IPL cricket Tamil News: இந்தாண்டுக்கான ஐபிஎல் லீக் தொடரில் டெல்லி அணிக்கெதிராக தோல்வியை தழுவிய சென்னை சூப்பர் அணி, தொடர்ந்து பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கெதிராக ஆட்டங்களில் வெற்றியை ருசித்தது. மேலும் கொல்கத்தா அணிக்கு எதிராக வான்கடே மைதானத்தில் நடந்த நேற்றைய ஆட்டத்திலும் வென்று ‘ஹாட்ரிக்’ வெற்றி பெற்றது.
இந்த ஆட்டத்தில் கொல்கத்தா அணியின் பந்துகளை தும்சம் செய்த துவக்க வீரர் ஃபாஃப் டு பிளெசிஸ் 60 பந்துகளில் (9பவுண்டரி, 4 சிக்ஸர்) 95 ரன்கள் சேர்த்து அசத்தினார். மேலும் கொல்கத்தா அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் ஆண்ட்ரே ரஸல் வீசிய பந்துகளில் ஹாட்ரிக் பவுண்டரி அடித்து தான் ஒரு நிலையான ஆட்டக்காரர் என்பதை நிரூபித்தார்.
கொல்கத்தா அணியில் சிறப்பாக பந்துகளை வீசிய பிரசித் கிருஷ்ணா, டு பிளெசிஸ் பேட்டிங் செய்யும் போது, ஒரு ஃபுல்-டாஸ் பந்தை வீசினார். அதை அவர் அடிக்க தவறவே கீப்பர் தினேஷ் கார்த்திக் வசம் பந்து உருண்டு சென்றது. டு பிளெசிஸ் பந்தை அடிக்க மிஸ் செய்தததை சிறிய புன்முறுவலுடன் கடந்து சென்றார் பிரசித் கிருஷ்ணா. அவருக்கு பாடம் புகட்ட வேண்டும் என்ற நினைத்த டு பிளெசிஸ் முறைப்பு கலந்த புன்முறுவலை, அதாவது விஸ்வாசம் படத்தில் 'தல அஜித்' கொடுக்கும் தூக்கு துரை ரியாக்ஷன் போல ஒன்றை கொடுத்தார்.
பிரசித் கிருஷ்ணா, தான் வீசும் அடுத்த பந்தையும் இதைபோல் மிஸ் செய்ய வைக்க வேண்டும் என்ற திட்டத்தில் ஆப் - சைடில் பந்தை வீசினார். ஆனால் அவரை விட ஒரு படி மேல் யோசித்த டு பிளெசிஸ், பந்தை லாவகமாக ஸ்கூப் ஷாட் அடித்து பைன்-லெக் சைடில் தூக்கி விட்டார். பந்து கடகடவென உருண்டு பவுண்டரி எல்லையை தொட்டது.
இந்த வீடியோவை இணைய பக்கங்களில் பதிவிட்டு வரும் சிஎஸ்கே ரசிகர்கள், டு பிளெசிஸின் முறைப்பு 'தூக்கு துரை ரியாக்ஷன்' போல் இருந்தது என்று கமெண்ட் செய்தும், பகிர்ந்தும் வருகின்றனர்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற " (https://t.me/ietamil)