Advertisment

IPL 2023 Retention: பிராவோ, உத்தப்பா உள்பட 8 வீரர்களை கழற்றிவிட்ட சி.எஸ்.கே; ஜடேஜா பிரச்னைக்கு முடிவு

10 ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் தக்கவைக்கும் - விடுவிக்கும் வீரர்களின் பெயர் பட்டியல் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்' லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.

author-image
WebDesk
New Update
IPL Mini Auction 2023 live updates in tamil

IPL Mini Auction Date, Venue Announcement

IPL Mini Auction 2023 | IPL mini auction date announce 2022 | ஐபிஎல் மினி ஏலம் 2023 | ஐபிஎல் மினி ஏல தேதி அறிவிப்பு 2022 | 2023 ஆம் ஆண்டுக்கான இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) போட்டிகள் மார்ச் மூன்றாவது வாரத்தில் தொடங்கி மே இறுதி அல்லது ஜூன் தொடக்கத்தில் முடிவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனிடையே, ஐபிஎல் தொடருக்கான மினி ஏலம் டிசம்பர் 23ம் தேதி கொச்சியில் நடைபெறவுள்ளது.

Advertisment

இந்த மினி ஏலத்திற்கு முன்பாக ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்களின் பெயர் பட்டியலை இன்றுக்குள் சமர்பிக்க வேண்டும் என ஐபிஎல் நிர்வாகம் கூறியிருந்தது. அதற்கான வேலைகளை அணி நிர்வாகங்கள் தீவிரமாக செய்து வருகின்றன.

தமிழ்  இந்தியன்  எக்ஸ்பிரஸின்  அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன்  டெலிகிராம்  ஆப்பில்  பெறhttps://t.me/ietamil


  • 22:09 (IST) 15 Nov 2022
    மும்பை இந்தியன்ஸ் அணியில் விடுவிக்கப்பட்ட 13 வீரர்கள்

    ஐபிஎல் வீரர்களின் புதிய ஏலம் நடைபெற உள்ளதால் பல்வேறு அணிகளில் இருந்து பல வீரர்களை அந்தந்த அணிகள் விடுவித்துள்ளது.

    மும்பை இந்தியன்ஸ் அணியில் 13 பேர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    கைரன் பொலார்ட், மெரிடித், டேனியன் சேம்ஸ், பேபியன் ஆலன், டைமல் மில்ஸ், சஞ்சய் யாதவ், ஆர்யன் ஜுயல், மயங் மார்கண்டே, முருகன் அஸ்வின், ராகுல் புத்தி, அனுமோல் பிரீத், உனத்கட், பேசில் தம்பி ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    மும்பை இந்தியன்ஸ் அணி நிர்வாகம் ட்ரேடிங் முறையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியில் இருந்து ஆஸ்திரேலிய பௌலர் ஜேசன் பெக்ரன்ட்ரூப்பை வாங்கியிருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.


  • 22:02 (IST) 15 Nov 2022
    பெங்களூர் அணியில் விடுவிக்கபட்டவர்கள் - தக்கவைக்கபட்டவர்கள் இவர்கள்தான்

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி தக்கவைத்துள்ள வீரர்கள் :

    ஃபாஃப் டு பிளெசிஸ் (கேப்டன்), விராட் கோலி, சுயாஷ் பிரபுதேசாய், ரஜத் படிதார், தினேஷ் கார்த்திக், அனுஜ் ராவத், ஃபின் ஆலன், கிளென் மேக்ஸ்வெல், வனிந்து ஹசரங்கா, ஷாபாஸ் அகமது, ஹர்சல் படேல், டேவிட் வில்லி, மஹி கர்ண் லோம்ரோர், முகமது சிராஜ், ஜோஷ் ஹேசில்வுட், சித்தார்த் கவுல், ஆகாஷ் தீப்

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியால் விடுவிக்கப்பட்ட வீரர்கள்:

    ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப், அனீஷ்வர் கவுதம், சாமா மிலிந்த், லுவ்னித் சிசோடியா, ஷெர்பேன் ரூதர்ஃபோர்ட்

    இதில் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு வீரர்கள் பரிமாற்றம் மூலம் டிரேட் செய்யப்பட்டுள்ளார். ஆனால், பெங்களூர் அணி இம்முறைப்படி எந்தவொரு வீரரையும் எடுக்கவில்லை.


  • 21:58 (IST) 15 Nov 2022
    கொல்கத்தா அணியில் விடுவிக்கப்பட்டவர்கள் - தக்கவைக்கப்பட்டவர்கள்

    கொல்கத்தா அணி விடுவித்த வீரர்கள்:

    பேட் கம்மின்ஸ், சாம் பில்லிங்ஸ், அமன் கான், சிவம் மாவி, முகமது நபி, சம்மிகா கருணாரத்னே, ஆரோன் பின்ச், அலெக்ஸ் ஹேல்ஸ், அபிஜித் தோமர், அஜின்கியா ரஹானே, அசோக் சர்மா, பாபா இந்திரஜித், பிரதம் சிங், ரமேஷ் குமார், ராசிக் சலாம், ஷெல்டன் ஜாக்சன்.

    கொல்கத்தா அணியில் தக்க வைக்கப்பட்ட வீரர்கள்:

    ஸ்ரேயஸ் ஐயர், நிதிஷ் ராணா, வெங்கடேஷ் ஐயர், ரசல், சுனில் நரைன், உமேஷ் யாதவ், டிம் சவுத்தி, ஹர்சித் ரனா, வருண் சக்கரவர்த்தி, அனுகுல் ராய், ரின்கு சிங்.

    மற்ற அணிகளில் இருந்து கொல்கத்தா அணிக்கு வாங்கப்பட்ட வீரர்கள்:

    ஷர்துல் தாகூர், ரஹ்மத்துல்லாஹ் குர்பாஸ், லோகி பெர்குசன்.

    கையிருப்பில் உள்ள தொகை – 7.05 கோடி


  • 18:42 (IST) 15 Nov 2022
    ஐபிஎல் 2023 சீசனுக்கு முன்னதாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி விடுவித்த வீரர்கள் இவர்கள்தான்

    டுவைன் பிராவோ, ஆடம் மில்னே, கிறிஸ் ஜோர்டான், என் ஜெகதீசன், சி ஹரி நிஷாந்த், கே பகத் வர்மா, கேஎம் ஆசிப், ராபின் உத்தப்பா (ஓய்வு) ஆகியோர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளனர்.

    அணியில் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்:

    மகேந்திர சிங் தோனி (C & WK), ரவீந்திர ஜடேஜா, டெவோன் கான்வே, மொயின் அலி, ருதுராஜ் கெய்க்வாட், ஷிவம் துபே, அம்பதி ராயுடு, டுவைன் பிரிட்டோரியஸ், மகேஷ் தீக்ஷனா, பிரசாந்த் சோலங்கி, தீபக் சாஹர், முகேஷ் சவுத்ரி, சிமர்ஜீத் சிங், துஷார் தேஷ்பன்டே, துஷார் தேஷ்பன் ஹங்கே , மிட்செல் சான்ட்னர், மதீஷா பத்திரனா, சுப்ரான்ஷு சேனாபதி ஆகியோர் தக்கவைக்கப்பட்டுள்ளனர்.

    ராபின் உத்தப்பா செப்டம்பர் 14, 2022 அன்று இந்திய கிரிக்கெட்டின் அனைத்து வகையான கிரிக்கெட்டில் இருந்தும் ஓய்வு பெற்றார்.


  • 18:38 (IST) 15 Nov 2022
    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் 8 வீரர்கள் தொடர்கிறார்கள்... யார் அந்த வீரர்கள்

    வரவிருக்கும் டாடா ஐ.பி.எல் 2023 தொடருக்காக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்த வீரர்களில் 8 வீரர்கள் தொடர்கிறார்கள்... யார் அந்த வீரர்கள் அறிவிப்பதற்கு காத்திருங்கள் என்று சி.எஸ்.கே ட்விட்டரில் தெரிவித்துள்ளது.


  • 18:31 (IST) 15 Nov 2022
    டெல்லி கேப்பிட்டல் அணியில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு சென்ற ஷர்துல் தாக்கூர்

    வரவிருக்கும் டாடா ஐ.பி.எல் 2023 தொடருக்காக ஷர்துல் தாக்குர் டெல்லி கேப்பிடல்ஸில் இருந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு வாங்கப்பட்டுள்ளார். 2022 டாடா ஐ.பி.எல் ஏலத்தில் ரூ.10.75 கோடிக்கு இந்த ஆல்-ரவுண்டர் கொல்கத்தா அணி உரிமையாளரால் வாங்கப்பட்டார். அவர் 14 போட்டிகளில் விளையாடி 15 விக்கெட்டுகளை எடுத்துள்ளார். இதில் 4 விக்கெட்டுக்கு 36 ரன்கள் சிறந்த பந்துவீச்சு. கடந்த ஐ.பி.எல் தொடரில், 120 ரன்கள் எடுத்துள்ளார்.

    வளர்ந்து வரும் ஆல்ரவுண்டர் அமன் கான், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு வாங்கப்பட்டுள்ளார். கடந்த சீசனில் கொல்கத்தா அணிக்காக ஐ.பி.எல் போட்டிகளில் அறிமுகமான அமன் கான், 2022 டாடா ஐ.பி.எல் ஏலத்தில் ரூ.20 லட்சத்திற்கு வாங்கப்பட்டார்.


  • 17:44 (IST) 15 Nov 2022
    கம்மின்ஸ், பில்லிங்ஸ், ஹேல்ஸ் விலகல்!

    தனிப்பட்ட காரணங்களுக்காக பாட் கம்மின்ஸ், அலெக்ஸ் ஹேல்ஸ் மற்றும் சாம் பில்லிங்ஸ் ஆகியோர் ஐபிஎல் 2023ல் இருந்து விலகுகின்றனர்


  • 17:24 (IST) 15 Nov 2022
    ஆர்சிபி தக்கவைக்க உள்ள 6 வெளிநாட்டு வீரர்கள்!

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 6 வெளிநாட்டு வீரர்களை தக்கவைக்க உள்ளது. அவர்களின் பட்டியல் பின்வருமாறு:-

    ஃபாஃப் டு பிளெசிஸ்

    கிளென் மேக்ஸ்வெல்

    ஹசரங்க

    ஹேசல்வுட்

    ஃபின் ஆலன்

    டேவிட் வில்லி


  • 17:06 (IST) 15 Nov 2022
    அதிகாரப்பூர்வமாக முடிவடைந்த நேரம்!

    ஐபிஎல் 2023 தொடருக்கான வீரர்கள் தக்க வைப்பு மற்றும் விடுவிப்பதற்கான நேரம் அதிகாரப்பூர்வமாக முடிவடைந்துள்ளது.


  • 16:56 (IST) 15 Nov 2022
    டாப் வீரர்களை விடுவிக்கும் கொல்கத்தா!

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆரோன் பின்ச், சிவம் மாவி, முகமது நபி மற்றும் சமிகா கருணாரத்னே ஆகியோரை விடுவித்துள்ளது.


  • 16:44 (IST) 15 Nov 2022
    கேப்டன் கேன் வில்லியம்சனை ஐதராபாத் தக்க வைக்குமா? விடுவிக்குமா?

    நியூசிலாந்து கேப்டன் கேன் வில்லியம்சன் ஐபிஎல் 2022 மெகா ஏலத்திற்கு முன்பு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் ரூ.14 கோடிக்கு தக்கவைக்கப்பட்டார். இருப்பினும், வில்லியம்சன் ஐபிஎல் 2022 இல் 13 போட்டிகளில் 94 ஸ்டிரைக் ரேட்டில் 216 ரன்கள் மட்டுமே எடுத்தார்.

    மற்றொரு ஏமாற்றமளிக்கும் சீசனுக்குப் பிறகு ன்ரைசர்ஸ் ஐதராபாத் அவரை ஐபிஎல் 2023 தக்கவைப்பு நாளில் தக்க வைக்குமா? அல்லது விடுவிக்குமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


  • 16:40 (IST) 15 Nov 2022
    இறுதிப் போட்டிகளில் பொல்லார்ட்!

    ஐபிஎல் வரலாற்றின் தலைசிறந்த வீரர்களில் ஒருவரான மும்பை இந்தியன்ஸ் பிக் மேட்ச் வீரரான கெய்ரன் பொல்லார்ட் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்றார்.

    ஐபிஎல் 2010 இறுதிப் போட்டியில் 27(10).

    ஐபிஎல் 2013 இறுதிப் போட்டியில் 60*(32).

    ஐபிஎல் 2015 இறுதிப் போட்டியில் 36(18).

    ஐபிஎல் 2019 இறுதிப் போட்டியில் 41*(25).


  • 16:37 (IST) 15 Nov 2022
    மும்பை அணியில் கேமரூன் கிரீன்!

    ஆஸ்திரேலிய அணியின் கேமரூன் கிரீன் ஐபிஎல் 2023 மினி ஏலத்தின் ஒரு பகுதியாக இருப்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

    கேமரூன் கிரீன், சமீபத்தில் இந்தியா சுற்றுப்பயணத்தின் போது அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார். பேட்டிங்கில் தொடக்க வீரராக களமிறங்கி அதிரடி காட்டுவதோடு, பந்துவீச்சிலும் அசத்தலாக செயல்படக்கூடியவர்.அவர் நடப்பு டி20 உலகக் கோப்பை போட்டியிலும் ஆஸ்திரேலிய அணிக்காக அறிமுகமாகி விளையாடியிருந்தார்.

    இந்நிலையில், மும்பை அணி பொல்லார்டுக்கு பதிலாக பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலுமே அதிரடி காட்டும் கேமரூன் கிரீனை வாங்க முடிவு எடுத்திருக்கிறது.


  • 16:32 (IST) 15 Nov 2022
    கொல்கத்தாவுக்கு அலெக்ஸ் ஹேல்ஸ் திரும்புவாரா?

    இங்கிலாந்து தொடக்க ஆட்டக்காரர் அலெக்ஸ் ஹேல்ஸ் நடப்பு டி20 உலகக் கோப்பையில் பரபரப்பான மறுபிரவேசம் செய்தார் மற்றும் டீம் இந்தியாவுக்கு எதிரான அரையிறுதி வெற்றியில் ஆட்டமிழக்காமல் 86 ரன்கள் எடுத்தார். ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஹேல்ஸை அவரது அடிப்படை விலையான ரூ 1.5 கோடிக்கு எடுத்தது.

    ஆனால் குமிழி சோர்வு மற்றும் அவரது மனநலம் காரணமாக ஹேல்ஸ் ஐபிஎல் 2022 ஐத் தவிர்த்துவிட்டார். கேகேஆர் ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர் ஆரோன் ஃபிஞ்சை மாற்றியமைத்தது. ஐபிஎல் விதிகளின்படி, இரு வீரர்களையும் விடுவிக்க அல்லது தக்கவைத்துக் கொள்ள உரிமையாளருக்கு உரிமை உண்டு. தக்கவைப்பு நாளில் கொல்கத்தா என்ன முடிவு செய்யும்? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.


  • 16:29 (IST) 15 Nov 2022
    ஐபிஎல் 2023: அம்பதி ராயுடுவை சிஎஸ்கே விடுவிக்குமா?

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பல ஆண்டுகளாக அம்பதி ராயுடு விளையாடி வருகிறார். தற்போது 36 வயதில் இருக்கும் ராயுடுவை ஐபிஎல் 2022 மெகா ஏலத்தில் ரூ.6.5 கோடிக்கு வாங்கப்பட்டார். அவரை தொடர்ந்து சிஎஸ்கே தக்க வைத்துக் கொள்ளுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.


  • 16:17 (IST) 15 Nov 2022
    படிக்கலை தக்கவைத்த ராஜஸ்தான்!

    ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தொடக்க வீரர் தேவ்தத் படிக்கலை தக்கவைத்துள்ளது.


  • 16:16 (IST) 15 Nov 2022
    கொல்கத்தா விடுவிக்கும் வீரர்கள் பட்டியல்!

    கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி சிவம் மாவி, முகமது நபி மற்றும் கருணாரத்னே ஆகியோரை விடுவிக்க உள்ளது


  • 16:02 (IST) 15 Nov 2022
    மயங்க் அகர்வாலை விடுவித்த பஞ்சாப் கிங்ஸ்!

    ஐபிஎல் 2023க்கு முன் பஞ்சாப் கிங்ஸ் மீண்டும் பெரிய மாற்றங்களுடன் களமிறங்க உள்ளது. அவர்கள் முன்னாள் கேப்டன் மயங்க் அகர்வாலுக்கு பதிலாக ஷிகர் தவானை கேப்டனாக நியமித்துள்ளனர்.

    ஐபிஎல் 2023 மினி ஏலத்திற்கு முன்னதாக மயங்க் அகர்வால் (ரூ. 14 கோடி), ஒடியன் ஸ்மித் (ரூ. 6 கோடி) மற்றும் ஷாருக் கான் (ரூ. 9 கோடி) ஆகியோரை வெளியிட உள்ளதாக இப்போது தகவல்கள் தெரிவிக்கின்றன. பஞ்சாப் கிங்ஸ் ஏற்கனவே 8.45 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் மிகப்பெரிய பர்ஸை வைத்துள்ளது.


  • 16:01 (IST) 15 Nov 2022
    டிரேடு செய்யப்பட்ட ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்!

    ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரூ அணி சில நாட்களுக்கு முன்பு ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப்பை மும்பை இந்தியன்ஸுக்கு டிரேடு செய்தது.

    இடது கை வேகப்பந்து வீச்சாளரான ஜேசன் பெஹ்ரன்டோர்ஃப் 2018 மற்றும் 2019 டைட்டில் வென்ற சீசனில் MI அணியின் ஒரு பகுதியாக இருந்துள்ளார். தற்போது அவர் அவர் 2023 சீசனில் மும்பை அணிக்கு திரும்பவுள்ளார்.

    மும்பை அணி ஏற்கனவே முக்கிய வேகப்பந்து வீச்சாளர்கள் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் காயங்களுடன் போராடி வருகிறது.


  • 15:56 (IST) 15 Nov 2022
    ஐபிஎல் 2023 தக்கவைப்பு: பர்ஸ் விவரங்கள்!

    ஐபிஎல் 2023 மினி ஏலத்திற்கு முன்னதாக அனைத்து 10 ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் கூடுதலாக ரூ.5 கோடி பர்ஸைச் செலவழிக்க வேண்டும், மொத்த ஏலப் பர்ஸ் ரூ.95 கோடியாக இருக்கும்.

    கடந்த ஏலத்தில் 3.45 கோடி ரூபாய் மீதம் உள்ள மிகப்பெரிய பர்ஸை பஞ்சாப் கிங்ஸ் வைத்துள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ், அதே நேரத்தில், தங்கள் பர்ஸை எல்லாம் தீர்ந்து விட்டது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ரூ.2.95 ரோர் பர்ஸ் எஞ்சியிருந்தது, ஆர்.சி.பி -யிடம் ரூ.1.55 கோடி உள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 0.95 கோடியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு 0.45 கோடியும் எஞ்சியுள்ளன.


  • 15:21 (IST) 15 Nov 2022
    மினி ஏலத்தில் அடில் ரஷித்!

    ஐ.பி.எல். போட்டிக்காக கொச்சியில் நடக்க உள்ள வீரர்கள் மினி ஏலத்தில் தனது பெயரை பதிவு செய்வேன் என்று இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளர் அடில் ரஷித் தெரிவித்துள்ளார்.

    சமீபத்தில் நடந்த 20 ஓவர் உலக கோப்பை போட்டியில் 6 ஆட்டங்களில் ஆடி 4 விக்கெட் வீழ்த்திய அவர் அதிக ரன் கொடுக்காமல் சிக்கனமாக பந்து வீசி எதிரணியினருக்கு நெருக்கடி அளித்தார்.


  • 15:20 (IST) 15 Nov 2022
    சாம் பில்லிங்ஸ் விலகல்!

    கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த இங்கிலாந்து விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேனான 31 வயது சாம் பில்லிங்ஸ் அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல். போட்டியில் இருந்து விலகுவதாக நேற்று அறிவித்தார்.

    இது குறித்து பில்லிங்ஸ் தனது டுவிட்டர் பதிவில், 'அடுத்த ஐ.பி.எல். போட்டியில் பங்கேற்க மாட்டேன் என்ற கடினமான முடிவை நான் எடுத்து இருக்கிறேன். கோடை சீசனில் வரும் டெஸ்ட் போட்டிகளில் கவனம் செலுத்த விரும்புகிறேன். எனக்கு வாய்ப்பு அளித்த கொல்கத்தா அணிக்கு மிக்க நன்றி. அருமையான அந்த அணிக்காக விளையாடிய ஒவ்வொரு நிமிடத்தையும் நேசித்தேன். வருங்காலத்தில் மீண்டும் உங்களை சந்திக்க முடியும் என்று நம்புகிறேன்' என்று குறிப்பிட்டுள்ளார்.

    சாம் பில்லிங்ஸ் இங்கிலாந்து அணிக்காக 3 டெஸ்ட், 25 ஒருநாள் மற்றும் 37 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடி இருக்கிறார். இந்த ஆண்டு கொல்கத்தா அணியால் ரூ.2 கோடிக்கு வாங்கப்பட்ட அவர் 8 ஆட்டங்களில் ஆடி 169 ரன்கள் எடுத்து இருந்தார்.


  • 15:19 (IST) 15 Nov 2022
    ஐ.பி.எல் 2023: பேட் கம்மின்ஸ் விலகல்!

    கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அடுத்த வருடம் நடைபெறும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளதாக தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக அவரது ட்விட்டர் பதிவில், அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளேன். அடுத்த ஒரு வருடத்திற்கு சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் அணி வகுத்து இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளேன். ஆஷஸ் தொடர் மற்றும் உலகக்கோப்பை தொடர்ருக்கு முன் சிறிது ஓய்வு எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.


  • 15:10 (IST) 15 Nov 2022
    ஐ.பி.எல்-லில் இருந்து ஓய்வு பெற்ற பொல்லார்ட்: மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமனம்!

    மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரர் கெய்ரன் பொல்லார்ட் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்றார்.அவர் அடுத்தாண்டு நடைபெறும் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்படுவார்.

    "மும்பை இந்தியன்ஸ் அணியில் மாற்றம் தேவை. நான் இனி அந்த அணிக்காக விளையாடவில்லை என்றால், மும்பைக்கு எதிராகவும் என்னைப் பார்க்க முடியாது - ஒருமுறை MI எப்போதும் ஒரு MI" என்று கெய்ரன் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.


  • 15:08 (IST) 15 Nov 2022
    ஐ.பி.எல்-லில் இருந்து ஓய்வு பெற்ற பொல்லார்ட்: மும்பை அணியின் பேட்டிங் பயிற்சியாளராக நியமனம்!

    மும்பை இந்தியன்ஸ் அணியின் அதிரடி வீரர் கெய்ரன் பொல்லார்ட் ஐபிஎல்லில் இருந்து ஓய்வு பெற்றார்.அவர் அடுத்தாண்டு நடைபெறும் ஐபிஎல்லில் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்டிங் பயிற்சியாளராக செயல்படுவார்.

    "மும்பை இந்தியன்ஸ் அணியில் மாற்றம் தேவை. நான் இனி அந்த அணிக்காக விளையாடவில்லை என்றால், மும்பைக்கு எதிராகவும் என்னைப் பார்க்க முடியாது - ஒருமுறை MI எப்போதும் ஒரு MI" என்று கெய்ரன் பொல்லார்ட் தெரிவித்துள்ளார்.


  • 13:51 (IST) 15 Nov 2022
    ஐபிஎல் 2023: எம்எஸ் தோனி அடுத்த சீசனுக்குப் பிறகு ஓய்வு பெறுவாரா?

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் எம்எஸ் தோனி 2023 சீசனுக்குப் பிறகு தனது ஐபிஎல் கிரிக்கெட் வாழ்க்கைக்கான ஓய்வு பெறலாம்.

    நடப்பு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி அரையிறுதியில் இருந்து வெளியேறிய நிலையில், பிசிசிஐ தோனியை அணியில் ஈடுபடுத்த ஆர்வமாக உள்ளது.

    "அடுத்த ஆண்டு ஐபிஎல்லுக்குப் பிறகு தோனி விளையாட்டிலிருந்து ஓய்வு பெறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது, மேலும் அவரது அனுபவத்தையும் தொழில்நுட்ப புத்திசாலித்தனத்தையும் சரியான முறையில் பயன்படுத்த பிசிசிஐ ஆர்வமாக உள்ளது. முன்னாள் கேப்டனிடம் சிறப்பு வீரர்களுடன் பணியாற்றுமாறு கேட்கப்படலாம். மூன்று வடிவங்களை நிர்வகிப்பது என்பது தலைமைப் பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டிற்கு மிகவும் தேவையாக உள்ளது." என்று தனியார் செய்தி நிறுவனம் ஒன்று குறிப்பிட்டுள்ளது.


  • 13:45 (IST) 15 Nov 2022
    ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்கு - க்கு அன்புடன் வரவேற்கிறோம்!

    10 ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்களும் தக்கவைக்கும் – விடுவிக்கும் வீரர்களின் பெயர் பட்டியல் குறித்து உடனுக்குடன் தெரிந்துகொள்ள ‘தி இந்தியன் எக்ஸ்பிரஸ் தமிழ்’ லைவ் பிளாக்குடன் இணைந்திருங்கள்.


Sports Cricket Ipl Ipl Cricket Ipl News Ipl Auction Ipl Auction Live
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment