சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் பேட்ஸ்மேன் ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு கடந்த மாதம் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவருக்கு ஞாயிற்றுக்கிழமை மேலும் 2 பரிசோதனைகள் செய்யப்பட உள்ளதால் அவர் ஐபிஎல் தொடரில் முதல் சில போட்டிகளில் விளையாட முடியாது என்று தெரியவந்துள்ளது.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் கடந்த ருதுராஜ் கெய்க்வாட், தீபக் சாஹர் என 2 வீரர்கள் உள்பட 13 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது. சாஹர் உள்பட 11 பேர் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்ததையடுத்து, அவர்களுக்கு நடத்தப்பட்ட 2 பரிசோதனைகளிலும் தொற்று இல்லை என்று உறுதியானது. இதையடுத்து, அவர்கள் பயிற்சியை தொடங்கியுள்ளனர்.
சி.எஸ்.கே அணியின் சி.இ.ஓ கே.எஸ். விஸ்வநாதன் ஞாயிற்றுக்கிழமை பிடிஐ செய்தி நிறுவனத்திடம் கூறுகையில், “கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு விதிமுறைகளின்படி, ருதுராஜ் கெய்க்வாட் திங்கள்கிழமையும் செவ்வாய்க்கிழமையும் 2 பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளார். இந்த பரிசோதனைகளில் அவருக்கு கொரோனா தொற்று நெகட்டிவ் என்று முடிவு வந்தால், அவர் சி.எஸ்.கே. அணி தங்கியுள்ள ஹோட்டலுக்கு திரும்புவார். அணியைச் சேர்ந்த மற்ற உறுப்பினர்களுக்கு பரிசோதனையில் நெகட்டிவ் என்று முடிவு வந்ததைத்தொடர்ந்து அவர்கள் மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளனர்” என்று தெரிவித்துள்ளார்.
தீபக் சாஹருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. முன்னதாக சி.எஸ்.கே. வீரர் சுரேஷ் ரெய்னா, தனிப்பட்ட காரணங்களுக்காக இந்த ஐபிஎல் தொடரில் இருந்து விலகினார். அதனால், ருதுராஜ் கெய்க்வாட், சுரேஷ் ரெய்னாவுக்கு மாற்றாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சி.எஸ்.கே. ருதுராஜ் ஞாயிற்றுக்கிழமை, திங்கள்கிழமை ஆகிய 2 நாட்கள் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
ருதுராஜ் கெய்க்வாட்டைப் பொறுத்தவரை, சி.எஸ்.கே கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நெறிமுறையைப் பின்பற்றும், மேலும், அவருக்கு கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து குணமடைந்தால், அவரது உடற்தகுதியைக் கண்டறிய இருதய மற்றும் நுரையீரல் செயல்பாடு சோதனைகளை செய்ய வேண்டியிருக்கும்.
அவர் ஒரு வாரத்திற்குப் பிறகுதான் அணியில் தேர்வு செய்ய வாய்ப்பு உள்ளது. அதாவது செப்டம்பர் 19ம் தேதி மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான போட்டிகளிலும், இன்னும் சில போட்டிகளிலும் அவர் விளையாட முடியாத நிலை ஏற்படும்.
ஆஸ்திரேலிய வீரர்கள் இங்கிலாந்திலிருந்து வந்த பிறகு, அவர்கள் 6 நாள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். ஆஸ்திரேலிய அணி வீரர்கள், ஸ்டீவ் ஸ்மித், டேவிட் வார்னர் ஆகியோர் இங்கிலாந்தில் பாதுகாப்பாக இருந்திருந்தாலும், ஐபிஎல் தொடருக்காக ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு வரும்போது அவர்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று சி.எஸ்.கே அணியின் பந்துவீச்சு பயிற்சியாள சைமன்ஸ் கூறினார்.
இங்கிலாந்துக்கு அணிக்கு எதிரான 3வது மற்றும் இறுதி ஒருநாள் போட்டி முடிந்த பின்னர், ஸ்மித் (ராஜஸ்தான் ராயல்ஸ்), வார்னர் (சன்ரைசர்ஸ் ஹைதராபாத்) மற்றும் ஆஸ்திரேலியா அணியின் ஜோஷ் ஹேசில்வுட் (சிஎஸ்கே) ஆகியோர் இங்கிலாந்திலிருந்து நேராக ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு செல்கின்றனர். இங்கிலாந்தில் நடைபெறும் கிரிக்கெட் தொடர் முழுவதும் அவர்கள் பாதுகாப்பான சூழலில் இருந்தனர்.
சைமன்ஸ், தொற்று தடுப்பு நெறிமுறைகளில் எந்தவிதமான நெகிழ்வும் இருக்காது என்றும், ஆஸ்திரேலிய வீரர்கள் தங்கள் அணிகளுடன் இணைவதற்கு முன்பு குறைந்தபட்சம் 6 நாட்கள் தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டியிருக்கும் என்று கூறினார்.
கிரிக்கெட்டில் நடத்தை என்ற இணையதளத்தில், கட்டுரை எழுதிய சைமன், “இது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும், அவர்கள் 6 நாட்கள் சுய தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும். மேலும், அவர்கள், எங்களுடன் அணியில் இணைவதற்கு முன்பு, முதல், மூன்றாவது மற்றும் ஆறாவது நாட்களில் கொரோனா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டு நெகட்டிவ் ரிப்போர்ட்டை அளிக்க வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “அவர்கள் அனைத்தும் அவர்களின் தற்போதைய உயிர்-பாதுகாப்பான சூழலில் இருந்து நம்முடைய சூழலுக்கு மாறுவார்கள் என்று நாங்கள் நம்பியிருந்தோம். ஆனால், புரிந்துகொள்ளக்கூடிய எந்தவொரு நெகிழ்வும் இருக்காது என்று தெரிகிறது. எம்.எஸ்.தோனி தலைமையிலான எங்கள் புத்திசாலித்தனமான இந்திய வீரர்களைத் தவிர, ஷேன் வாட்சன், ஃபாஃப் டு பிளெசிஸ் மற்றும் லுங்கி ஜிடி ஆகியோர் முழுமையாக பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். அதனால், அணியில், திறமைக்கு பஞ்சமில்லை.” என்று கூறினார்.
அபுதாபியில் ஐபிஎல் தொடர் 13 வது சீசன் தொடங்குவதற்கு 2 நாட்களுக்கு முன்னதாக செப்டம்பர் 17ம் தேதி ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர்கள் ஐக்கிய அரபு எமிரேட்டுக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சிஎஸ்கே வீரர்கள் ஹோட்டல் அறைகளில் இருந்து வெளியேறும்போதெல்லாம் ஸ்மார்ட் ஹெல்த் டிராக்கிங் சாதனத்தை அணிய வேண்டும் என்று சைமன்ஸ் கூறினார்.
“நாங்கள் எங்கள் ஹோட்டல் அறைகளை விட்டு வெளியேறும்போதெல்லாம் எங்கள் கழுத்தில் அணிய வேண்டிய கண்காணிப்பு சாதனங்கள் எங்களுக்கு வழங்கப்பட்டன. ஆனால், எங்கள் பிசியோதெரபிஸ்ட் அவற்றை 'கைக்கடிகாரங்களாக' மாற்றுவதில் மிகவும் ஆக்கப்பூர்வமாக இருந்தார். அதனால், குறைந்தபட்சம் அதை தடையாக உணரவில்லை” என்று தென்னாப்பிரிக்காவின் முன்னாள் பயிற்சியாளர் கூறினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.