மிரட்டிய வீரர்கள்… பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது ஐதராபாத் அணி!

அத்தனை யூகங்களையும் தவிட பொடியாக்கி பிளே ஆஃப்-க்கு முன்னேறியது ஐதராபாத் அணி.

By: Updated: November 4, 2020, 09:15:54 AM

ipl match sun risers hyderabad : மும்பைக்கு எதிரான இன்றைய ஐ.பி.எல். ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, ஐதராபாத் அணி ப்ளே-ஆப் சுற்றுக்கு முன்னேறியது.

சார்ஜாவில் நடைபெற்று வரும் போட்டியின் நேற்றைய ஆட்டத்தில் டாஸ் வென்ற ஐதராபாத் அணியின் கேப்டன் பந்துவீச்சை தேர்வு செய்தார். ஐதராபாத் அணிக்கு 150 ரன்களை வெற்றி இலக்காக மும்பை அணி நிர்ணயித்தது.இதனையடுத்து முதலில் களமிறங்கிய மும்பை அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 149 ரன்கள் எடுத்தது. மும்பை அணி பிளே ஆப் சுற்றை எட்டியதல் ஹர்திக் பாண்ட்யா, பும்ரா உள்ளிட்ட முக்கிய வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டது.

தொடர்ந்து, 150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஐதராபாத் அணி 17.1 ஓவரில் விக்கெட்கள் இழப்பின்றி 151 ரன்கள் எடுத்தது.ஐதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கிய டேவிட் வார்னர்-விருத்திமான் சஹா ஜோடி இறுதி வரை நிலைத்து நின்று ஆடி, மும்பை அணியின் பந்துவீச்சை தெறிக்க விட்டது. இதனால் மும்பை அணியை 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஐதராபாத் அணி வீழ்த்தி வெற்றி பெற்று பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது.

6 வெற்றி, 7 தோல்வி என்று 12 புள்ளிகளுடன் இருந்த ஐதராபாத் அணிக்கு இந்த ஆட்டத்தின் முடிவு முக்கியமானது. இதில் ஜெயித்தால் ரன்ரேட்டிலும் (+0.555) வலுவாக இருப்பதால் சிக்கலின்றி பிளே-ஆப் சுற்றை ஐதராபாத் அணி எட்டிவிடும். சறுக்கினால் வெளியேற வேண்டியது தான். ஐதராபாத் அணி தோற்றால் தான் கொல்கத்தாவுக்கு பிளே-ஆப் வாய்ப்பு கிட்டும் என கணிக்கப்பட்டது. அத்தனை யூகங்களையும் தவிட பொடியாக்கி பிளே ஆஃப்-க்கு முன்னேறியது ஐதராபாத் அணி.

இதன் மூலம் இன்றைய கடைசி லீக் ஆட்டத்தில் ஐதராபாத் அணி புள்ளிப்பட்டியலில் 4வது இடத்திற்கு முன்னேறி தனது ப்ளே-ஆஃப் வாய்ப்பை உறுதி செய்துள்ளது.

“அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil இந்த இணைப்பை க்ளிக் செய்யவும்”

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Sports News by following us on Twitter and Facebook

Web Title:Ipl match sun risers hyderabad play off sun risers hyderabad qualify

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

இதைப் பாருங்க!
X