தீபக் சாஹருக்கு சிஎஸ்கே கொடுத்த விலை! ரஜினி பட காட்சிகளை ஒப்பிட்ட ரசிகர்கள்

இந்த முறை ஏலத்தில் இவரை எடுப்பதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகள் சிஎஸ்கேவுடன் போட்டிப் போட்டன.

இந்த முறை ஏலத்தில் இவரை எடுப்பதற்கு ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகள் சிஎஸ்கேவுடன் போட்டிப் போட்டன.

author-image
WebDesk
New Update
IPL auction 2022 Check the full list of players with highest base price

சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ரூ.14 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட வீரர் தீபக் சாஹர். ஐபிஎல் வரலாற்றில் முதல்முறையாக மிக அதிக விலைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட இந்திய பந்துவீச்சாளர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார் தீபக்.

Advertisment

ஆல்-ரவுண்டரான இவர் பவர்பிளே ஓவர்களை சிறப்பாக வீசக் கூடிய திறன் கொண்டவர். 2018-ஆம் ஆண்டு சிஎஸ்கே அணிக்கு இவர் தேர்வுசெய்யப்பட்டார்.

இந்த முறை ஏலத்தில் இவரை வாங்க ராஜஸ்தான் ராயல்ஸ், சன்ரைசர்ஸ் ஹைதராபாத், டெல்லி கேபிட்டல்ஸ் ஆகிய அணிகள் சிஎஸ்கேவுடன் போட்டிப் போட்டன.

ஆனாலும், யாரும் கேட்காத அளவுக்கு அதிகத் தொகைக்கு தீபக் சாஹரை தக்க வைத்துள்ளது சிஎஸ்கே. கடந்த சீசனில் இறுதி ஆட்டத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்த தீபக் சாஹரின் பந்துவீச்சு முக்கியப் பங்காற்றியது குறிப்பிடத்தக்கது.

Advertisment
Advertisements

தீபக் சாஹரை விட்டுக் கொடுத்துவிடாமல் அணி நிர்வாகம் அவரை ஏலத்தில் எடுத்துள்ளதால் சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.

சமூக வலைதளங்களிலும் தீபக் சாஹரை தேர்வு செய்ததற்கு நன்றி என்று ரசிகர்கள் பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.

சிஎஸ்கே அணியில் விளையாடியவரும், இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளருமான ஹர்பஜன் சிங்கும் ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், நீங்கள் சிஎஸ்கே அணிக்கு தேர்வானதை நினைத்து மகிழ்ச்சி அடைகிறேன். வாழ்த்துக்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.

publive-image

அந்தப் பதிவில், தீபக் சாஹர் 2018இல் சிஎஸ்கே அணிக்கு தேர்வு செய்யப்பட்டார். தற்போது அவரது மதிப்பு ரூ.14 கோடியாக உயர்ந்துள்ளது. ரசிகர் ஒருவர் ரஜினி நடிப்பில் வெளியான சிவாஜி படத்தின் காட்சி ஒன்றை பகிர்ந்து சாஹரை ஏலத்தில் எடுத்த பிறகு சிஎஸ்கே ஓனரின் நிலை என்று கூறி வேடிக்கையாக ஒரு பதிவை டிவிட்டரில் வெளியிட்டுள்ளார்.

மற்றொரு ரசிகரும் அண்ணாமலை படத்தின் காட்சியை ஒப்பிட்டு வேடிக்கையாக பதிவிட்டுள்ளார்.

தமிழகத்தைச் சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் நடராஜன் ரூ.40 லட்சத்துக்கு எடுக்கப்பட்டார். இந்த சீசனில் அவரது மதிப்பு 4 கோடியாக உயர்ந்துள்ளது.

முதல் நாள் ஏலத்தில் அதிகபட்சமாக மும்பை இந்தியன்ஸ் அணிக்காக இஷான் கிஷன் ரூ.15.25 கோடிக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டார்.

.“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “

Sports Ipl

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us: