scorecardresearch

மிடில் ஆர்டர் வீக்னஸ்; ஃபிட்னஸ் பிரச்னையில் டோனி: எப்படி சமாளிக்கும் சி.எஸ்.கே?

சென்னை – பெங்களூரு அணிகள் மோதும் நிலையில், சி.எஸ்.கே அணியில் இதுவரையிலான ஆட்டங்களில் மிடில் ஆர்டர் வீரர்கள் சோபிக்கவில்லை. கேப்டன் தோனி முழங்கால் வலியால் பாதிக்கப்பட்டு ஃபிட்னஸ் பிரச்னையில் சி.எஸ்.கே எப்படி சமாளிக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

IPL 2023, Indian Premier League 2023, Indian Express, Sports News, MS Dhoni, CSK vs RCB, RCB vs CSK, Chennai Super Kings vs Royal Challengers Bangalore, Royal Challengers Bangalore vs Chennai Super Kings
எம்.எஸ். தோனி

16-வது ஐ.பி.எல் தொடரில் சென்னை – பெங்களூரு அணிகள் மோதும் நிலையில், சி.எஸ்.கே அணியில் இதுவரையிலான ஆட்டங்களில் மிடில் ஆர்டர் வீரர்கள் சோபிக்கவில்லை. கேப்டன் தோனி முழங்கால் வலியால் பாதிக்கப்பட்டு ஃபிட்னஸ் பிரச்னையில் சி.எஸ்.கே எப்படி சமாளிக்கும் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.

ஐ.பி.எல் போட்டிகளில் ரசிகர்களால் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கும் எதிரான போட்டி இன்று சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. சி.எஸ்.கே அணியின் கேப்டன் எம்.எஸ். தோனி களம் இறங்குவார் என்று நம்புகிறது.

இதுவரை நடந்த போட்டிகளில் வெற்றி – தோல்வி என மாறி மாறி கண்ட பிறகு, இரு அணிகளும் மோதும் போது, ​​சின்னசாமி மைதானத்தில் ஒரு சிறப்பான சூழ்நிலை இருக்கும்.

ஐ.பி.எல் போட்டியின் தொடக்கத்திலிருந்தே தோனிக்கு முழங்கால் தொல்லை இருந்து வருகிறது. ஆனால், அவர் இதுவரை நான்கு ஆட்டங்களிலும் விளையாடி முடித்துள்ளார். சி.எஸ்.கே சி.இ.ஓ காசி விஸ்வநாதன் ஆர்.சி.பி அணிக்கு எதிராக கேப்டன் எம்.எஸ். தோனி அணியை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கிறார்.

“அவர் ஆடமாட்டார் என்று நான் நினைக்கவில்லை. ஆனால், நாளை மாலை வரை நாம் காத்திருந்து பார்க்க வேண்டும்” என்று அவர் பி.டி.ஐ செய்தி நிறுவனத்திடம் கூறினார்.

இந்த வார தொடக்கத்தில் சென்னை மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸிடம் தோல்வியடைந்த பிறகு தோனி சற்று கால் தாங்கி தாங்கி நடந்தார். இது ஆர்.சி.பி ஆட்டத்தில் அவர் விளையாடுவாரா என்ற கேள்விகளை எழுப்பியுள்ளது.

தோனி எட்டாவது இடத்தில் பேட்டிங் செய்ய வந்தாலும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான கடைசி பந்தின் முடிவில் அவர் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தினார். கிட்டத்தட்ட தனது அணியை வெற்றிக்கு அருகே அழைத்துச் சென்றார்.

தொடக்க ஆட்டக்காரர்களான ருதுராஜ் கெய்க்வார்ட் மற்றும் டெவோன் கான்வே ஆகியோர் தங்கள் வேலையைச் சிறப்பாக செய்து வருகின்றனர். அஜிங்க்யா ரஹானேவும் மூன்றாம் இடத்தில் பேட்டிங் செய்யும் போது தன்னைத்தானே புதுப்பித்துக் கொண்டதாகத் தெரிகிறது. ஆனால், மிடில்-ஆர்டர் இன்னும் சிறப்பாக விளையாட வேண்டும்.

அம்பதி ராயுடு, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா போன்ற வீரர்களால் முன்னேற முடியவில்லை. ஷிவம் துபே குறிப்பாக தனது நான்கு இன்னிங்ஸ்களிலும் நன்றாக விளையாடுவதற்கு சிரமப்பட்டார். அது அவரது ஸ்டிரைக் ரேட் 118.84-ல் பிரதிபலிக்கிறது.

பந்துவீச்சாளர்களும் காயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். முதலில் அவர்கள் தீபக் சாஹரை இழந்தனர். இப்போது சிசண்டா மகலா குறைந்தது இரண்டு வாரங்களில் வெளியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆல்ரவுண்டர் நட்சத்திரம் பென் ஸ்டோக்ஸ் இந்த மாத இறுதிக்குள் முழு உடற்தகுதி பெறுவார்.

மறுபுறம், ஆர்.சி.பி சனிக்கிழமை பிற்பகல் மிகவும் தேவையான வெற்றியைப் பெற்றது. டெல்லி கேபிடல்ஸுக்கு எதிரான போட்டியில் சிறப்பான ஆட்டத்தை அளிக்க நோக்கமாகக் கொண்டுள்ளது.

விராட் கோலியின் ஃபார்ம் ஆர்.சி.பி அணிக்கு மிகப்பெரிய சாதகமாக உள்ளது. கோலி தனது கம்பீரமான ஆஃப் சைடு ஆட்டத்தின் மூலம் பவுண்டரிகளை அடிப்பது. எதிரணி முகாமில் நெருக்கடியை ஏற்படுத்த போதுமானது. மேலும் சி.எஸ்.கே-வுக்கு எதிராகவும் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கேப்டன் ஃபாஃப் டு பிளெசிஸும் கோலியுடன் இணைந்து மேலே பேட்டிங் செய்யும் போது முன்னணியில் இருந்து வழிநடத்தினார்.

சி.எஸ்.கே-வைப் போலவே, ஆர்.சி.பி அணியிலும் மிடில்-ஆர்டர் வீரர்கள் அவர்களின் திறனை இன்னும் வெளிப்படுத்தவில்லை. கிளென் மேக்ஸ்வெல் ஒரு அற்புதமான ஸ்ட்ரைக் ரேட்டில் பேட்டிங் செய்தார். ஆனால், ஷாபாஸ் அகமது மற்றும் மஹிபால் லோம்ரோர் போன்றவர்கள் சிறப்பாக செயல்பட முடியும்.

கடந்த சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பிறகு, தினேஷ் கார்த்திக் ஃபினிஷர் பாத்திரத்தில் குறைவாகவே செயல்பட்டுள்ளார். மேலும், அதை மாற்றுவதற்கு தினேஷ் கார்த்திக் துடிக்கிறார்.

பந்து வீச்சில், முகமது சிராஜ் தனித்து நிற்கும் பந்துவீச்சாளராக இருந்து டெல்லிக்கு எதிரான தனது தொடக்க ஸ்பெல்லில் கடுமையாக எதிர்கொண்டார். கடந்த நான்கு ஆட்டங்களில் ஓவருக்கு 11 ரன்களை கொடுத்தார். இதனால், டெத் ஓவர் நிபுணர் ஹர்ஷல் படேல் தனது சிறந்த நிலைக்குத் திரும்புவார் என்று அணி நம்புகிறது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ipl csk vs rcb ms dhoni finess issue middle order face struggle