Advertisment

தோனிக்குப் பிறகு முதல்முறை... ரிஷப் பண்ட்டுக்கு டார்கெட் வைக்கும் சி.எஸ்.கே!

டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டை மெகா ஏலத்தில் வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர்வமாக உள்ளது என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் புரிந்துகொள்கிறது.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
IPL Retentions 2025 CSK eye Rishabh Pant for life after MS Dhoni tamil news

பண்ட் ஏலத்தில் இறங்கினால், அவருக்காக ஒரு பெரிய தொகையை சென்னை அணி ஒதுக்க வேண்டும். ஒருவேளை ரூ. 20 கோடிக்கு மேல் செலவிட வேண்டும் என சி.எஸ்.கே நிர்வாகம் கணக்குப்போட்டுள்ளது.

10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் இந்தாண்டு நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மெகா ஏலத்திற்கு முன்பு தக்கவைக்கும் வீரர்களை அறிவிக்கும் காலக்கெடு இன்று வியாழக்கிழமை (அக்.31) முடிவடைகிறது. 

Advertisment

சென்னை அணி கடந்த காலங்களில், முக்கிய வீரர்களை தக்கவைத்துக் கொண்டது. கழற்றி விட்ட வீரர்களை கூட ஏலத்தில் முன்வந்து வாங்கியது. ஆனால், தற்போது எம்.எஸ். தோனியை அன்கேப்டு வீரராக தக்கவைக்கிறது சி.எஸ்.கே. தோனி தனது கிரிக்கெட் வாழக்கையில் கடைசி காலக் கட்டத்தில் இருக்கிறார். மேலும், உடற்தகுதி பிரச்சனைகளுக்கு எதிராகவும் அவர் போராடி வருகிறார். இதனால், அணியை முன்னோக்கி கொண்டு செல்ல சி.எஸ்.கே-வுக்கு ஒரு புதிய முகம் தேவை.

இந்நிலையில், டெல்லி கேபிட்டல்ஸ் அணியின் கேப்டன் ரிஷப் பண்ட்டை மெகா ஏலத்தில் வாங்க சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஆர்வமாக உள்ளது என்பதை இந்தியன் எக்ஸ்பிரஸ் புரிந்துகொள்கிறது. மேலும், அதற்கேற்ப அணியில் வீரர்களை தக்கவைத்துக்கொள்ளும் உத்தியை கையாண்டு வருகிறது. 

தற்போதைய நிலையில், சி.எஸ்.கே அணி நிர்வாகம் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், மதீஷா பத்திரனா மற்றும் தோனியை தக்கவைத்துக்கொள்வதில் உறுதியாக உள்ளது. அதேபோல, ரவீந்திர ஜடேஜாவை அவர்கள் தக்கவைப்பார்களாக என்பது, தக்கவைப்பு காலக்கெடு முடியும் போது தான் தெரிய வரும். 

பண்ட் ஏலத்தில் இறங்கினால், அவருக்காக ஒரு பெரிய தொகையை சென்னை அணி ஒதுக்க வேண்டும். ஒருவேளை ரூ. 20 கோடிக்கு மேல் செலவிட வேண்டும் என சி.எஸ்.கே நிர்வாகம் கணக்குப்போட்டுள்ளது. எனவே, குறிப்பிடத்தக்க ஏல தொகையை கொண்டு செல்வதற்கான வழிகளை அவர்கள் யோசித்து வருகின்றனர். அந்த முயற்சியை நோக்கி, அவர்கள் ஜடேஜாவை ஏலத்தில் விடுவித்து, ரைட் டு மேட்ச் (ஆர்.டி.எம்) விருப்பத்தைப் பயன்படுத்தி அவரை திரும்ப வாங்கலாம்.

டி-20-களில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, டி20 பேட்ஸ்மேனாக ஜடேஜாவின் வரம்புகள் அனைத்தும் தெளிவாகத் தெரிகிறது. அவர் ஏலத்திற்கு வந்து, அவர்கள் ஆர்.டி.எம்-ஐப் பயன்படுத்தினால், வழக்கமான அவரது  தக்கவைப்புத் தொகையை விட குறைவாக செலவாகும். 2018 ஆம் ஆண்டில் டுவைன் பிராவோ மற்றும் ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகியோரை சென்னை அணி இப்படித்தான் தக்கவைத்தது. 

இருப்பினும், விசுவாசம் மற்றும் ஜடேஜாவின் அணியுடன் உள்ள உணர்ச்சித் தொடர்பைக் கருத்தில் கொண்டு, சி.எஸ்.கே அவரை இன்னும் நெருக்கமாக பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டு தோனியுடன் தக்க வைத்துக் கொள்ள முடியும்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Chennai Super Kings Ipl Ms Dhoni Rishabh Pant
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment