ஐதராபாத் அணியின் அதிரடி வீரர் எடுத்த தைரியமான முடிவு… கலாய்த்து வரும் நெட்டிசன்கள்!
netizens reaction on Kedar Jadhav's DRS call Tamil News: ஐதராபாத் அணி ரன்கள் சேர்க்க போராடி வந்த தருணத்தில் 36 வயதான அனுபவ வீரர் ஜாதவ் ரிவ்யூவை இப்படி வேஸ்ட் செய்து விட்டாரே என்று ரசிகர்கள் கடுமையாக விமர்ச்சித்து வருகின்றனர்.
netizens reaction on Kedar Jadhav's DRS call Tamil News: ஐதராபாத் அணி ரன்கள் சேர்க்க போராடி வந்த தருணத்தில் 36 வயதான அனுபவ வீரர் ஜாதவ் ரிவ்யூவை இப்படி வேஸ்ட் செய்து விட்டாரே என்று ரசிகர்கள் கடுமையாக விமர்ச்சித்து வருகின்றனர்.
Kedar Jadhav Tamil News: ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் நேற்றைய ஆட்டத்தில் இளம் வீரர் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கேன் வில்லியம்சன் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. மிகவும் விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் டெல்லி அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் மிக எளிமையாக வென்றது.
Advertisment
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த நிலையில் சீரான இடைவெளியில் அதன் முன்னணி வீரர்களின் விக்கெட்டுகளை இழந்து தவித்து. பொறுப்பாக ஆட வேண்டிய கட்டாயத்தில் களம் கண்ட கேப்டன் கேன் வில்லியம்சன் 18 ரன்னுடன் அவுட் ஆனார். இவரைத் தொடர்ந்து களமிறங்கிய மணீஷ் பாண்டே 17 ரன்னுடன் ஆட்டமிழந்தார்.
இந்த நிலையில், கேப்டன் கேன் வில்லியம்சன் விக்கெட்டுக்கு பிறகு களமிறங்கிய அதிரடி வீரர் கேதர் ஜாதவ் அந்த அணி வலுவான ஸ்கோரை எட்ட போராடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. அவர் 3 ரன்கள் சேர்ந்திருந்த போது டெல்லியின் ஆன்ரிச் நாட்ர்ஜே வீசிய 13வது ஓவரில் எல்பிடபுள்யூ ஆகி அதிர்ச்சி அளித்தார்.
Advertisment
Advertisements
அவருக்கு வீசப்பட்ட பந்து நேரடியாக மிடில் ஸ்டம்பை நோக்கி சென்றிருந்ததால் அம்பயர் சற்றும் யோசிக்காமல் அவுட் கொடுத்திருந்தார். ஆனால், அவரோ அது அவுட் இல்லை என மிகவும் உறுதியாக இருந்தார். எனவே 3வது நடுவரிடம் ரிவ்யூவ் கேட்டார். ரிவ்யூவில் பந்து காலில் பட்டது தெளிவாக இருந்ததால், மூன்றாம் நடுவரும் அதை அவுட் என அறிவித்தார்.
ஐதராபாத் அணி ரன்கள் சேர்க்க போராடி வந்த அந்த நேரத்தில் 36 வயதான அனுபவ வீரர் ஜாதவ் ரிவ்யூவை இப்படி வேஸ்ட் செய்து விட்டாரே என ரசிகர்கள் கடுமையாக விமர்ச்சித்தனர். மேலும், ஒரு அதிரடி வீரர் இப்படி செய்யலாமா என்பது போன்று கமெண்டுகளை சமூக வலைத்தள பக்கங்களில் பதிவிட்டு வருகின்றார்.
ரசிகர்கள் தவிர, முன்னாள் வீரர் பிரைன் லாராவும் ஜாதவ்வின் இந்த தைரியமான ரிவ்யூ முடிவு குறித்து கிண்டலடித்துள்ளார். ஜாதவ் ரிவ்யூ கேட்ட சமயத்தில் கமெண்ட்டரி செய்து கொண்டிருந்த லாரா, "அந்த பந்தை எல்லாம் அவர் எதற்கு ரிவ்யூவ் செய்தார்?… நேரடியாக வெளியேறியிருக்க வேண்டும். ஆனால் நடுவர்களிடம் ரிவ்யூவ் கேட்டது ஆச்சரியமாக இருந்தது. அவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்பது புரியாமல் குழம்பியிருந்தேன்" என்று தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil