/tamil-ie/media/media_files/uploads/2021/10/tamil-indian-express-2021-10-07T143457.556.jpg)
Dominic Drakes Tamil News: இந்தியாவில் நடைபெற்று வந்த 14-வது ஐ.பி. எல். கிரிக்கெட் தொடர் கொரோனா அச்சத்தால் தற்காலிமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டிவிட்ட இந்த தொடரில் சிறப்பான கம்பேக் கொடுத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் முதலாவது அணியாக பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
/tamil-ie/media/media_files/uploads/2021/10/tamil-indian-express-2021-10-06T225754.042-1.jpg)
இது ஒருபுறமிருக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கடந்த 2-ம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் சாம் கர்ரனுக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்தும், எதிர் வரும் டி-20 உலக்கோப்பை தொடரில் இருந்தும் சாம் கர்ரன் விலகுவதாக அறிவிக்கப்பட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2021/10/tamil-indian-express-2021-10-05T194654.740-1.jpg)
இந்நிலையில், ஆல்-ரவுண்டர் வீரர் சாம் கர்ரனுக்கு பதிலாக மாற்று வீரர் யார் என்பதை சென்னை அணியின் நிர்வாகம் நேற்று அறிவித்தது. அதன்படி, சாம் கர்ரனுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் டொமினிக் டிரெக்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.
/tamil-ie/media/media_files/uploads/2021/10/tamil-indian-express-2021-10-07T144038.513.jpg)
வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டரான டொமினிக் டிரெக்ஸ் கரீபியன் பிரிமியன் பிரிமியம் லீக்கில் (செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாக் - St Kitts & Nevis Patriots ) விளையாடியுள்ளார். நடப்பு சீசனில் மும்பை அணியின் 'நெக் பவுலர்’-ஆகவும் இவர் செயல்பட்டு வந்தார்.
/tamil-ie/media/media_files/uploads/2021/10/tamil-indian-express-2021-10-07T144120.633.jpg)
மேலும், இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக (மேற்கிந்திய தீவுகள்) சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய வாஸ்பர்ட் டிரேக்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.