ரூ14 கோடி... டோனியை விட அதிக தொகை தீபக் சாகருக்கு ஏன்?
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்பட 10 அணிகளைச் சேர்ந்த அணி நிர்வாகம் பங்கேற்று வீரர்களை போட்டிப் போட்டு தேர்வு செய்தது.
சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்பட 10 அணிகளைச் சேர்ந்த அணி நிர்வாகம் பங்கேற்று வீரர்களை போட்டிப் போட்டு தேர்வு செய்தது.
15-ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்களின் 2 நாள் ஏலம் பெங்களூரில் நேற்று தொடங்கியது. முதல் நாள் ஏலத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே), மும்பை இந்தியன்ஸ், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் உள்பட 10 அணிகளைச் சேர்ந்த அணி நிர்வாகம் பங்கேற்று வீரர்களை போட்டிப் போட்டு தேர்வு செய்தது.
Advertisment
முன்னதாக, சிஎஸ்கே அணி ரவீந்திர ஜடேஜா (ரூ.16 கோடி), எம்.எஸ்.தோனி (ரூ.12 கோடி), மொயீன் அலி (ரூ.8 கோடி), ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.6கோடி) தக்கவைத்திருந்தது.
கேப்டன் தோனியை விட அதிகத் தொகைக்கு தக்க வைக்கப்பட்டவர் ஜடேஜா.
அதேநேரம், நேற்றைய முதல் நாள் ஏலத்தில் பந்துவீச்சாளர் தீபக் சாஹரை ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுத்தது சிஎஸ்கே.
Advertisment
Advertisements
2018 ஆம் ஆண்டு தீபக் சாஹரை ரூ.80 லட்சத்துக்கு சிஎஸ்கே ஏலத்தில் எடுத்தது.
ஆனால், அடுத்த 4 ஆண்டுகளில் அவரது மதிப்பு ரூ.14 கோடியாக உயர்ந்துள்ளது.
பவர்பிளே ஓவர்களில் சிறப்பாக பந்துவீசக் கூடிய திறன் படைத்தவர் தீபக் சாஹர். அத்துடன், பந்தை ஸ்விங் செய்வதிலும் அதிக திறன் கொண்டவர். இதனால்தான் இவரை பிற அணிக்கு விட்டுக் கொடுக்காமல் இத்தனை கோடி விலை கொடுத்து அணி நிர்வாகம் ஏலத்தில் எடுத்துள்ளது.
கொரோனா காலத்திலும் ஒரு அணி வீரரை தக்க வைக்க இத்தனை கோடியை செலவு செய்வது ஆச்சரியமளிப்பதாகவே உள்ளதாக ரசிகர்கள் தெரிவிக்கின்றனர்.
நேற்றைய ஏலத்தில் அதிகபட்ச விலைக்கு (ரூ.15.25 கோடி) இந்திய இளம் வீரர் இஷான் கிஷன் தேர்வு செய்யப்பட்டார். இவரை மும்பை இந்தியன்ஸ் அணி தக்க வைத்துள்ளது.
ஹர்ஷல் படேல் ரூ.10.75 கோடிக்கு பெங்களூரு அணிக்காக ஏலத்தில் எடுக்கப்பட்டார். அதே அணியில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ் ரூ.7 கோடி தக்க வைக்கப்பட்டார்.
ஹர்ஷல் படேல் படேல் சிராஜை விட சிறந்த பந்துவீச்சாளரா என்றால் ஆம் என்கிறது ரெக்கார்டு. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 32 விக்கெட்டுகளை வீழ்த்தி ஊதா நிற கேப்பை தன்வசம் வைத்திருந்தவர் ஹர்ஷல்.
சுரேஷ் ரெய்னா.
தமிழகத்தைச் சேர்ந்த அதிரடி வீரர் தினேஷ் கார்த்திக் பெங்களுரு அணிக்கு ரூ.5.5 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
இதேபோல் இந்திய அணியின் அதிரடி வீரர் ஷிகர் தவன் ரூ.8.25 கோடிக்கு பஞ்சாப் அணியால் ஏலத்தில் எடுக்கப்பட்டார். சிஎஸ்கேவில் இருந்த டூ பிளெசிஸ் பெங்களூரு அணியால் ரூ.7 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.
ஏலத்தில் விலைபோகாத வீரர்கள்: முதல் நாள் ஏலத்தில் முன்னாள் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னாவையும், ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஸ்மித்தையும் எந்த அணியும் ஏலத்தில் வாங்க முன்வரவில்லை.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “