/indian-express-tamil/media/media_files/2024/10/30/oPgKhSFL4PfjiRNeuShZ.jpg)
2022 சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ், அவர்கள் தக்கவைக்க இருக்கும் 5 வீரர்களை இறுதி செய்துள்ளது. அதன்படி, கேப்டன் சுப்மன் கில்லுடன் தொடர முடிவு செய்துள்ளது.
10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் இந்தாண்டு நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மெகா ஏலத்திற்கு முன்பு தக்கவைக்கும் வீரர்களை அறிவிக்க நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளது.
இந்நிலையில், தங்களது அணியில் தக்க வைக்க இருக்கும் வீரர்கள் குறித்து ஒவ்வொரு ஐ.பி.எல் அணியும் முடிவு செய்திருக்கும் இறுதிப் பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த வகையில், ஐ.பி.எல் தொடரில் இதுவரை ஒருமுறை கூட சாம்பியன் பட்டம் வெல்லாத ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி தனது மார்க்கீ வீரராக விராட் கோலியை தக்கவைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக தி இந்தியன் எக்ஸ்பிரஸ் அறிந்துள்ளது.
ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL Retentions 2025: Royal Challengers Bengaluru to retain Virat Kohli; Shubman Gill among 5 players set to stay in Gujarat Titans
ஆர்.சி.பி அணி கோலியுடன் தொடரும் முடிவை. எடுத்திருப்பது ஆச்சரியப்படுவதற்கில்லை. ஏனெனில், கோலி என்கிற ஒருவரை நம்பி தான் அந்த அணி இருக்கிறது. அவர் கிரிக்கெட் உலகில் தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை உருவாக்கி வைத்துள்ளார். கோலியைத் தவிர, ஆர்.சி. பி அணி ரஜத் படிதாரையும் தக்கவைத்துக் கொள்ள வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், 2022 சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அவர்கள் தக்கவைக்க இருக்கும் 5 வீரர்களை இறுதி செய்துள்ளது. அவர்கள் கேப்டன் சுப்மன் கில், சாய் சுதர்ஷன் மற்றும் ரஷித் கான் ஆகியோரை தக்கவைக்க உள்ளார்கள். மேலும், ஷாருக் கான் மற்றும் ராகுல் தெவாடியா ஆகியோர் கேப்டட் பிரிவில் தக்கவைக்கப்பட உள்ளனர். அதாவது டேவிட் மில்லர், மேத்யூ வேட், விருத்திமான் சாஹா, முகமது ஷமி மற்றும் கேன் வில்லியம்சன் போன்ற பெரிய வீரர்கள் ஏலத்தில் இறங்க உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.