சென்னை அணியின் ஐபிஎல் போட்டிகள் புனேவுக்கு இடமாற்றம்

ஐபிஎல் சென்னை அணியின் வீரர்களின் பாதுகாப்பு கருதி, சிஎஸ்கே போட்டிகளின் விளையாட்டு இடம் புனேவிற்கு மாற்றப்பட்டுள்ளது என ராஜிவ் சுக்லா அறிவித்தார்.

ஐபிஎல் – 11 சீசன் போட்டிகள் இந்தியா முழுவதும் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. கடந்த 7ம் தேதி துவங்கி நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் இரண்டு ஆண்டு தடைக்குப்பின் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியுள்ளது. சென்னை அணியின் போட்டிகள் சேப்பாக்கம் மைதானத்தில் நடப்பது வழக்கம். ஆனால், கடந்த 10ம் தேதி காவிரி விவகாரத்தில் ஐபிஎல் போட்டியை எதிர்த்து நடந்த போராட்டத்தினால் பரபரப்பான சூழல் நேர்ந்தது. இதனையடுத்து சென்னை அணியின் விளையாட்டுகள் புனேவிற்கு மாற்றப்பட்டுள்ளது.

தற்போது விஸ்வரூபம் எடுத்துள்ள காவிரி மேலாண்மை வாரியம் விவகாரத்தால் தமிழகத்தில் போராட்டங்கள் வெடித்துள்ளன. ஏப் 10ம் தேதி நடைபெற்ற ஐபிஎல் போட்டியை உடனடியாக ரத்து செய்ய வேண்டும் அல்லது ஒத்தி வைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தினர். இருப்பினும் கோரிக்கைகளை மீறி போட்டி நடைபெற்றது. இதனைக் கண்டித்து நூற்றுக்கணக்கானோர் ஆர்ப்பாட்டம் மற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டங்கள் அனைத்துச் சென்னை சேப்பாக்கம் மைதானத்திலும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளிலும் நடைபெற்றது. சேப்பாக்கம் அரங்கத்தின் உள்ளே இருந்த போராட்டக்காரர்கள் திடீரென்று, எதிர்ப்பு கொடிகளை காட்டியும், சென்னை அணிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியும் ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் போராட்டக்காரர்களில் ஒருவர் சென்னை அணியின் வீரர்கள் மீது செருப்பை வீசி எரிந்தார். இந்தச் சம்பவத்தை தொடர்ந்து அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிகழ்வால், சென்னை அணியினரின் பாதுகாப்பு கருதி போட்டிகள் நடைபெறும் இடத்தை மாற்றக் கோரிக்கை விடுக்கப்பட்டது. இந்தக் கோரிக்கையை ஏற்றுச் சென்னை அணியின் போட்டிகள் நடைபெறும் இடம் புனேவிற்கு மாற்றப்பட்டது. இந்த அறிவிப்பை ஐபிஎல் போட்டி தலைவர் ராஜிவ் சுக்லா வெளியிட்டார்.
சென்னையில் நடக்க இருக்கும் போட்டிகளுக்கு தமிழக காவல்துறை பாதுகாப்பு அளிக்க மறுத்ததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். பின்னர், இனி வரும் சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணியின் போட்டிகள் புனே மைதானத்தில் நடக்கும் என்று தெரிவித்து, போட்டியின் தேதிகளை அறிவித்தார்.

இனி வரும் நாட்களில் புனே நடைபெற இருக்கும் சிஎஸ்கே போட்டிகள்:

ஏப் 20 – சென்னை சூப்பர் கிங்ஸ் – ராஜஸ்தான் ராயல்ஸ்
ஏப் 28 – சென்னை சூப்பர் கிங்ஸ் – மும்பை இந்தியன்ஸ்
ஏப் 30 – சென்னை சூப்பர் கிங்ஸ் – டெல்லி டேர்டெவில்ஸ்
மே 5- சென்னை சூப்பர் கிங்ஸ் – ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்
மே 13 – சென்னை சூப்பர் கிங்ஸ் – சன்ரைசர்ஸ் ஐதராபாத்
மே 20- சென்னை சூப்பர் கிங்ஸ் – கிங்ஸ் லெவன் பஞ்சாப்

ஒருபுறம் போராட்டக்காரர்கள் இந்த முடிவை ஒப்புக்கொண்டாலும், சென்னையில் வசிக்கும் சிஎஸ்கே ரசிகர்களுக்கு இது மனவேதனையை அளித்துள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Sports news in Tamil.

×Close
×Close