மீண்டெழுமா மும்பை அணி? ஐதராபாத் அணியிடம் பணியுமா? பாயுமா? LIVE SCORE

இந்த சீசனில் மும்பை - ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த முதல் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது.

ஐபிஎல் நடப்பு சாம்பியனான மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 7 வது இடத்தில் உள்ளது. அடுத்து வரும் போட்டிகளில் எல்லாம் வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் மும்பை அணி இருக்கிறது. இன்று மும்பையில் ஐதராபாத் அணியை சந்திக்கிறது.

மும்பையில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியும், மும்பை இந்தியன் அணியும் ஐபிஎல் போட்டியில் சந்திக்கின்றன. மும்பை அணியின் முன் வரிசை ஆட்டக்காரர் சூர்யகுமார் சிறப்பாக விளையாடி வருகிறார். பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் 94 ரன்கள் எடுத்த கேப்டன் ரோகித் சர்மா மற்ற ஆட்டங்களில் சிறப்பாக விளையாடவில்லை. பொலாட், பும்ரா, பாண்டியா சகோதரர்களும் ஜொலிக்கவில்லை. இவர்கள் மீண்டு வந்தால் மட்டுமே அடுத்தடுத்த ஆட்டங்களில் ஜெயிக்க முடியும்.

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் கனே வில்லியம்சன் அணியை சிறப்பாக வழி நடத்திச் செல்கிறார். லீக் ஆட்டத்தில் முதல் 3 போட்டிகளில் வெற்றி பாதைக்கு அழைத்துச் சென்றார். அடுத்த இரண்டு போட்டியில் தோற்றாலும் வில்லியம்சன் ஆட்டம் சிறப்பாகவே இருக்கிறது. அவர் இதுவரை 230 ரன்கள் குவித்துள்ளார். ஷிகார் தவான், விருத்திமான் சஹா, யூசப் பதான் ஆகியோரின் பேட்டிங்க் குறிப்பிட்டு சொல்லும்படியில்லை.

இந்த சீசனில் மும்பை – ஐதராபாத் அணிகளுக்கு இடையே நடந்த முதல் போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வெற்றி பெற்றது. அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் மும்பை அணி இன்று செயல்படுமா என்பது இரவு 8 மணிக்கு ஆரம்பிக்கும் போட்டியின் போது தெரியும்.

போட்டியின் LIVE SCORE -யைத் தெரிந்து கொள்ள, இணைந்திருங்கள்.

×Close
×Close