Advertisment

IPL retentions 2025: ஷ்ரேயாஸ், ரசலை கழற்றி விடும் கொல்கத்தா? திலக் வர்மாவை தக்கவைக்குமா மும்பை?

ஐ.பி.எல் தொடரில் நடப்பு சாம்பியனாக வலம் வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மெகா ஏலத்திற்கு முன்னதாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை கழற்றி விட முடிவு செய்துள்ளது.

author-image
WebDesk
New Update
IPL retentions 2025 Shreyas Iyer and Andre Russell not for KKR Will MI retain Tilak Varma tamil news

ஐ.பி.எல் ஏல வரலாற்றில் மிகவும் அதிக தொகைக்கு (ரூ. 24.75 கோடி) வாங்கப்பட்ட மிட்சல் ஸ்டார்க்கையும் கொல்கத்தா அணி கழற்றி விட முடிவு செய்துள்ளது.

10 அணிகள் பங்கேற்கும் 18-வது ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2025) மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் நடைபெற உள்ளது. இந்த போட்டிக்கான வீரர்களின் மெகா ஏலம் இந்தாண்டு நவம்பர் கடைசி வாரத்தில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மெகா ஏலத்திற்கு முன்பு தக்கவைக்கும் வீரர்களை அறிவிக்க நாளை ஒரு நாள் மட்டுமே உள்ளது.

Advertisment

ஆங்கிலத்தில் படிக்கவும்: IPL retentions 2025: No Shreyas Iyer and Andre Russell for KKR? Will MI retain Tilak Varma?

இந்நிலையில், தங்களது அணியில் தக்க வைக்க இருக்கும் வீரர்கள் குறித்து ஒவ்வொரு ஐ.பி.எல் அணியும் முடிவு செய்திருக்கும் இறுதிப் பட்டியல் தற்போது வெளியாகி இருக்கிறது. அந்த வகையில், ஐ.பி.எல் தொடரில் நடப்பு சாம்பியனாக வலம் வரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி, மெகா ஏலத்திற்கு முன்னதாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரை கழற்றி விட முடிவு செய்துள்ளது. அவருக்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையேயான பேச்சு வார்த்தையில் சரியான முடிவு எட்டப்படவில்லை என்பதை 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' புரிந்துகொள்கிறது.

ஸ்ரேயாஸ் ஐயரை கடந்த 2022 இல் ரூ. 12.25 கோடிக்கு கொல்கத்தா அணி வாங்கியது. இருப்பினும், காயம் காரணமாக 2023 சீசன் முழுவதையும் அவர் தவறவிட்டார். அவரது தலைமையிலான கொல்கத்தா அணி 2022 இல் புள்ளிகள் பட்டியலில் 7வது இடத்தைப் பிடித்தது. அவர் 2024 இல் அவர் மீண்டும் அணிக்கு திரும்பிய நிலையில், அந்த சீசனில் சாம்பியன் பட்டத்தை வென்றது. கொல்கத்தா அணிக்காக 29 ஆட்டங்களில் ஆடியுள்ள 34.18 சராசரி மற்றும் 140.04 ஸ்ட்ரைக் ரேட்டில் 752 ரன்கள் எடுத்துள்ளார். 

2012 இல் கொல்கத்தா அணியுடன் இணைந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்ட்ரே ரசலை இம்முறை அந்த அணி நிர்வாகம் கழற்றி விட முடிவு செய்துள்ளது. இதேபோல், கடந்த சீசனுக்கு முன்னதாக நடைபெற்ற மினி ஏலத்தில். ஐ.பி.எல் ஏல வரலாற்றில் மிகவும் அதிக தொகைக்கு (ரூ. 24.75 கோடி) வாங்கப்பட்ட மிட்சல் ஸ்டார்க்கையும் அந்த அணி கழற்றி விட முடிவு செய்துள்ளது. மாறாக ஏலத்தில் அவர்களை வாங்க முடிவு செய்துள்ளனர். 

ரசல் கடந்த சில சீசன்களில் தனது பேட்டிங்கில் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டுள்ளார். ஆனால், ஸ்டார்க் பவுலிங்கில் பெரும் பின்னடைவை சந்தித்தார். 14 ஆட்டங்களில் ஆடிய இடது கை வேகப்பந்து வீச்சாளரான அவர் 10.61 சராசரியில் 17 விக்கெட்டுகளை எடுத்தார்.

இதனிடையே,ரிங்கு சிங் மற்றும் ஹர்ஷித் ராணா (அன்கேப்ட்) ஆகியோரை தக்கவைக்க கொல்கத்தா அணி முடிவு செய்துள்ளது.

திலக் வர்மாவை தக்கவைக்குமா மும்பை?

தங்களது முக்கிய சீனியர் வீரர்களான ரோகித் சர்மா, ஹர்திக் பாண்டியா, சூர்யகுமார் யாதவ் மற்றும் ஜஸ்பிரித் பும்ரா ஆகியோரைத் தக்கவைக்க முடிவு செய்திருக்கும் மும்பை இந்தியன்ஸ் இப்போது திலக் வர்மாவை ஐந்தாவது வீரராகத் தக்கவைக்க ஆர்வமாக உள்ளது.

கடந்த இரண்டு சீசன்களில் அவரது அணி மோசமாக செயல்பட்டு இருந்தாலும், மும்பை அணிக்காக மிடில் ஆர்டரில் ஜொலித்தார். மும்பை அணி சிக்கலில் இருந்தபோது அவர் தொடர்ந்து சிறப்பாக செயல்பட்டார். மும்பை அணிக்காக 38 ஆட்டங்களில், ஆடிய அவர் 146.33 சராசரியில் 1156 ரன்கள் எடுத்தார். கூடுதலாக, தனது ஆஃப்-ஸ்பின் மூலம் அணிக்கு கூடுதல் வலு சேர்க்கும்.

திலக் வர்மாவை தக்க வைத்துக் கொண்டால், மும்பை அணி தனது பர்ஸில் இருந்து 75 கோடி ரூபாயை இழக்க நேரிடும். 

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற  https://t.me/ietamil“

Ipl Ipl Cricket Mumbai Indians Kolkata Knight Riders
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment