகளைப் பயன்படுத்துங்கள் என்றார். என்னைப் பொறுத்தவரை அவர் கூறியது எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது" என்று ஈ.எஸ்.பி.என்கிரிக்இன்போ தளத்திற்கு நடராஜன் அளித்த நேர்காணலில் குறிப்பிட்டிருந்தார்.
தோனியின் விக்கெட்டை வீழ்த்தியது குறித்து அவர் கூறுகையில், "நான் ஒன்றை ஸ்லாட்டில் பந்தை பிட்ச் செய்தேன். அவர் 102 மீட்டர் தூரத்திற்கு சிக்ஸரை பறக்க விட்டார். அடுத்த பந்தே அவரது விக்கெட் கிடைத்தது. ஆனால் நான் அதை கொண்டாடவில்லை. டிரஸ்ஸிங் அறைக்கு திரும்பி வந்த பிறகு, நான் மகிழ்ச்சியாக இருந்தேன். போட்டியை முடித்த பிறகு, நான் அவருடன் பேசினேன்" என்று கூறியுள்ளார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)