IPL 2024 playoff scenarios: 17-வது ஐ.பி.எல். (இந்தியன் பிரீமியர் லீக் - 2024) டி-20 கிரிக்கெட் திருவிழா இந்திய மண்ணில் கடந்த மார்ச் 22 தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில்நேற்று செவ்வாய்க்கிழமை இரவு டெல்லியில் நடந்த லீக் போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் மோதின. மிகவும் பரபரப்பாக அரங்கேறிய இந்த ஆட்டத்தில் டெல்லி கேப்பிடல்ஸ் 19 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL playoff scenarios explained after Lucknow Super Giants loss to Delhi Capitals: Five teams battle for two spots
இந்நிலையில், நடப்பு சீசனுக்கான லீக் சுற்றில் இன்னும் 6 ஆட்டங்கள் மட்டுமே எஞ்சியுள்ள நிலையில், அடுத்த சுற்றான பிளே-ஆஃப்க்கு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் ஆகிய இரண்டு அணிகள் அதிகாரப்பூர்வமாக தகுதி பெற்றுள்ளன. குஜராத் டைட்டன்ஸ், பஞ்சாப் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் ஆகிய மூன்று அணிகளும் பிளே-ஆஃப் சுற்றில் இருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளன.
பிளே-ஆஃப் சுற்றில் மீதமுள்ள 2 இடங்களுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ், சன்ரைசர்ஸ் ஐதராபாத், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் டெல்லி கேபிடல்ஸ் உள்ளிட்ட 5 அணிகள் மத்தியில் கடும் போட்டி நிலவுகிறது.
இந்நிலையில், நடப்பு சீசனில் பிளே-ஆஃப்க்கு முன்னேற, போட்டா போட்டியில் இருக்கும் 5 அணிகளில் ஒவ்வொன்றும் என்ன செய்ய வேண்டும் என்பது இங்கு பார்க்கலாம்.
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (எல்.எஸ்.ஜி)
விளையாடிய போட்டிகள்: 13, புள்ளிகள்: 12, நெட் ரன்ரேட்: -0.787 | மீதமுள்ள போட்டிகள்: மும்பை இந்தியன்ஸ்
லக்னோ கடந்த சில ஆட்டங்களில் கண்ட தோல்வி அந்த அணிக்கு சரிவை தந்துள்ளது. குறிப்பாக, டெல்லி கேப்பிட்டல்ஸுக்கு எதிரான தோல்வி லக்னோவுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. அத்துடன், பிளே-ஆஃப்க்கு தகுதி பெறுவதையும் சாத்தியமற்றதாக ஆக்கியுள்ளது.
லக்னோ அணி மும்பைக்கு வான்கடே மைதானத்தில் நடக்கும் கடைசி லீக் ஆட்டத்தில் அவர்கள் மும்பை இந்தியன்ஸை எதிர்கொள்கிறார்கள். அந்தப் போட்டியில் அவர்கள் 200 ரன்கள் எடுத்து, 100 ரன்கள் வித்தியாசத்தில் மும்பையை வீழ்த்த வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு அடுத்த சுற்றுக்குத் தகுதி பெறுவதற்கான சிறிதளவு வாய்ப்பாவது கிடைக்கும். உண்மையில், கணித அடிப்படையில் லக்னோவுக்கு சாத்தியக் கூறுகள் இருந்தாலும், அந்த அணியின் தற்போதைய வாய்ப்பு பூஜ்ஜியத்திற்கு அருகில் தான் உள்ளது.
டெல்லி கேபிடல்ஸ் (டி.சி)
விளையாடிய போட்டிகள்: 14, புள்ளிகள்: 14, நெட் ரன்ரேட் : -0.377
டெல்லி கேப்பிட்டல்ஸ் லீக் சுற்றில் தனது அனைத்து ஆட்டங்களையும் முடித்து விட்டது. நேற்று செவ்வாயன்று நடந்த ஆட்டத்தில் லக்னோவை வீழ்த்தியதன் மூலம் 14 புள்ளிகளைப் பெற்று இப்போது அட்டவணையில் ஐந்தாவது இடத்தில் உள்ளது.
டெல்லி அணி பிளேஆஃப்க்குள் செல்ல சிறந்த வாய்ப்பு ஐதராபாத் அணி அவர்களின் மீதமுள்ள இரண்டு போட்டிகளில் தோல்விகளை சந்திக்க வேண்டும். மேலும், சென்னை அணி பெங்களூருவை வீழ்த்த வேண்டும். அத்துடன், லக்னோ மீதமுள்ள ஒரு போட்டியில் தோற்க்க வேண்டும். வெற்றி பெற்றால் கூட நெட் ரன்ரேட்டில் டெல்லியை முந்தி விடக் கூடாது.
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (ஆர்.சி.பி)
விளையாடிய போட்டிகள்: 13, புள்ளிகள்: 12, நெட் ரன்ரேட்: 0.387 | மீதமுள்ள போட்டி: சென்னை சூப்பர் கிங்ஸ்
சென்னை சூப்பர் கிங்ஸுக்கு எதிராக ஆர்.சி.பி-க்கு இன்னும் ஒரு போட்டி உள்ளது. இப்போட்டி வருகிற சனிக்கிழமை (மே 18 ஆம் தேதி) பெங்களூரு அணியின் சொந்த மைதானமான எம். சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது.
இந்தப் போட்டி ஆர்.சி.பி-க்கு கட்டாயம் வெல்ல வேண்டிய போட்டியாகும். இதில் அவர்கள் வெற்றி பெற்றாலும், மற்ற அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும். அவர்கள் ஐதராபாத் மற்றும் லக்னோ அணிகள் மீதமுள்ள 2 போட்டிகளில் குறைந்தபட்சம் ஒன்றிலாவது தோற்க வேண்டும் என்று நினைப்பார்கள். எந்தவொரு சூழ்நிலையிலும், அவர்கள் சென்னை அணியை (0.528) நல்ல நெட் ரன்ரேட் வித்தியாசத்தில் தோற்கடிக்க போராடுவார்கள்.
மற்ற அணிகளின் முடிவுகள் தங்கள் வழியில் சென்றால், சென்னை அணியை விட சிறந்த நெட் ரன்ரேட்டுடன் இருக்கும் ஆர்.சி.பி ஐ.பி.எல் பிளே-ஆஃப்க்கு தகுதி பெறுவதற்கான நல்ல வாய்ப்பு அமையும்.
சென்னை சூப்பர் கிங்ஸ் (சி.எஸ்.கே)
விளையாடிய போட்டிகள்: 13, புள்ளிகள்: 14, நெட் ரன்ரேட்: 0.528 | மீதமுள்ள போட்டி: ஆர்.சி.பி
சென்னை அணி 13 போட்டிகளில் விளையாடி 14 புள்ளிகள் மற்றும் 0.528 என்கிற நெட் ரன் ரேட்டைப் பெற்றுள்ளது. ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு எதிரான அவர்களின் கடைசிப் போட்டியில், சென்னை அணி வலுவான நெட் ரன்ரேட்டுடன் வெற்றி பெற்றால் பிளே ஆஃப்க்குள் நுழைந்துவிடும்.
இருப்பினும், ஆர்.சி.பி-க்கு எதிராக சென்னை அணி வெற்றி பெறத் தவறினால், அவர்கள் மற்ற அணிகளின் முடிவுகளுக்காக காத்திருக்க வேண்டும். சன்ரைசர்ஸ் ஐதராபாத் அல்லது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளில் ஏதேனும் ஒன்றில் தோல்வியடைந்து, 16 புள்ளிகளுக்குக் கீழே தங்கள் வாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்.
கூடுதலாக சென்னை அணி தோல்வியுற்றால், நெட் ரன்ரேட் அடிப்படையில் ஆர்.சி.பி-க்கு மேல் தங்களை தக்கவைக்க அவர்களின் தோல்வியின் போது நெட் ரன்ரேட் அடிவாங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மேலும், ஐதராபாத் அல்லது லக்னோ ஆகிய இரண்டும் 14 அல்லது அதற்கும் குறைவான புள்ளிகளுடன் முடிவடைந்தால், சென்னை மற்றும் ஆர்.சி.பி ஆகிய இரண்டும் தலா 14 புள்ளிகளுடன் தகுதி பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது
சன்ரைசர்ஸ் ஐதராபாத் (எஸ்.ஆர்.எச்)
விளையாடிய போட்டிகள்: 12, புள்ளிகள்: 14, நெட் ரன்ரேட்: 0.406 | மீதமுள்ள போட்டிகள்: குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ்
ஐதராபாத் அணிக்கு குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணிகளுக்கு எதிராக மீதமுள்ள இரண்டு போட்டிகள் உள்ளன. இவை இரண்டும் மே 16 மற்றும் 19 ஆம் தேதிகளில் அந்த அணியின் சொந்த மைதானமான ஐதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளது.
தற்போதைய நிலையில், பிளேஆஃப்க்கு தகுதி பெற ஐதராபாத் அணி இந்த போட்டிகளில் வெற்றிகளைப் பெறுவதை இலக்காகக் கொண்டுள்ளது. லக்னோ அணியுடன் ஒப்பிடும் போது ஐதராபாத் அணியின் சிறப்பான நெட் ரன்ரேட் அவர்களுக்கு கணிசமான வாய்ப்பை வழங்குகிறது. மேலும் அவர்களின் மீதமுள்ள இரண்டு ஆட்டங்களில் ஒரு வெற்றியை மட்டும் பெறுவது ஐ.பி.எல் பிளேஆஃப்க்கு அவர்களின் தகுதியை உறுதிப்படுத்த போதுமானதாக இருக்க வேண்டும்.
இரண்டு வெற்றிகள் ஐதராபாத் அணியை புள்ளிகள் பட்டியலில் முதல்-இரண்டு இடங்களுக்குள் முடிக்க உதவக்கூடும். இருப்பினும், அவர்கள் அந்த இரண்டு போட்டிகளிலும் தோல்வியுற்றால், அவர்களின் பிளேஆஃப் வாய்ப்புக்கு பின்னடைவு ஏற்படலாம். சென்னை, பெங்களூரு அணிகள் இரண்டும் நெட் ரன்ரேட் அடிப்படையில் புள்ளிகளில் முன்னேறலாம்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“