ஐ.பி.எல் பிளே ஆப் சுற்றுக்கு முதலில் தகுதி பெற்ற அணி குஜராத் டைட்டன்ஸ்-தான். இந்நிலையில் அது முதல் இடத்தில் உள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட் அணிகள் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் வெற்றிபெற்று பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளனர். குஜராத் டைட்டன்ஸ் அணிதான் பிளே ஆப் சுற்றுக்கு முதலில் தேர்வு செய்யபப்பட்ட அணி. இந்நிலையில் தரவரிசைப் பட்டியலில் சி.எஸ்.கே அணி 17 புள்ளிகளுடன் இரண்டாம் நிலையில் உள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும் 17 புள்ளிகளுடன் இருந்தாலும், நெட் ரன் ரேட் குறைவாக இருப்பதால் இரண்டாம் இடத்தை பிடிக்க முடியவில்லை.
இதனால் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தேர்வாகும் மூன்றாவது அணி ஆகும். ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிதான் 4 வது இடத்தில் இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை விட ரன் ரேட் அளவில் இதுதான் முன்னிலையில் உள்ளது. குஜராத் டைட்டஸ் உடன் நடைபெறும் போட்டியில் ராயல் சாலஞ்சரஸ் பெங்களூரு அணி வெற்றிபெற்றால், நிச்சயமாக இந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறும். ஆனால் அதிக புள்ளிகளுடன் வெற்றி பெற வேண்டும். இதுவே மும்பை இந்தியன்ஸ் அணி சன் ரைஸ் ஹைதராபாத் அணியுடன் தோல்வியடைந்தால், ராயல் சாலஞ்சரஸ் பெங்களூரு அணி வெறும் வெற்றி பெறுவதே அந்த அணியை பிளே ஆப் சுற்றுக்கு கொண்டு செல்லும்.
இந்நிலையில் ராஜஸ்தான் அணிக்கு இனி எந்த போட்டியும் இல்லை. இதனால் மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் தோற்றால் மட்டுமே அதனால் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முடியும்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“