scorecardresearch

சி.எஸ்.கே அணியில் இணைந்த இளம் ஆல்ரவுண்டர்: யார் இந்த டொமினிக் ட்ரேக்ஸ்?

IPL 2021, Chennai Super Kings sings Dominic Drakes as Sam Curran’s replacement Tamil News: ஆல்-ரவுண்டர் வீரர் சாம் கர்ரனுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸின் டொமினிக் டிரெக்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

IPL news in tamil: csk signs Dominic Drakes as Sam Curran's replacement Tamil News

Dominic Drakes Tamil News: இந்தியாவில் நடைபெற்று வந்த 14-வது ஐ.பி. எல். கிரிக்கெட் தொடர் கொரோனா அச்சத்தால் தற்காலிமாக ஒத்திவைக்கப்பட்டு தற்போது ஐக்கிய அரபு அமீரகத்தில் நடந்து வருகிறது. இறுதி கட்டத்தை எட்டிவிட்ட இந்த தொடரில் சிறப்பான கம்பேக் கொடுத்துள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் முதலாவது அணியாக பிளே-ஆப் சுற்றுக்குள் நுழைந்துள்ளது.

இது ஒருபுறமிருக்க, ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக கடந்த 2-ம் தேதி நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் வீரர் சாம் கர்ரனுக்கு முதுகு பகுதியில் காயம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்தும், எதிர் வரும் டி-20 உலக்கோப்பை தொடரில் இருந்தும் சாம் கர்ரன் விலகுவதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஆல்-ரவுண்டர் வீரர் சாம் கர்ரனுக்கு பதிலாக மாற்று வீரர் யார் என்பதை சென்னை அணியின் நிர்வாகம் நேற்று அறிவித்தது. அதன்படி, சாம் கர்ரனுக்கு பதிலாக வெஸ்ட் இண்டீஸ் வீரர் டொமினிக் டிரெக்ஸ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார் எனத் தெரிவிக்கப்பட்டது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்-ரவுண்டரான டொமினிக் டிரெக்ஸ் கரீபியன் பிரிமியன் பிரிமியம் லீக்கில் (செயின்ட் கிட்ஸ் & நெவிஸ் பேட்ரியாக் – St Kitts & Nevis Patriots ) விளையாடியுள்ளார். நடப்பு சீசனில் மும்பை அணியின் ‘நெக் பவுலர்’-ஆகவும் இவர் செயல்பட்டு வந்தார்.

மேலும், இவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக (மேற்கிந்திய தீவுகள்) சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடிய வாஸ்பர்ட் டிரேக்கின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Stay updated with the latest news headlines and all the latest Sports news download Indian Express Tamil App.

Web Title: Ipl news in tamil csk signs dominic drakes as sam currans replacement tamil news

Best of Express