Sanju Samson Tamil News: ஐ.பி.எல். கிரிக்கெட்டில் நேற்றைய ஆட்டத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் - பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதின. மிக விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் தலைமையிலான ராஜஸ்தான் அணி 2 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது. இந்த ஆட்டத்தில் கேப்டன் சஞ்சு அதிரடியாக விளையாடி ரன் ரேட்டை உயர்த்துவார் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் சொற்ப ரன்னில் ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்திய அணிக்காக 2015ஆம் ஆண்டு அறிமுகமான சஞ்சு சாம்சன் இதுவரை பத்து டி20 மற்றும் ஒரு ஒருநாள் போட்டிகளில் விளையாடி உள்ளார். ஐபிஎல் தொடர்களில் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தக்கூடிய இவர் தற்போது சொதப்பலில் ஈடுபட்டுள்ளார்.
இவரின் ஆட்ட திறன் குறித்து பேசியுள்ள இந்திய அணியின் முன்னாள் வீரரும், வர்ணனையாளருமான சுனில் கவாஸ்கர், சஞ்சுவின் இந்த மோசமான ஆட்டத்திற்கு காரணம் அவரது தவறான ஷார்ட் செலக்சன் மட்டும்தான் என குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் சஞ்சு குறித்து பேசியதாவது:-
சர்வதேச அளவில் சஞ்சு சாம்சன் விளையாடும்போது இரண்டாவது அல்லது மூன்றாவது விக்கெட்டிற்கு விளையாட தகுதியான ஒரு வீரர். ஆனால் முதல் பந்தில் இருந்தே அவர் பந்தை மைதானத்திற்கு வெளியே பறக்க விட வேண்டும் என ஆசைப்படுகிறார். அது முடியாத காரியம் மேலும் அப்படி நீங்கள் அடித்து ஆட நினைக்கும் போது உங்களுடைய பேட்டிங் பார்ம் வேஸ்ட் ஆகிவிடும்.
ஒரு நல்ல பிளேயர் பந்துகளை முதலில் எதிர்கொண்டு அதன்பிறகே அடிக்க நினைக்க வேண்டும். ஏற்கனவே இந்த தொடரின் முதல் பாதியில் ஒரு சதம் அடித்துள்ள அவர் இந்த போட்டியில் 4 ரன்களில் வெளியேறியது எனக்கு வருத்தமளிக்கிறது. அவருடைய ஷாட் செலக்சன் மிகவும் தவறாக இருக்கிறது. அதில் நிச்சயம் அவர் கவனம் செலுத்தி மேம்பட வேண்டும்.
இவ்வாறு ஜாம்பவான் சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.